Blue sattai Maaran: இந்தியன் 2 ரிசல்ட் என்ன ஆகப்போகுதோ.. மணிரத்னத்தை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: நடிகர் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்ட நடிகர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள இந்தியன் 2 படம் இன்றைய தினம் சர்வதேச அளவில் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படம் கடந்த 1996ம் ஆண்டில் வெளியான இந்தியன் படத்தின் 2வது பாகமாக 28 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது வெளியாகி உள்ளது.

இந்தியன் படத்தின் மூன்றாவது பாகமும் விரைவில் ரிலீசாகவுள்ள நிலையில் தற்போது இந்தியன் 2 படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இயக்குனரும் சினிமா விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் இயக்குனர் மணிரத்னத்தை வம்பிழுத்துள்ளார்.

Kamal haasan Indian 2 movie Blue sattai Maaran Shankar Maniratnam tamil cinema 2

இந்தியன் 2 படம்: நடிகர் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள இந்தியன் 2 படம் இன்றைய தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. பான் இந்தியா படமாக வெளியாகியுள்ள இந்தியன் 2 படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. படம் பிரத்யேக காட்சிகளுடன் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 9 மணி காட்சியுடன் இந்தியன் 2 படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த படத்திற்கான ரசிகர்களின் கொண்டாட்டம் அதிகப்படியாக காணப்படுகிறது. இந்த படத்திற்காக கடந்த சில வாரங்களாகவே ஷங்கர், கமல்ஹாசன், சித்தார்த் உள்ளிட்ட படக்குழுவினர் மிகப்பெரிய அளவில் ப்ரோமோஷன்களை மேற்கொண்டு வந்தனர்.

சிறப்பான பிரமோஷன்கள்: ஐபிஎல் போட்டியில் துவங்கிய இந்தியன் 2 படத்திற்கான பிரமோஷன்கள், தொடர்ந்து சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் தொடர்ந்தது. இந்நிலையில் இன்றைய தினம் இந்த படம் சிறப்பு காட்சிகளுடன் வெளியாகி உள்ளது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. இந்நிலையில் இயக்குநரும் சினிமா விமர்சகருமான ப்ளூ சட்டை மாறனும் தன்னுடைய பங்கிற்கு இந்தியன் 2 படம் குறித்து இயக்குநர் மணிரத்னத்தை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் கலாய்த்துள்ளார். படத்தின் ரிசல்ட் குறித்து அவர் பதிவிட்டுள்ளார்.

விவேக் பட காமெடி: விவேக்கின் படிக்காதவன் படத்தின் பழைய காமெடியை வெளிப்படுத்தும் வகையில் மணிரத்னம் இந்தியன் 2 படத்தின் ரிசல்ட்டிற்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார். அடுத்ததாக கமல்ஹாசனை வைத்து தக் லைஃப் படத்தை இயக்கி வருகிறார் மணிரத்னம். இந்தியன் 2 படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு உள்ளான நிலையில், இந்தப் படத்தின் ரிசல்ட் அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகும் தக் லைஃப் படத்திலும் எதிரொலிக்கும் என்பதை கொண்டு இந்த கலாய்ப்பை ப்ளூ சட்டை மாறன் மேற்கொண்டுள்ளார்.

Kamal haasan Indian 2 movie Blue sattai Maaran Shankar Maniratnam tamil cinema 2

தக் லைஃப் படம்: இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனுக்கு அடுத்தப்படியாக சித்தார்த்திற்கு அழுத்தமான கேரக்டர் அமைந்துள்ளது. இதேபோல மணிரத்னம் -கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகிவரும் தக் லைஃப் படத்தில் நடிகர் சிம்புவிற்கு அழுத்தமான கேரக்டர் அமைந்துள்ளது. படத்தில் கமல்ஹாசனின் வளர்ப்பு மகனாக சிம்பு நடித்துள்ளார். படத்தில் திரிஷா, அபிராமி, வையாபுரி, நாசர் உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள நிலையில், இந்த ஆண்டில் கல்கி 2898 ஏடி, இந்தியன் 2 படங்களை தொடர்ந்து கமல்ஹாசனின் தக் லைஃப் படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X