டிராபிக் சிக்னலில் சாவுக்குத்து.. ப்ளடி பெக்கர் டீசர் வேறலெவல்.. தீபாவளி வின்னர் யாருன்னு தெரியலையே!

சென்னை: தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக கவின் உருவாகி வரும் நிலையில், அவர் நடித்துள்ள ப்ளடி பெக்கர் திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து ஏகப்பட்ட ரசிகைகளை கவர்ந்த கவின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பணப்பெட்டியுடன் வெளியேறினார்.

லாஸ்லியா மற்றும் கவின் காதல் தான் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை ரசிகர்கள் மத்தியில் நெருக்கமாக கொண்டு சென்றது. பிக் பாஸ் சீசன் 8ல் காதலர்களான அர்னவ் மற்றும் அன்ஷிதா என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறார்களோ தெரியவில்லை.

kavin bloody beggar diwali 2024

வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ள கவினின் ப்ளடி பெக்கர் படத்தின் டீசரை தற்போது கவின் வெளியிட்டுள்ளார். அந்த டீசரை பார்த்த ரசிகர்கள் டார்க் காமெடின்னா இதுதான் பாஸ் என வயிறு குலுங்க சிரித்து வருகின்றனர்.

பிச்சைக்காரனாக கவின்: ஸ்டார் படத்தில் முகத்தில் அடிபட்டு பார்க்கவே கொடூரமானவராக நடித்த கவின் அடுத்து அதைவிட மோசமான தோற்றத்தில் அசல் பிச்சைக்காரனாகவே கெட்டப் போட்டு நடித்துள்ளார். விஜய் ஆண்டனி கூட பிச்சைக்காரன் படத்தில் பெரிய பணக்காரன் அம்மாவுக்காக பிச்சை எடுப்பது போல நடித்திருப்பார். ஆனால், கவினை பார்த்தால் ரியல் பிச்சைக்காரனே தோற்றுவிடும் அளவுக்கு பர்ஃபார்மன்ஸ் மற்றும் லுக்கில் பட்டையை கிளப்புகிறார்.

ப்ளடி பெக்கர் டீசர் எப்படி இருக்கு?: ப்ளடி பெக்கர் ப்ரோமோவை பார்க்கும் போதே வித்தியாசமான காமெடி படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டீசரிலும் அந்த காமெடியை இயக்குநர் சிவபாலன் சரியாக கடத்தியுள்ளார். ஆட்டோ டிரைவரிடம் சிக்னலில் காலில்லாதவர் போல கவின் பிச்சை எடுக்க, காலையில் இருந்து சவாரியே போகலப்பா என ஆட்டோ டிரைவர் சொல்கிறார். எனக்கு மட்டும் கால் இருந்தால் என கவின் பாவமாக சொன்னதும் ஆட்டோ டிரைவர் 10 ரூபாய் காயினை போடுகிறார். அதே நேரத்தில் சாவு ஊர்வலம் ஒன்று வர அதன் மேளச் சத்தத்தை கேட்டு விட்டு அங்கே செல்லும் கவின் தனது கால்களை நீட்டி எழுந்து குத்தாட்டம் போடுவதை பார்த்து ஆட்டோக்காரன் அசிங்க அசிங்கமாக திட்டும் காட்சிகள் டீசராக வெளியாகி உள்ளன.

தீபாவளி வின்னர் யாரு?: வரும் தீபாவளிக்கு கவினின் ப்ளடி பெக்கர், சிவகார்த்திகேயனின் அமரன் மற்றும் ஜெயம் ரவியின் பிரதர் என 3 படங்கள் மோதுகின்றன. இதில், தீபாவளி வின்னராக யார் மாறப் போகின்றனர் கோலிவுட்டின் துப்பாக்கி உண்மையிலேயே யாரிடம் கிடைக்கப் போகிறது என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X