Bloody Beggar Box Office: பிச்சைக்கார கெட்டப் நெல்சனுக்கு தேவைப்படாது.. ப்ளடி பெக்கர் வசூல் எவ்வளவு?

சென்னை: ஜெயிலர் படம் வெற்றியானால் கவினின் ப்ளடி பெக்கர் படத்தை தயாரிக்கிறேன் என வாக்கு கொடுத்த இயக்குநர் நெல்சன் தயாரிப்பாளராக மாறி ஃபிலமண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தை உருவாக்கினார். அதில், தயாரிக்கப்பட்ட முதல் படமாக கவின் நடித்த ப்ளடி பெக்கர் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று வெளியானது.

விஜய் டிவியில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த சிவகார்த்திகேயனை தொடர்ந்து அதே டிவியில் இருந்து வந்த கவினும் நேற்று மோதினர். ஏற்கனவே சிவகார்த்திகேயன் படத்துக்கு கவினும் கவின் படத்துக்கு சிவாவும் வாழ்த்துகளை தெரிவித்து ஆரோக்கியமான போட்டியாகவே இதை அணுகினர்.

bloody beggar box office kavin

மேலும், பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சிக்கு சிவகார்த்திகேயன் மற்றும் கவின் தனித்தனியே சென்று படத்திற்கான புரமோஷனையும் செய்துள்ளனர். இந்த ஆண்டு கவின் நடித்த ஸ்டார் திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில், தீபாவளிக்கு வெளியாகி உள்ள ப்ளடி பெக்கர் படமும் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், அந்த படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..

பிக் பாஸ் ஹீரோ: இந்த ஆண்டு பிக் பாஸ் ஹீரோக்களுக்கு பெரிய ஜாக்பாட் தான். ஹரிஷ் கல்யாண் லப்பர் பந்து படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை பெற்றார். பிக் பாஸ் 3வது சீசனில் போட்டியாளராக கலந்துக் கொண்ட கவின் தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார். நட்புன்னா என்னானு தெரியுமா படம் கவினுக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. பிக்பாஸ் வீட்டிற்கு சென்று விட்டு திரும்பி வந்த நிலையில், அவர் நடித்த பேய் படமான லிஃப்ட் அவரை தூக்கி விட டாடா மற்றும் ஸ்டார் படங்கள் கவினை ஒரு ஸ்டாராகவே மாற்றியுள்ளன.

காமெடி கலாட்டா: ப்ளடி பெக்கர் படத்தில் பிச்சைக்காரனாக கவின் நடித்துள்ளார். ஆரம்பத்தில் ஒரு 20 நிமிடங்கள் அவர் பிச்சைக்காரனாக செய்யும் சேட்டைகளை படமாக்கிய விதம் சூப்பர். அதன் பின்னர், அந்த அரண்மனைக்கு சென்று அங்கே ஒரு பிரச்சனையில் அவர் சிக்கிக் கொண்டு அங்கே நடக்கும் கலாட்டா ஆரம்பத்தில் செட்டாக கொஞ்சம் டைம் எடுத்துக் கொண்டாலும் இரண்டாம் பாதியில் காமெடி கலாட்டாவாக தீபாவளிக்கு தியேட்டருக்குச் செல்லும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து வெளியே அனுப்புகிறது.

முதல் நாள் வசூல்: நெல்சன் தயாரிப்பில் சிவபாலன் இயக்கத்தில் கவின், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ள ப்ளடி பெக்கர் திரைப்படம் முதல் நாளில் இந்தியளவில் ஒட்டுமொத்தமாக 2.2 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. கம்மி பட்ஜெட்டில் இந்த படத்தை தயாரித்துள்ள நெல்சன் தீபாவளி விடுமுறைக்குள் போட்ட காசை எடுத்து விடுவார் என்றும் அவருக்கு அந்த பிச்சைக்கார கெட்டப்பை கவின் கொடுக்கவில்லை என்றும் கூறுகின்றனர்.

ஸ்டார் வசூலை முந்துமா?: கவின் நடித்த ஸ்டார் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும், 20 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டியது. ப்ளடி பெக்கர் திரைப்படம் தீபாவளி விடுமுறையை டார்கெட் செய்து வெளியாகி உள்ள நிலையில், 20 கோடிக்கும் அதிகமான வசூலை அள்ளும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X