விக்ரம் என்ன பெரிய மல்டிவர்ஸ்.. சீரியலில் எப்பவோ சங்கமம் பண்ணிட்டாங்க.. ப்ளூசட்டை மாறன் கலாய்!
சென்னை: கமல்ஹாசனின் விக்ரம் படத்துக்கு தொடர்ந்து மீம்களை போட்டுத் தாக்கி வருகிறார் ப்ளூ சட்டை மாறன்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில், சூர்யா, காயத்ரி, ஷிவானி நாராயணன், மைனா நந்தினி, மகேஷ்வரி, சந்தான பாரதி, நரேன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கைதி படத்தில் நடித்துள்ள அர்ஜுன் தாஸ், ஹரிஷ் உத்தமன், நரேன் உள்ளிட்டோரும் கைதி படத்தின் சில காட்சிகளும் விக்ரம் படத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரமில் கைதி
விக்ரம் படத்தை பார்பதற்கு முன்னர், கைதி படத்தை பார்த்து விட்டு வாங்க என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கடைசி நேரத்தில் ட்வீட் போட்டு இருந்தார். விக்ரம் படத்தை பார்த்த ரசிகர்களுக்கும் கைதி படத்தின் சில காட்சிகளும், டில்லியின் சில குறிப்புகளும் கிடைத்து இருந்தன. கைதி 2 மற்றும் விக்ரம் 3க்கு ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

லோகேஷ் யூனிவர்ஸ்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள விக்ரம் படத்தில் கைதி பட நடிகர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், இது லோகி யூனிவர்ஸ் என்றும் மல்டிவர்ஸ் என்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மாஸ்டர் படத்தையும் தளபதி 67ல் இணைத்து விடுங்கள் என்றும் கோரிக்கை எழுந்து வருகிறது.

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்
விக்ரம் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனத்தையும் பாசிட்டிவ் விமர்சனத்தையும் கலந்து கட்டி ஒரே குழப்பத்தில் விமர்சித்து உள்ளார் ப்ளூ சட்டை மாறன் என அவரது விமர்சனத்தை பார்த்த நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். இந்நிலையில், விக்ரம் படம் குறித்த மீம்களாக எடுத்துப் போட்டு வருகிறார் ப்ளூ சட்டை மாறன்.

சீரியலில் மல்டிவர்ஸ்
கைதியில வந்தவங்க விக்ரம்ல வராங்க இதுக்கு பேருதான் மல்டிவர்ஸ் கான்செப்ஃட்னு அம்மாவிடம் மகன் சொல்ல, இது என்னடா பெரிய மல்டிவர்ஸ், பாக்கிய லட்சுமி வீட்டுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் வந்தாங்க பாருன்னு சீரியலில் நடக்கும் சங்கமங்களை வைத்து உருவாக்கப்பட்ட மீமை ஷேர் செய்து பதிலுக்கு விக்ரம் படத்தை ட்ரோல் செய்து வருகிறார் ப்ளூ சட்டை மாறன்.

பீஸ்ட்ல கூட
விக்ரம் படத்திற்கு முன்பாகவே விஜய்யின் பீஸ்ட் படத்தில் மஹாலியும் அவரது அசிஸ்டன்ட்டையும் இடம்பெற செய்து இயக்குநர் நெல்சன் மல்டிவர்ஸ் கான்செப்ட் செய்து விட்டார் என விஜய் ரசிகர்கள் இன்னொரு பக்கம் டிரெண்ட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இதெல்லாம் பாக்கியராஜ் அவசர போலீஸ் 100 படத்திலேயும், எஸ்.ஏ. சந்திரசேகர் ஒன்ஸ் மோர் படத்தில் சிவாஜி போர்ஷன்லயும் பண்ணிட்டாங்கன்னும் ட்ரோல்கள் பறக்கின்றன.

54 கோடி வசூலா
இந்தியா முழுவதும் 34 கோடி வசூல் செய்துள்ளதாக ஆரம்பத்தில் தகவல் வந்த நிலையில், வெளிநாடுகளில் மிகப்பெரிய வசூல் வேட்டையை கமல்ஹாசனின் விக்ரம் படம் நடத்தி வருவதாகவும், உலகம் முழுவதும் 54 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. முதல் வார முடிவிலேயே 100 கோடி வசூலை விக்ரம் படம் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











