Don't Miss!
- News
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து தலீபான்கள் கருத்து.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- Lifestyle
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் தமனி சுவர்களில் அதிகளவு கொழுப்பு படிந்துள்ளதாம்... இது உயிருக்கே ஆபத்தாம்!
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
என்னது பாரி புரோட்டா கடையா? மேடையில் வெளுத்த ஆரியை மீம் போட்டு விளாசிய ப்ளூசட்டை மாறன்!
சென்னை: வலிமை, எதற்கும் துணிந்தவன், ராதே ஷ்யாம், மாறன் என வரிசையாக விமர்சித்து புதிய படங்களை கழுவி கழுவி ஊற்றி வருகிறார் ப்ளூ சட்டை மாறன்.
வலிமை படத்தை விமர்சித்ததில் இருந்தே அஜித் ரசிகர்களுக்கும் ப்ளூ சட்டை மாறனுக்கும் இடையே சமூக வலைதள சண்டை நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில், கள்ளன் பட விழாவில் பேசிய நடிகர் ஆரி, ப்ளூசட்டை மாறனை எச்சரித்த நிலையில், அவரை மறைமுகமாக ட்ரோல் செய்து மீம் போட்டுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
நீருக்கடியில் மோசமான உடையில் ஷாலு ஷம்மு... மாப்பிள்ளை பாக்குற நேரத்தில் என்ன இதெல்லாம் !

கசப்பு மருந்து
"மருத்துவர்கள் கசப்பு மருந்தை தருவது உங்கள் உடல் நலத்தை காப்பதற்குத்தான். அதுபோல யாம் சொல்லும் உண்மைகள் கசக்கத்தான் செய்யும். அது திரையுலக நலனுக்கே." என சமீபத்தில் வலிமை பட விமர்சனத்தால் அஜித் ரசிகர்களுடன் எழுந்த சண்டையை போக்க இப்படியொரு போஸ்ட் போட்டு, அடுத்ததாக எதற்கும் துணிந்தவன் விமர்சனம் போடப் போகிறேன் எனக் கூறியிருந்தார்.

ஜான் கொக்கன் எச்சரிக்கை
ப்ளூ சட்டை மாறன் அஜித்தின் வலிமை படத்தை விமர்சித்த நிலையில், நடிகர் அஜித்தின் நடன அசைவுகளை பற்றி பரோட்டாவிற்கு மாவு பிசைவது போல உள்ளது என்றும், அஜித்தை பஜன்லால் சேட் என்றும் கலாய்த்தது பல பிரபலங்களையும் ரசிகர்களையும் கடுப்பாக்கியது. அஜித்தின் தீவிர ரசிகரும் சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலியாக நடித்தவருமான ஜான் கொக்கன் மிக நீண்ட கடிதத்தை பதிவிட்டு ப்ளூசட்டை மாறனை எச்சரித்தார்.

மேடையில் விளாசிய ஆரி
பிக் பாஸ் 4வது சீசன் டைட்டில் வின்னரும் நடிகருமான ஆரி சமீபத்தில் நடந்த கள்ளன் பட விழாவில் வலிமை படத்தை விமர்சித்த ப்ளூ சட்டை மாறனை நேரடியாக எச்சரித்தது பெரும் பரபரப்பை கிளப்பியது. ப்ளூ சட்டை மாறன் எங்கு இருந்து வந்தார். எப்படி வந்தார் என்பதை நினைத்து பார்க்க வேண்டிய தருணம். பரோட்டா மாவு பிசைஞ்ச மாதிரி மூஞ்சி என்று சொல்வதெல்லாம் மிக பெரிய வன்மம் என ஆரி பேசியது கோலிவுட்டில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.

ப்ளூ சட்டை மாறன் பதிலடி
இந்நிலையில், நடிகர் ஆரி பேசியதற்கு மறைமுகமாக பதிலடி கொடுக்கும் விதமாக ப்ளூ சட்டை மாறன் ஒரு போட்டோ மீமை போட்டுள்ளார் என நெட்டிசன்கள் கமெண்ட் பக்கத்தில் குறிப்பிட்டு வருகின்றனர். "புரோட்டா பாரி பிரியாணி ஸ்டார்" என்கிற மீமை போட்டு ஆரியை மாறன் கலாய்த்துள்ளார் என்றும் ஆரியின் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை திட்டித் தீர்த்தும் வருகின்றனர்.