ஆடியோ வெளியீட்டு விழாவில் ஒளிபரப்பான ஆபாச படம்
பாலிவுட் படத்தில் பாடல் வெளியீட்டு விழாவின் போது ஆபாச படத்தின் கிளிப்பிங்ஸ் ஒளிபரப்பாகி அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
‘டெசி கட்டே' என்ற இந்தி படத்தை ஆனந்த் குமார் தயாரித்து இயக்கியிருக்கிறார். இதில் சுனில் ஷெட்டி, அஸுதோஷ் ராணா, டியா பாஜ்பாய், சாஸா ஆஹா, அகில் கபூர் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தின் இசை மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழா சமீபத்தில் மும்பையில் நடைபெற்றது.
படத்தின் பாடல்கள் மற்றும் டிரெயிலர் திரையில் ஓடிக் கொண்டிருக்கும்போது திடீரென்று நடுவில் ஆபாச பட காட்சிகளும் ஓடியதாம்.. நிகழ்ச்சிக்கு வந்திருந்த அத்தனை பேரும் இதனை பார்த்து அதிர்ச்சியாகிவிட்டார்களாம்.
இந்த ஆபாச வீடியோ வந்திருந்த அனைத்து தொலைக்காட்சி கேமிராக்களிலும் பதிவாகியிருக்கிறதாம். பாடல்களையும், டிரெயிலரையும் டிவிடியில் காப்பி செய்த தொழில் நுட்ப அலுவலர் ஒருவர் செய்த தவறினால்தான் இது நிகழ்ந்துவிட்டதாக படத்தின் தயாரிப்பாளர் சார்பில் கூறப்படுகிறது.
இத்தனை பெரிய கூட்டத்தில் ஒளிபரப்பவுள்ள வீடியோவில் நடுப் பகுதியில் யாராவது ஆபாச வீடியோ காட்சிகளை தெரியாமல் திணிக்க முடியுமா.. இது அந்தப் படத்திற்கு எதிராக பின்னப்பட்ட சதி வலையாகவும் இருக்கலாம்..." என்றும் மும்பை மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


Click it and Unblock the Notifications











