என் படத்திற்கு தடை என்றதும் சந்தோஷப்பட்ட தயாரிப்பாளர் இவங்க தான்.. போட்டுடைத்த ப்ளூசட்டை மாறன்!

சென்னை:'ஆன்டி இண்டியன்' படத்திற்கு தணிக்கைக் குழு தடை விதித்ததும் இரு பிரபல தயாரிப்பாளர்கள் சந்தோஷப்பட்டு ட்வீட் போட்டதாக ப்ளூசட்டை மாறன் பிரஸ் மீட்டில் ஆதங்கப்பட்டு கூறியுள்ளார்.

ப்ளூசட்டை மாறனின் 'ஆன்டி இண்டியன்' படத்தின் தடையை விலக்கி நீதிமன்றம் யு/ஏ சான்றிதழ் கொடுக்க உத்தரவிட்டுள்ளது.

ஏகப்பட்ட சர்ச்சை கருத்துக்களை உள்ளடக்கி இந்த படம் உருவாகி உள்ளதாக முன்னதாக தணிக்கை குழு மற்றும் ரிவிஷன் கமிஷன் இந்த படத்தை அப்படியே வெளியிட மறுப்பு தெரிவித்த நிலையில், ப்ளூசட்டை மாறன் சட்டப் போராட்டத்தில் இறங்கினார்.

போல்டு மூவி

போல்டு மூவி

மலையாள திரைப்படங்கள் நல்ல படங்களாக வருகின்றன என்றும் தமிழ் சினிமாவில் நல்ல படங்கள் வரவில்லை என்றும் தான் தொடர்ந்து விமர்சிக்க காரணம் தமிழில் நிஜத்துக்கு அருகாமையில் சென்று படம் எடுக்க பலர் தயங்குவதால் தான் என பிரஸ் மீட்டில் பேசிய ப்ளூசட்டை மாறன் தனது படம் போல்டு மூவியாக வந்துள்ளதாக நீதிபதி பாராட்டியதாக கூறியுள்ளார்.

விருதுகள் கிடைக்கும்

விருதுகள் கிடைக்கும்

இந்த படம் ரிலீஸே ஆக தகுதியில்லை என தணிக்கை குழு தடை விதித்த நிலையில், ட்ரிபியூனல் அமைப்பிடம் முறையிடலாம் என நினைத்த எங்களுக்கு அந்த அமைப்பே இல்லாமல் செய்து விட்டனர். அதனால், வழக்கு தொடர்ந்து பல மாதங்கள் காத்திருந்த நிலையில், படத்தை பார்த்து விட்டு பல விருதுகள் கிடைக்கும் என நீதிபதி பாராட்டியதாக ப்ளூசட்டை மாறன் தெரிவித்துள்ளார்.

ஞானவேல் ராஜா சந்தோஷம்

ஞானவேல் ராஜா சந்தோஷம்

ப்ளூசட்டை மாறனின் படத்திற்கு தணிக்கை குழு தடை விதித்ததும் 'God is Great' என பிரபல தயாரிப்பாளர் ட்வீட் போட்டு சந்தோஷப்பட்டார். இன்னொருவர் டபுள் கிரேட் எனக் கூறினார் என பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய மாறனிடம் பத்திரிகையாளர்கள் யார் அந்த தயாரிப்பாளர் என கேட்க தயாரிப்பாளர் ஞானவேல் தான் 'God is Great' என போட்டு சந்தோஷப்பட்டார் என்று கூறினார்.

ரவீந்திரன்

ரவீந்திரன்

லிப்ரா தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர் ரவீந்திரன் 'Double Great' என ட்வீட் போட்டதாக கூறிய ப்ளூசட்டை மாறன் என் படத்துக்குனா பரவாயில்லை. இன்னொரு தயாரிப்பாளரின் படம் தானே இது என்கிற உணர்வு கூட அவர்களுக்கு இல்லை என இரு தயாரிப்பாளர்களின் பெயர்களையும் வெளிப்படையாக கூறி வருத்தம் தெரிவித்துள்ளார்.

கொண்டாடியது ஏன்

கொண்டாடியது ஏன்

பல தயாரிப்பாளர்களின் படங்களை பாரபட்சமே இல்லாமல் விமர்சனம் செய்த ப்ளூசட்டை மாறனுக்கு சினிமா துறையில் ஏகப்பட்ட எதிர் அணியினர் உள்ளனர். முன்னணி நடிகர்கள் படங்கள், நடிகைகள், மணிரத்னம் உள்ளிட்ட இயக்குநர்களை வம்படியாக கலாய்த்து தள்ளிய காரணத்தினாலே ப்ளூசட்டை மாறனின் படத்திற்கு தடை என்றதும் ஏகப்பட்ட நெட்டிசன்களும் சில சினிமா பிரபலங்களும் தங்களின் ரியாக்‌ஷன்களை வெளிப்படுத்தி இருந்தனர்.

விமர்சனம் செய்ய ரெடி

விமர்சனம் செய்ய ரெடி

ப்ளூசட்டை மாறனின் இந்த ட்வீட்டுக்கு கீழும் ஏகப்பட்ட நெட்டிசன்கள், உங்கள் படம் வரட்டும் நாங்கள் எல்லாம் விமர்சனம் செய்து கலாய்த்துத் தள்ள காத்திருக்கிறோம் என ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர். சில நெட்டிசன்கள் திட்டியும் வருகின்றனர்.

ஆதரவும் இருக்கு

ஆதரவும் இருக்கு

ப்ளூசட்டை மாறனுக்கு எந்த அளவுக்கு எதிர்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு சமூக வலைதளத்தில் ஆதரவும் உள்ளது. சட்டப் போராட்டத்தில் ஆன்டி இண்டியன் படம் வெற்றிப் பெற்ற நிலையில், நிச்சயம் இந்த படம் ரிலீசாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என்று பல ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X