ஒரே கெட்ட வார்த்தை.. மிஷ்கின் தான் கோடம்பாக்க சிவாஜி கிருஷ்ணமூர்த்தி.. விளாசிவிட்ட ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், தினகரன் இயக்கத்தில் குரு சோம சுந்தரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் பாட்டில் ராதா. ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ள இந்தப் படம் வரும் 24ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி, நேற்று அதாவது ஜனவரி 18ஆம் தேதி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் மற்றும் நடிகர், மிஷ்கின் ஆபாச வார்த்தைகள் கலந்து பேசினார். இது தொடர்பாக, மிஷ்கினைக் கண்டித்தும், மிஷ்கினை யாருமே கண்டிக்கவில்லையே என கண்டித்து, ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

அவரது, எக்ஸ் பக்கத்தில், “ நேற்று பா.ரஞ்சித் தயாரிப்பில் குரு சோமசுந்தரம் நடித்த பாட்டில் ராதா டிரைலர் வெளியீடு, மேடையேறிய ஆபாச பேச்சாளர் மிஷ்கின் தன்னை பெரிய குடிகாரன் என்றும்.. வெற்றி மாறன், அமீர் குடிப்பதில்லை என்றும் கூறினார். பிறகு இளையராஜாவை ஒருமையில் பேசிவிட்டு.. பலமுறை 'ஓ'வில் ஆரம்பிக்கும் மூன்றெழுத்து வார்த்தையை ஓயாமல் உச்சரித்தார். அதனினும் மோசமான சில வார்த்தைகளும் வந்து விழுந்தன. மேடையில் இருந்த படக்குழுவினர், இயக்குனர்கள் மற்றும் எதிரில் அமர்ந்திருந்த பலரும் சிரித்து மகிழ்ந்தனர்.

blue satai maran misskin bottle radha

ஏன்: இவர்களில் பா.ரஞ்சித், வெற்றிமாறன், லிங்குசாமிகளும் அடக்கம். இவருக்கு ஆயிரம் புத்தகங்கள் படித்த அறிவும், உலக சினிமா ஞானமும் இருந்தென்ன பயன்? பத்திரிக்கையாளர்கள் நிகழ்வில்.. அதுவும் பெண்கள் இருக்கும் அரங்கில் இப்படி ஆபாசமாக பேசுவதை இவர் வாடிக்கையாக கொண்டிருப்பதை சக இயக்குனர்கள் பல்லை இளித்தபடி உற்சாகப்படுத்துவது ஏன்?

புறக்கணிப்பு: இளம் தலைமுறைக்கு இப்படி ஒரு மூன்றாம்தர முன்னுதாரண நபரால் என்ன பயன்? இந்த நானும் ரவுடிதான் நபரை ஏன் அதே மேடையில் யாரும் கண்டிப்பதில்லை? இப்படி இவர் முன்பு பேசும்போது.. அந்நிகழ்ச்சிகளை பத்திரிக்கையாளர்கள் புறக்கணித்து இருந்தால்.. இந்நேரம் அமைதியாகி இருப்பார். ரோபோ சங்கர், கூல் சுரேஷ் அல்லது ஏதேனும் சிறுபடத்தை சேர்ந்த ஒருவர் இப்படி பேசும்போது பத்திரிக்கையாளர்கள் ஓங்கி குரலெழுப்பி கண்டிப்பதுண்டு. மன்னிப்பும் கேட்க சொல்வார்கள். ஆனால் மிஷ்கினை மட்டும் எதுவும் கேட்காமல் இருப்பது ஏன்? மன்னிப்பு கேட்க வைத்திருக்கலாமே?

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி: இவர் பேசும் கெட்ட வார்த்தைகளை ம்யூட் கூட செய்யாமல் அப்படியே யூட்யூபில் அப்லோட் செய்வது ஏன்? நாகரீக விமர்சனம் பற்றி பாடமெடுக்கும் தனஞ்செயன், திருப்பூர் சுப்ரமணியம் போன்றோர், மிஷ்கினின் ஆபாச பேச்சுகள் குறித்து வாய் திறக்காமல் எந்த பொந்தில் அமுங்கி உள்ளனர்? திரையுலக சங்கங்கள் இந்த self made pseudo வஸ்தாதை கண்டிக்க இன்னும் எத்தனை வருடங்கள் ஆகும்? நானும் ரவுடிதான் என மேடைக்கு மேடை காமடி செய்யும் இவர் கோடம்பாக்க சிவாஜி கிருஷ்ணமூர்த்திதான். இன்னும் சில வருடங்களில்.. சரக்கை போட்டுவிட்டு லேட்நைட் அரசியல் பேச்சாளராக வெற்றி அடைவது உறுதி” என பதிவிட்டுள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. மேலும், ப்ளூ சட்டை மாறன் கூறுவது சரிதான் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X