Kisi Ka Bhai Kisi Ki Jaan - கிசி கா பாய் கிசி கி ஜானை கிழித்து தொங்கவிட்ட ப்ளூ சட்டை மாறன்
சென்னை: Kisi Ka Bhai Kisi Ki Jaan (கிசி கா பாய் கிசி கி ஜான்) சல்மான் கான் நடித்திருக்கும் வீரம் ஹிந்தி ரீமேக்கான கிசி கா பாய் கிசி கி ஜான் படத்தை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கிழித்து தொங்கவிட்டிருக்கிறார்.
அஜித்தும், சிறுத்தை சிவாவும் இணைந்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என நான்கு படங்கள் பணியாற்றினர். இதில் விவேகம் தவிர மற்ற மூன்று படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக வீரம் படம் மெகா ஹிட்டானது. நீண்ட வருடங்கள் கழித்து அஜித் ஒரு கிராமத்து பின்னணியில் செய்த படம் என்பதால் அந்தப் படத்துக்கு ரசிகர்களிடையே நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது.

வீரம் ஹிந்தி ரீமேக்: கோலிவுட்டில் ஹிட்டான வீரம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் 'கட்டமராயுடு' என்ற பெயரிலும், கன்னடத்தில் தர்ஷன் நடிப்பில் 'ஒடியா' என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது ஹிந்தியில் ரீமேக்காகியிருக்கிறது வீரம் திரைப்படம். அப்படத்துகு கிசி கா பாய் கிசி கி ஜான் என பெயரிடப்பட்டுள்ளது. சல்மான் கான் படத்தை தயாரித்திருக்கிறார்.
சல்மான் கானின் புதிய அவதாரம்: ஹிந்தியில் ரீமேக்காகியிருக்கும் வீரம் படத்தில் சல்மான் கான் கதாநாயகனாக நடித்திருக்கிறார். பூஜா ஹெக்டே அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். படத்தின் பின்னணி இசையை கேஜிஎஃப் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரும், பாடல்களுக்கு ஹிமேஷ் ரேஷ்மயா, தேவிஸ்ரீ பிரசாத், ரவி பஸ்ரூ, சுக்பீர் சிங், பாயல் தேவ், அமல் மாலிக் என 6 இசையமைப்பாளர்களும் இசையமைத்திருக்கின்றனர்.
வெளியான படம்; சந்தித்த விமர்சனம்: இந்நிலையில் படம் இன்று வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் மோசமான விமர்சனங்களையே கொடுத்துவருகின்றனர். ஆக்ஷன் காட்சிகள் என்ற பெயரில் படத்தை கொத்து புரோட்டா வைத்திருக்கிறார்கள். ஒரு சீனில்கூட லாஜிக்கே இல்லை, வீரம் படத்தின் சாயல் ஒரு சீனில்கூட இல்லை, தெலுங்கு நடிகர் பாலைய்யாவுக்கே சல்மான் கான் டஃப் கொடுப்பார் போல என சமூக வலைதளங்களில் கழுவி ஊத்திவருகின்றனர்.

சும்மா விடுவாரா ப்ளூ சட்டை மாறன்: ரசிகர்களே படத்தை இப்படி கழுவி ஊத்தும்போது நல்ல படத்திலேயே குறைகளை கண்டுபிடிக்கும் ப்ளூ சட்டை மாறன் இந்த மோசமான படத்தை விட்டுவைப்பாரா. அவர் தன் பங்குக்கு கிசி கா பாய் கிசி கி ஜான் படத்தை கிழித்து தொங்க விட்டிருக்கிறார். அவர் தனது விமர்சனத்தில், "உயிரை கைல பிடிச்சிட்டு படம் பார்த்துட்டு இருந்தோம். பாக்க சகிக்கல. படம்தான் இப்படி இருக்குனா பாட்டு அதைவிட மோசம். ஒவ்வொரு ஃப்ரேம்லையும் 1000 பேர் ஆடிட்டு இருக்கானுங்க.
மெட்ரோவை ஸ்தம்பிக்க வைச்சிட்டாங்க: மெட்ரோ ரயில் சண்டை காட்சி ஒன்னு வருது. அதுல மெட்ரோ ரயிலையே ஸ்தம்பிக்க வெச்சிட்டாங்க. படத்துல ஜெகபதி பாபுதான் வில்லன். அவருக்கு மேல ஒரு வில்லன் இருகாரு. அப்போ படம் எந்த லட்சணத்துல இருக்குனு பாருங்க. படத்துல ஹீரோவட அறிமுக சீன்லாம் பார்த்தா படு கன்றாவியா இருக்கு. மேலேர்ந்து அவர் குதிப்பதை பார்த்தால் அவர் ஹீரோவா இல்லை சூப்பர் ஹீரோவானு குழப்பம் வரும். இது வீரம் ரீமேக்கா இல்லை வீரம் ஸ்பூஃபானு தெரியல. படத்துல ஒன்னுமே நல்லா இல்ல" என்றார்.


Click it and Unblock the Notifications











