Blue sattai: அவன்.. அவன்.. அவன்.. மகாராஜா பட இயக்குநர் நிதிலன் சாமிநாதனை பாராட்டிய ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: இயக்குனர் நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி உள்ளது மகாராஜா படம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, அபிராமி, நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படம் அழுத்தமான திரைக் கதையால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து 50 கோடிகளுக்கும் மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த படம் விரைவில் 100 கோடி கிளப்பில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் ப்ரோமோஷன்களுக்காக இயக்குனர் நிதிலன் பல விஷயங்களை பேசியிருந்தார். இந்நிலையில் ரசிகர்களை முட்டாளாக்க கூடாது என்பது குறித்து நிதிலன் பேசியிருந்த கருத்துக்களை இயக்குனரும் சினிமா விமர்சகர்மான ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Vijay sethupathi Blue sattai maaran Maharaja movie tamil cinema

மகாராஜா படம்: இயக்குனர் நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்த மகாராஜா படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து 50 கோடி ரூபாய்களுக்கும் மேல் வசூலை தாண்டியுள்ளது. விரைவில் இந்த படம் 100 கோடி கிளப்பிலும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட காலங்களுக்கு பிறகு இந்த படம் விஜய் சேதுபதிக்கு சிறப்பாக கை கொடுத்துள்ளது. இந்த படத்தில் அப்பா மற்றும் மகளுக்கு இடையிலான பாண்டிங் மிகச்சிறப்பாக பேசப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சிறப்பான கதைக்களம் மற்றும் திரைக்கதை மூலம் ரசிகர்களை நிதிலன் சிறப்பாக கவர்ந்துள்ளார்.

இயக்குனர் நிதிலன் சாமிநாதன்: இயக்குனர் நிதிலன் சாமிநாதனின் குரங்கு பொம்மை படமும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்துள்ளது. முன்னதாக இவரது குறும்படம் புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்திருந்தது. இந்த குறும்படத்தை நடிகர்ர் கமல்ஹாசன் சிறப்பாக பாராட்டி இருந்தார். நல்ல பயிற்சியுடன் நிதிலன் சினிமாவில் நுழைந்தால் முன்னணி இயக்குனராக அவர் மாற முடியும் என்று கமல்ஹாசன் தனது பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மகாராஜா படம் நிதிலனுக்கு மேலும் சிறப்பாக கைக்கொடுத்துள்ளது.

ரசிகர்கள் குறித்து நிதிலன்: படத்தின் வெளியீட்டின் போது பல கருத்துக்களை நிதிலன் சாமிநாதன் தெரிவித்திருந்தார். அதில் படம் பார்க்க வர்ற ஆடியன்சை முட்டாளாக நினைக்காமல், அவனும் ஒரு அறிவாளி, அவனும் காட்சியை guess செய்வான், அவனையும் கதைக்குள் வரவைத்து ஸ்கிரீன் முழுக்க அவனை ட்ராவல் செய்ய வைக்க வேண்டும் என்று நிதிலன் கூறியிருந்தார். இந்நிலையில் நிதிலனின் இந்தப் பேட்டியை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் டைரக்டரும் சினிமா விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவன் அவன் அவன் என நிதிலனின் பேட்டியை குறிப்பிட்டு அவர் ஹைலைட் செய்துள்ளதையும் பார்க்க முடிந்தது.

குறும்படம் டூ முன்னணி இயக்குநர்: புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம் என்ற குறும்படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நிதிலன் சாமிநாதன், தொடர்ந்து கடந்த 2017ம் ஆண்டில் வெளியான குரங்கு பொம்மை படம் மூலம் கோலிவுட்டில் இயக்குநராக அறிமுகமானார். இந்நிலையில் தற்போது 7 ஆண்டுகளுக்கு பிறகு மகாராஜா படத்தின் மூலம் மீண்டும் தன்னுடைய ஆளுமையை நிரூபித்து முன்னணி இயக்குநராக மாறியுள்ளார். இவரது அடுத்தப்படங்கள் குறித்து அடுத்தடுத்த செய்திகள் தற்போது வெளியாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X