STR 48: அதிரடியாக அப்டேட் கொடுத்துள்ள ராஜ்கமல் பிலிம்ஸ்... இணைகிறதா கமல் - சிம்பு கூட்டணி?
சென்னை: சிம்புவின் பத்து தல திரைப்படம் வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இதனைத் தொடர்ந்து சிம்பு நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் என சொல்லப்பட்டது.
இந்நிலையில், ராஜ்கமல் தயாரிக்கும் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை மாலை வெளியாகிறது.
இது சிம்புவின் STR 48 அல்லது கமலின் KH 233 படத்தின் அப்டேட்டாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜ்கமல் பிலிம்ஸ் அப்டேட்
விக்ரம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டுக்குப் பின்னர் அடுத்தடுத்து பட தயாரிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார் கமல். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்த் விக்ரம் திரைப்படம் 600 கோடிக்கும் மேல் வசூலித்தது. இதனையடுத்து சிவகார்த்திகேயன் - ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் ஒரு படத்தை தயாரிக்கிறது ராஜ்கமல் பிலிம்ஸ். மேலும், இந்த வரிசையில் கமலின் KH 234 திரைப்படமும் இடம்பிடித்துள்ளது. இந்நிலையில், நாளை ( மார்ச் 08) மாலை 6.30 மணிக்கு ஒரு அப்டேட் வெளியாகும் என ராஜ்கமல் பிலிம்ஸ் அறிவித்துள்ளது.

BLOOD and BATTLE
ராஜ்கமல் பிலிம்ஸின் இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. BLOOD and BATTLE என்ற கேப்ஷனுடன் மினி டீசரையும் வெளியிட்டுள்ளது. ஃபையரிங் மோடில் ஒரு நீளமான வாள் தரையிறங்குவதைப் போல உருவாகியுள்ள இந்த டீசர், தெறி மாஸ்ஸாக உள்ளது. இது சிம்புவின் STR 48 படத்திற்கான அப்டேட்டாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதனையடுத்து டிவிட்டரில் STR 48 ட்ரெண்டாகி வருகிறது

சிம்பு - கமல் காம்போ
சிம்பு நடித்துள்ள பத்து தல படத்தின் டீசர் கடந்த வாரம் வெளியானது. கிருஷ்ணா இயக்கியுள்ள இந்தப் படத்தில் சிம்பு ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கேரக்டரில் நடித்துள்ளார். ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படம் வரும் 30ம் தேதி ரிலீஸாகிறது. இதனைத் தொடர்ந்து சிம்புவின் அடுத்த படம் என்ன என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்பட்ட நிலையில், தற்போது ராஜ்கமல் பிலிம்ஸின் ட்விட்டர் வைரலாகி வருகிறது. ஏற்கனவே விக்ரம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சிம்புவும் ஸ்பெஷல் கெஸ்ட்டாக கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

புதிய கூட்டணியில் STR 48
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தேசிங்கு பெரியசாமி. துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்த இந்தப் படம், சூப்பர் ஹிட் அடித்தது. இதனையடுத்து இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஒரு கதை கூறியிருந்தார். ஆனால், இது டேக்-ஆஃப் ஆகாததால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்தை தான் கமல் தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் மூலம் தயாரிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், சிம்புவுடன் முதன் முறையாக அனிருத்தும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கமலின் 233வது திரைப்படம்?
அதேநேரம் ராஜ்கமல் பிலிம்ஸ் வெளியிட்டுள்ள இந்த அப்டேட், கமலின் 233வது படமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் கமல், அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் KH 234 கமிட் ஆகியுள்ளார். இதனிடையே கமலின் 233வது திரைப்படமும் உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்தை ஹெச் வினோத் இயக்கவுள்ளதாகவும் சில தினங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகின. அதனால், நாளை வெளியாகவுள்ள ராஜ்கமல் பிலிம்ஸின் அப்டேட், கமல் - வினோத் இணையும் படம் பற்றியதாக இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











