கேப்டன் விஜயகாந்த்தை விமர்சிக்க வீரம் உண்டா? விட்டு விளாசிய ப்ளூ சட்டை மாறன்.. யாரைத் தெரியுமா?
சென்னை: கடந்த சில வாரமாகவே ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தளத்தில் இயக்குநர், நடிகர் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், சீமான் குறித்து கடுமையாக விமர்சித்து வருகின்றார். அதற்கு காரணம், சீமான் பெரியார் குறித்து அவதூறான கருத்துக்களைக் கூறுவதும், மிகவும் மோசமாக விமர்சித்தும் வருகின்றார். இதற்கு அரசியல் தலைவர்கள் தொடங்கி திரைப்பிரபலங்கள் என பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதேபோல் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்திலும் விமர்சித்து வருகின்றார்.
இப்படியான நிலையில், பெரியார் குறித்து விமர்சிக்கும், சீமான், விஜயகாந்த் குறித்தும், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் குறித்தும் விமர்சிக்க வீரம் உண்டா என ப்ளூ சட்டை மாறன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில், " அண்ணனுக்கு திராவிடம் என்றாலே வெறியாகிவிடும். பெரியாரே ஒரு மண்ணுதான். அந்த பிம்பத்தை ஒழிக்காமல் ஓயமாட்டேன் என தினமும் கதறுகிறார். ஈரோடு தேர்தல் முடிந்ததும் பெரியார் சீசன் முடிந்துவிடும். ஒருவேளை இவர் கன்டினியூ செய்தாலும்.. மக்களுக்கு சலித்துவிடும். தங்கள் கட்சி பெயர்களில் திராவிடம் ஏனும் சொல்லை வைத்தவர்கள் எம்ஜிஆரும், கேப்டனும். இதுபோக.. பெரியாரைப்போல இவர்களும் தமிழர்கள் அல்ல என்பதது அண்ணன் மற்றும் அவரது தம்பிகளின் நிலைப்பாடு.

வீரம்: ஆகவே அடுத்தகட்டமாக இவர்களின் பிம்பத்தை நொறுக்க அண்ணனுக்கு வீரம் உண்டா? பெரியாரை திட்டியது போல...ஒருமாதம் எம்ஜிஆரையும், மறுமாதம் கேப்டனையும் திட்டி தீர்க்க திராணியுண்டா? மிச்சம் இருப்பது விஜய்தான். தனது கொள்கைத் தலைவர் பெரியார் என அறிவித்ததும்.. விஜய்யை கடித்து துப்பினார். அப்படி பேசியதால் தனது கூடாரம் காலியானதும்.. . தற்போது மீண்டும் 'தம்பி விஜய்' என பம்முகிறார். இது பெரியார் மண் அல்ல. பெரியாரே ஒரு மண்ணுதான் என சவுண்ட் விடும் அண்ணன் அதே ஆக்ரோசம் குறையாமல்... திராவிட பற்றாளர்களான இம்மூவரையும் வசைபாடினால்... மிச்சம் மீதி தம்பிகளும் கூடாரத்தை காலி செய்து விடுவார்கள். இம்மூவரின் தொண்டர்கள் மற்றும் அபிமானிகளின் ஓட்டும் கிடைக்காது. ஆகவே பெரியார் தாடியை பிடித்து தொங்கி மண்டையை உடைத்து கொண்டதே போதும். இவர்களை கடிக்க நினைத்தால்..ஒரு பல் கூட தேறாது. பாத்துக்கங்க" என பதிவிட்டுள்ளார்.

வீடியோ: தொடர்ந்து சில வாரங்களாக பெரியாரை இகழ்ந்து வரும் அண்ணன்... 2016 இல் பெரியார் மற்றும் எம்ஜிஆருக்காக நினைவு கூட்டம் நடத்தி அவர்களை புகழ்ந்த வீடியோ இது எனக் குறிப்பிட்டு ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். மேலும் அந்தப் பதிவோடு, சில கேள்விகளையும், முன் வைத்துள்ளார். அதில், " 1 பிரபாகரனை 2008 இல் சந்தித்த பிறகு பெரியார் ஆதரவு போக்கை கைவிட்டதாக தற்போது உருட்டி வருகிறீர்களே. பிறகெப்படி 2016 இல் பெரியாரை இப்படி பாராட்டி பேசினீர்கள்? திராவிடம், பெரியாருக்கு ஒதிராக பிரபாகரன் பேசிய ஒரே ஒரு ஆதாரம் காட்ட முடியுமா? ஆகவே பெரியார் பற்றி உங்களிடம் தவறான கருத்தை பிரபாகரன் சொன்னதாக நீங்கள் சொல்வது பச்சை பொய் என்பதற்கு இந்த வீடியோ ஆதாரம் ஒன்று போதாதா?

பிறக்க வாய்ப்பில்லை: 2 இந்த வீடியோவில் எம்ஜிஆரின் பாடலை பாடுகிறீர்கள். எம்ஜிஆர் திராவிட பற்றாளர் என தெரிந்தும் அவரை புகழ்ந்தது ஏன்? இதே எம்ஜிஆர்தான் அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா என்று பாடினார்? தனது கட்சியின் பெயரில் கூட திராவிடம் எனும் சொல்லையும் வைத்தாரே. நீங்கள் சரியான மாவீரன் என்றால்.. தற்போது பெரியாரை வசைபாடுவது போல.. திராவிட பற்றாளர் எம்ஜிஆரை ஓயாமல் ஒருவாரமாவது திட்டுங்கள் பார்க்கலாம். நேரத்துக்கு நேரம் நிறம் மாறுவதில் உங்களை மிஞ்ச ஒருவன் பிறந்துதான் வரவேண்டும். அப்படி ஒருவன் பிறக்கவும் வாய்ப்பில்லை" எனவும் பதிவிட்டுள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.



Click it and Unblock the Notifications











