களத்துல இறங்குங்க விஜய்.. இதெல்லாம் பண்ணையார்த்தனம்.. தளபதியை ரவுண்டு கட்டிய ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி தலைமை அலுவலகத்தில், தலைவர் நடிகர் விஜய் நிவாரண உதவிகளை வழங்கினார். நேரடியாக மக்களை சந்திக்காமல், கட்சி அலுவலகத்தில் நிவாரண உதவி வழங்கியது குறித்து கேள்வி எழுப்பி உள்ள ப்ளு சட்டை மாறன், இவரா மக்களுக்கான அரசியலை செய்யப்போகிறார் என தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வங்கக் கடலில் கடந்த வாரம் உருவான ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களும், புதுச்சேரியும் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளன. இந்த புயல் புதுச்சேரி மற்றும் மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என கூறப்பட்ட நிலையில், புயல் திசை மாறி, மரக்காணம் - புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது. இதனால்,புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பேய் மழை பெய்தது. இதுவரை இல்லாத அளவாக விழுப்புரம் மயிலத்தில் 51 செ.மீ மழை பதிவானது. பெரும்பாலான பகுதிகளில் சாலைகள், பாலங்கள், மின் கம்பங்கள், மின்மாற்றிகள் பொதுக் கட்டடங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளும் மற்றும் பொது மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளன.

புயல் நிவாரண உதவி: இந்நிலையில், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மத்திய சென்னையில் டி.பி. சத்திரம், அமைந்தகரை உள்ளிட்ட மக்களுக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் நிவாரண உதவிகளை வழங்கினார். சென்னை கிழக்கு கடற்கரைசாலையில் உள்ள பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி தலைமை அலுவலகத்தில் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு அரிசி, புது துணிகள் மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார். இதைத்தொடர்ந்து விஜய் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில், ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இதெல்லாம் பண்ணையார்த்தனம்: அதில்,மாநாட்டிற்கு நிலம் தந்த விவசாயிகளை விக்கிரவாண்டியில் சந்தித்து.. அந்த பகுதியில்.. விருந்தளிக்காமல்.. தனது பனையூர் கட்சி ஆபீஸ்க்கு வரவைத்தார் விஜய். இப்போது புயலால் பாதிக்கப்பட்ட மக்களையும் பல கிலோமீட்டர் பயணிக்க வைத்து தனது ஆபீஸில் நிவாரணம் வழங்குகிறார். இவரே நேரடியாக சென்றால்தானே கள நிலவரத்தையும், பாதிப்பையும் காணமுடியும்? இப்படி ஏழை மக்களை சிரமப்படுத்தி.. நீண்ட தூரம் பயணிக்கவைத்து.. தன் இடத்திற்கு வரவழைப்பது மன்னர் காலத்தில் கூட நடந்ததில்லை. இவரா மக்களுக்கான அரசியலை செய்யப்போகிறார்?தளபதியை ரவுண்டு கட்டி ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











