Don't Miss!
- News இரட்டை இலை.. புது சிக்கல்.. விடாமல் துரத்தும் ஓபிஎஸ் டீம்.. தேர்தல் ஆணையத்திற்கு புகழேந்தி அவசர மனு!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
டிவியில் ஒளிப்பரப்பாக இருக்கு தனுஷோட கர்ணன் படம்... எந்த சேனல்ல தெரியுமா?
சென்னை : நடிகர் தனுஷ் உள்ளிட்டவர்களின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் கர்ணன்.
அசுரன் படத்தை தொடர்ந்து இந்த படமும் அவருக்கு சிறப்பாக கைகொடுத்தது.
நரகாசூரன் ஓடிடி ரிலீஸ் தேதி அப்டேட்... ரசிகர்கள் குஷி!
இந்நிலையில் இந்த படம் விரைவில் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்ணன் படம்
நடிகர் தனுஷ் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படத்தை தொடர்ந்து இவரது நடிப்பில் கர்ணன் படம் வெளியானது. உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இந்த படம் வெளியான நிலையில், வசூல்ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.
சிறப்பான பாடல்கள்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு இந்த படத்தை தயாரித்திருந்தார். தனுஷ், லால், ரஜிஷா விஜயன், கௌரி கிஷன், யோகிபாபு உள்ளிட்டவர்களின் நடிப்பில் வெளியான இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் சிறப்பாக அமைந்திருந்தன.
கைப்பற்றிய ஜி தமிழ்
தென்மாவட்டங்களின் சாதிய பிரச்சினைகளை மையமாக வைத்து உருவாகியிருந்த இந்த படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் கடந்த மே மாதம் 14ம் தேதி வெளியானது. இந்நிலையில் இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை ஜி தமிழ் தொலைக்காட்சி கைப்பற்றியிருந்தது.
பிரத்யேக வீடியோ
இந்நிலையில் இந்த படம் விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாக ஜி தமிழ் தொலைக்காட்சி அறிவித்துள்ளது. வாள் தூக்கி கர்ணன் வருவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இதுகுறித்த பிரத்யேக வீடியோவையும் வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தையொட்டி இந்த படம் ஒளிபரப்பாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.