Thalaivan Thalaivi Box Office: மாமியார், நாத்தனார் கொண்டாடும் வெற்றி.. தலைவன் தலைவி அதிகாரப்பூர்வ வசூல்!

சென்னை: நடிகர் சூர்யா, பிரியங்கா மோகன் நடிப்பில் கடைசியாக பாண்டிராஜ் இயக்கிய எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் பெரிதாக கல்லா கட்டவில்லை. விஜய் சேதுபதி, நித்யா மேனனை வைத்து அவர் இயக்கியுள்ள தலைவன் தலைவி திரைப்படம் முதல் 3 நாட்களில் தமிழ்நாட்டிலேயே பெரிய தொகையை வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

விஜய் சேதுபதியின் ஏஸ் திரைப்படத்தையும் ரவி மோகன் உடன் இணைந்து நித்யா மோகன் நடித்த காதலிக்க நேரமில்லை படத்தையும் தியேட்டரில் பார்க்க தகுதியான படங்கள் இல்லை என மக்களே முடிவு செய்து ஒதுக்கிவிட்டார்களா? என்கிற கேள்வி தான் தலைவன் தலைவி படத்தின் வசூல் வேட்டையை பார்த்தால் ஒட்டுமொத்த கோலிவுட்டுக்கு பெரிய கேள்வியாக எழுந்து நிற்கும்.

Blockbuster Thalaivan Thalaivi Day 3 Official Box Office out now
Photo Credit:

முதல் நாளே 4 கோடிக்கும் அதிகமான வசூல் வேட்டையை நடத்திய இந்த படம் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்த நிலையில், கணவன், மனைவியை மட்டுமின்றி மாமியார், நாத்தனார் என ஒட்டுமொத்த கூட்டத்தையும் தியேட்டருக்கு வரவழைத்து வெற்றிநடை போட்டு வருகிறது.

விஜய் சேதுபதிக்கு ஜாக்பாட்: கடந்த ஆண்டு மகாராஜா திரைப்படம் விஜய் சேதுபதிக்கு வெற்றிப் படமாக அமைந்தது போல, இந்த ஆண்டு அவருக்கு தலைவன் தலைவி படம் ஜாக்பாட்டாக அமைந்துள்ளது. திங்கட்கிழமையான இன்றும் பல திரையரங்குகளில் மக்கள் படத்தை பார்க்க டிக்கெட்டுகளை புக் செய்து வருகின்றனர் என்றும் தொடர்ந்து ஸ்க்ரீன்கள் அதிகரிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மகாராஜா போலவே: கடந்த ஆண்டு நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் 150 கோடி வசூல் செய்தது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் அந்த படம் மிகப்பெரிய லாபத்தை அள்ளியது. அந்த படத்தை போலவே மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஒரு 100 கோடி கிளப் படமாக தாராளமாக தலைவன் தலைவி மாறுவதற்காக வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறுகின்றனர்.

அதிகாரப்பூர்வ வசூல்: sacknilk வெப்சைட்டிலேயே முதல் 3 நாட்கள் தலைவன் தலைவி படத்தின் கணிப்பு வசூல் 20 கோடியை கடந்திருந்தது. இந்நிலையில், தமிழ்நாட்டில் மட்டுமே தலைவன் தலைவி திரைப்படம் அதிகாரப்பூர்வமாக 25 கோடி ரூபாய் வசூலை அள்ளியிருப்பதாக சத்ய ஜோதி நிறுவனம் அறிவித்துள்ளது. தெலுங்கில் தலைவன் தலைவி திரைப்படம் இந்த வாரம் ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், மேலும், வசூல் அதிகரிக்கும் என்றும் டோலிவுட்டிலும் இந்த படம் கல்லா கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X