Blue Sattai: “LIC ஹைட்டு... தலைவன் தான் வெயிட்டு..” ரஜினி ரசிகரை துவம்சம் செய்த ப்ளூ சட்டை மாறன்

சென்னை: நேற்று வெளியான ஜெயிலர் படத்தை சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் FDFS காட்சிகள் இல்லையென்றாலும், 9 மணிக்கு ஷோவிற்காக ரசிகர்கள் இரவு முழுவதும் திரையரங்கில் காத்திருந்தனர்.

மேலும் ஜெயிலர் FDFS பார்த்துவிட்டு படம் குறித்து ரஜினி ரசிகர்கள் பேசிய வீடியோக்கள் ட்ரெண்டாகின.

அதில் ரஜினியின் 70ஸ் கிட்ஸ் ரசிகர் ஒருவரின் விமர்சனத்தை ப்ளூ சட்டை மாறன் பங்கமாக கலாய்த்துள்ளார்.

 Blue Sattai: Blue Sattai Maran Trolled Rajini Fans for Jailer Reactions

ரஜினி ரசிகரை துவம்சம் செய்த ப்ளூ சட்டை மாறன்: அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜெயிலர் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. சன் பிக்சர்ஸ் பேனரில் பிரம்மாண்டமாக உருவான இந்தப் படத்தை நெல்சன் இயக்கியுள்ளார், அனிருத் இசையமைத்துள்ளார். ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, மோகன்லால், சிவ ராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான காவாலா பாடல் வெளியானது முதலே ரஜினி ரசிகர்கள் அலப்பறை செய்து வருகின்றனர். அடுத்து 'ஹுக்கும் டைகர் கா ஹுக்கும்', 'ஜுஜுபி' ஆகிய பாடல்களும் அடுத்தடுத்து வெளியாகி ரஜினி ரசிகர்களுக்கு படம் மீதான ஹைப்பை அதிகப்படுத்தியது. அதேபோல், ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவும், அதில் சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து ரஜினி பேசியதும் செம்ம வைரலானது.

இதையெல்லாம் ரஜினி ரசிகர்கள் ஒருபுறம் கொண்டாடிக் கொண்டே இருக்க, இன்னொருபக்கம் ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து ட்ரோல் செய்துகொண்டே வந்தார். ஒருகட்டத்தில் ரஜினி VS ப்ளூ சட்டை மாறன் என்ற மோதல் டிவிட்டரையே அலற வைத்தது. இந்நிலையில் நேற்று ஜெயிலர் வெளியானது முதலே ரஜினியையும், அவரது ரசிகர்களையும் பங்கம் செய்து வருகிறார் ப்ளூ சட்டை மாறன். இப்போது அவரிடம் ரஜினியின் 70ஸ் கிட்ஸ் ரசிகர் ஒருவர் சிக்கிக்கொண்டு படாதப்பாடுபட்டு வருகிறார்.

 Blue Sattai: Blue Sattai Maran Trolled Rajini Fans for Jailer Reactions

ஜெயிலர் FDFS பார்த்துவிட்டு திரையரங்கில் இருந்து வெளியே வந்த ரசிகரிடம் படம் குறித்து கேட்கப்படுகிறது. அதற்கு அவரோ "நட்சத்திரத்த எண்ண முடியாது... தலைவர வெல்ல முடியாது... அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜெயிலர் பார்க்க கோயம்பேடு ரோகிணிக்கு வருகிறார்... திருச்செந்தூர்ல முருகரு... ரோகிணில ஜெயிலர்... அதேபோல் ஜெயிலர் படம் இல்ல மக்களுக்கு அது பாடம்" என சகட்டு மேனிக்கு அடித்து விடுகிறார்.

இதனை தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன், இவருதான் பனமரத்துல வவ்வாலா கிட் எனவும், ஜோபைடன் ஜெயிலர் பார்க்க வருவார்ன்னு சொல்லவே இல்லையே என்றும் கலாய்த்துள்ளார். மேலும், "ஆஸ்கர் விருதை காலில் போட்டு மிதிப்பான் என் தலைவரு" எனக் கூறிய ரசிகரிடம், அதெல்லாம் கொடுத்தான்யா தான் நடக்கும் எனவும் பங்கம் செய்துள்ளார். தொடர்ச்சியாக ரஜினியின் 70ஸ் கிட் ரசிகருக்கு ப்ளூ சட்டை மாறன் பதிலடி கொடுத்துள்ளது டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X