ரஜினியவே ரஜினி ஸ்டைல் பண்ண சொல்லி டார்ச்சர் பண்ணியிருக்காங்க.. தர்பாரை பங்கமாக கலாய்த்த ப்ளூசட்டை!

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள தர்பார் படத்தை பிரபல விமர்சகர் ப்ளூசட்டை மாறன் கிழித்து தொங்க விட்டுள்ளார்.

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு நடிப்பில் கடந்த ஜனவரி 9ம் தேதி பொங்கலை முன்னிட்டு தர்பார் திரைப்படம் திரைக்கு வந்தது.

25 வருடங்கள் கழித்து போலீஸ் அதிகாரியாக ரஜினி நடித்துள்ள தர்பார் படத்திற்கு கலவையான விமர்சனங்களே எழுந்து வருகின்றன.

இந்நிலையில், தமிழ் சினிமா படங்களை விமர்சித்து வரும் ப்ளூசட்டை மாறன் தர்பார் படத்தை விமர்சித்து டோட்டலாக காலி செய்துள்ளார்.

யூடியூப் டிரெண்டிங்

யூடியூப் டிரெண்டிங்

தர்பார் படம் குறித்து கடுமையாக விமர்சித்துள்ள ப்ளூசட்டை மாறனின் விமர்சனம் ஒரு மில்லியன் வியூஸ் கடந்து யூடியூப் டிரெண்டிங்கில் இருக்கிறது. ப்ளூசட்டை மாறனின் விமர்சனத்துக்கு ஆதரவுகளும், ரஜினி ரசிகர்களிடம் இருந்து எதிர்ப்புகளும் கிளம்பி உள்ளன.

டப்பிங் படம்

டப்பிங் படம்

அதிலும் தர்பார் படத்தை இந்தி படமாக எடுத்து தமிழில் டப்பிங் செய்தது போல இருக்கிறது என அவர் சொன்ன கருத்து வைரலாகி வருகிறது. தர்பார் படம் முழுக்க முழுக்க மும்பையில் ஷூட் செய்யப்பட்ட நிலையில், அவரது விமர்சனம் பலரையும் ஈர்த்துள்ளது.

இதுதான் ஹைலைட்

இதுதான் ஹைலைட்

வழக்கமாக தனது விமர்சனங்களில் குட்டி கதை சொல்லி அந்த படத்தை பங்கமாக கலாய்ப்பது மாறனின் பழக்கம். தர்பார் விமர்சனத்தில் பொதுவா நம்ம வீட்டுக்கு விருந்தாளிங்க வந்தா குழந்தைங்களை ரஜினி ஸ்டைல் பண்ணிக் காட்ட சொல்லி டார்ச்சர் பண்ணுவோம். ஆனால், இந்த படத்துல ரஜினியவே ரஜினி ஸ்டைல் பண்ணுங்கன்னு டைரக்டர் டார்ச்சர் பண்ணியிருக்காரு என வேற லெவலில் விமர்சித்துள்ளார்.

ரஜினிக்கு பாராட்டு

ரஜினிக்கு பாராட்டு

ப்ளூசட்டை மாறனின் ஒட்டுமொத்த தாக்குதலும் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸை நோக்கியே இருந்தது. 70 வயதில் ரஜினிகாந்த் போட்டிருக்கும் முயற்சியையும் உழைப்பையும் மாறன் பாராட்ட தவறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வீக் வில்லன்

வீக் வில்லன்

ஒரு படம் வெற்றிப்படமாக அமைய வேண்டும் என்றால் அந்த படத்தில் ஹீரோவை விட வில்லன் வெயிட்டாக இருக்க வேண்டும். ஆனால், தர்பார் படத்தில் வில்லனே செகண்ட் ஹாஃபில் தான் வருகிறார். ரஜினியும், வில்லனும் சந்திக்கும் முதல் காட்சியே படத்தின் இறுதி காட்சியாக இருக்கிறது. வில்லன் கதாபாத்திரத்தை சரியாக வடிவமைக்காத இடத்திலேயே படம் படுத்துடுச்சு எனவும் கமெண்ட் அடித்துள்ளார்.

முதல் பாதி ஓகே

முதல் பாதி ஓகே

தர்பார் படத்தின் முதல் பாதி ஓகே என்றும், இரண்டாம் பாதியில் கொஞ்சம் கூட கதையில்லாமல் படம் நகர்வதால், பல்லைக் கடித்துக் கொண்டு பார்க்க வேண்டும் என்றும் ப்ளூசட்டை மாறன் விளாசி உள்ளார். தர்பார் படத்தை பார்த்த பலரும் இரண்டாம் பாதியில் தூங்கிவிட்டேன் என்று ட்ரோல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X