Blue Sattai: "இவர்தான் ரோலக்ஸ்... ஆள விடுங்க சாமி... டுபாக்கூர் யூனிவர்ஸ்” தெறித்து ஓடிய ப்ளூ சட்டை
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ LCU படமாக உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் வரும் அர்ஜுனின் ஹெரால்டு தாஸ் கேரக்டர் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்த ஹெரால்டு தாஸின் மகன் தான் விக்ரம் படத்தின் ரோலக்ஸ் கேரக்டர் என LCU ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இதனைப் பார்த்த ப்ளூ சட்டை மாறன், "ஆளை விடுங்கடா சாமி. நீங்களும், உங்க டுபாக்கூர் யூனிவர்ஸூம்" என ஒரே ட்வீட்டில் LCU-ஐ காலி செய்துவிட்டார்.
LCU ஒரு டுபாக்கூர் யூனிவர்ஸ்
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களைத் தொடர்ந்து விஜய்யின் லியோவை இயக்கினார் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கியுள்ள 5 படங்களில் கைதி, விக்ரம், லியோ இந்த மூன்றும் LCU-ன் கீழ் உருவாகியுள்ளது. முக்கியமாக விஜய் - லோகேஷ் கூட்டணியில் உருவாகியுள்ள முதல் LCU படம் லியோ என்பது குறிப்பிடத்தக்கது.

லியோ LCU படம் என்பதால் கைதி படத்தில் இருந்து டில்லி, விக்ரம் படத்தில் வந்த அமர், சந்தானம், ரோலக்ஸ் போன்ற கேரக்டர்கள் கேமியோவாக என்ட்ரி கொடுத்திருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், ஜார்ஜ் மரியான் கேரக்டர் மூலம் லியோ LCU படம் தான் என லீட் கொடுத்த லோகேஷ், கடைசி காட்சியில் கமல்ஹாசனின் வாய்ஸ் ஓவரை மட்டும் வைத்திருந்தார்.
அதேநேரம் லியோவில் அர்ஜுனின் ஹெரால்ட் தாஸ், சஞ்சய் தத்தின் ஆண்டனி தாஸ் கேரக்டர்கள் கவனம் ஈர்த்தன. இதில் ஆண்டனி தாஸின் மகன் தான் லியோ தாஸ் என்பதை கன்ஃபார்ம் செய்துவிட்ட லோகேஷ், அர்ஜுனின் ஹெரால்டு தாஸ் கேரக்டரில் செம்ம சஸ்பென்ஸ் வைத்துள்ளார். இதிலிருந்து லீடு எடுத்துள்ள LCU ரசிகர்கள், விக்ரம் படத்தில் மாஸ் காட்டிய ரோலக்ஸ் தான், ஹெரால்டு தாஸின் மகன் என வைரலாக்கி வருகின்றனர்.
அதுமட்டும் இல்லாமல் விஜய்யின் தங்கையாக நடித்த மடோனா செபாஸ்டியன் தான், கைதி டில்லி கேரக்டரில் நடித்த கார்த்தியின் மனைவி என்றும் கனெக்ட் செய்து வருகின்றனர். இதனால் லோகேஷின் LCU-ல் அடுத்து என்ன என்ற கேள்வி ரசிகர்களுக்கு ஹைப் கொடுத்துள்ளது. லோகேஷின் LCU ரசிகர்களின் அட்ராசிட்டியை பார்த்த ப்ளூ சட்டை மாறன் தெறித்து ஓடியுள்ளார்.
இதுபற்றி தனது டிவிட்டரில் போஸ்ட் போட்டுள்ள ப்ளூ சட்டை மாறன், "ஆளை விடுங்கடா சாமி. நீங்களும், உங்க டுபாக்கூர் யூனிவர்ஸூம்" என தெறிக்க விட்டுள்ளார். லியோ படத்தின் தோல்விக்கு காரணமே LCU தான் என விஜய் ரசிகர்கள் கதறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











