Kavin: நயன்தாராவோடு அடுத்த படம்.. லிப்லாக் சீனுக்கு கவின் க்ரீன் சிக்னல்! ஒருவேளை இருக்குமோ?

சென்னை: நடிகர் கவின் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக உள்ளார். தனித்துவமான கதைத்தேர்வினால் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும் கவின், வளர்ந்து வரும் நடிகர்களில் கவனிக்கப்படும் நடிகர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். டாடா படத்திற்குப் பின்னர் அவரது மார்க்கெட் கிராஃப் உயர்ந்துகொண்டே போகின்றது. ஹரீஸ் கல்யாண் வேண்டாம் என விலகிய ஸ்டார் படத்தில் இணைந்தது மட்டும் இல்லாமல், அந்தப் படத்தின் வசூல் வெற்றி கவினுக்கு மேலும் உதவியது எனலாம். தற்போது இவரது நடிப்பில் வெளியாகியுள்ள ப்ளடி பெக்கர் படமும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி படமாக மாறியுள்ளது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு கவின் அளித்த பதில்கள் பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

நடிகர் கவின் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்களில் ஒருவர். விஜய் டிவியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்தார். அதன் பின்னர் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றினார். பிக்பாஸ் சீசன் 3இல் போட்டியாளராக பங்கேற்ற கவின், இறுதி நாள் வரை வீட்டில் இருக்கும் திறமை இருந்தும், பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறினார். மேலும் அவர் வெளியேறுகின்றேன் எனக் கூறும்போது போட்டியாளர்களுக்கு மட்டும் இல்லாமல், ரசிகர்களுக்குமே அதிர்ச்சியாகத்தன் இருந்தது.

bloody beggar kavin lip lock kiss

மேலும் அந்த சீசனில் போட்டியாளராக இருந்த இலங்கையைச் சேர்ந்த லாஸ்லியாவுடன் இவர் காதலில் இருப்பதாகவும் கிசுகிசுக்கள் அடிப்பட்டது. ஆனால் நிகழ்ச்சி முடிந்த பின்னரும்கூட அவர்கள் இருவரும் இது தொடர்பாக எதுவுமே கூறவில்லை. மேலும் இதுவரை ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்களிலேயே பெரும்பாலான ரசிகர்களால் அதிகம் பாரட்டப்பட்ட மற்றும் அதிக ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்த பிக்பாஸ் சீசனாக கவின் இருந்த மூன்றாவது சீசன் இருந்தது. இதனாலேயே இவர்மீது அதிக ஊடக வெளிச்சம் விழுந்தது.

bloody beggar kavin lip lock kiss

ப்ளடி பெக்கர்: தற்போது இவரது நடிப்பில் ப்ளடி பெக்கர் படம் வெளியாகியுள்ளது. படத்தினை இயக்குநர் நெல்சன் தயாரிக்க, அவரிடம் நீண்ட ஆண்டுகளாக உதவி இயக்குநராக இருந்த சிவபாலன் முத்துக்குமார் இயக்கியுள்ளார். படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆனது. படம் ஏற்கனவே ஓடிடியில் நல்ல விலைக்கு விற்றுவிட்டதாக கூறப்படுகின்றது. இதனால் தியேட்டரில் வசூல் ஆகும் தொகைகள் அனைத்துமே லாபக்கணக்கில்தான் சேரும் என்ற பேச்சு அடிபடுகின்றது.

வசூல்: இந்நிலையில் படம் இதுவரை அதாவது முதல் நான்கு நாட்களில் ரூபாய் 12 கோடிகள் வரை உலகம் முழுவதும் வசூல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது. அப்படியான நிலையில், படம் வசூல் ரீதியாகவே வெற்றிப்படமாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் படத்தின் புரோமோசன் மற்றும் வெற்றி விழா நிகழ்ச்சியை தனியார் தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்தது. அதில் கலந்து கொண்ட கவின் பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

bloody beggar kavin lip lock kiss

லிப்லாக்: குறிப்பாக கவின் எந்த நடிகையுடன் லிப்லாக் காட்சியில் நடிக்க ஆசை என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த கவின், அதுபோல எல்லாம் யாரும் இல்லை. கதைக்கு தேவைப்படுகின்றது என்றால், யாருடன் வேண்டுமானாலும் லிப்லாக் காட்சியில் கட்டாயம் நடிப்பேன் எனத் தெரிவித்துள்ளார். இவரது இந்த பதில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. கவின் தனது அடுத்தப் படத்தில் நயன்தாராவோடு நடிக்கவுள்ளார். இந்நிலையில் இதுபோன்ற கேள்விக்கு கவின் அளித்துள்ள பதில் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X