ரணகளத்துலயும் குதூகலம்.. நடிகர் ஜீவாவை கடுப்பாக்கிய ரசிகர்.. ப்ளூ சட்டை மாறன் சொன்ன விஷயம்!
சென்னை: பிரபல தயாரிப்பாளரின் மகனாகவே கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமானார் ஜீவா. இருந்தபோதிலும் தன்னுடைய துவக்கப்படங்களிலேயே நடிப்பிற்கு முக்கியத்துவம் தரும்வகையில் ஸ்கிரிப்ட்களை செலக்ட் செய்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். கற்றது தமிழ், ராம் என இவரது அதிரடி படங்களின் எண்ணிக்கை அதிகம்.
இந்தப் படங்களை தொடர்ந்து கமர்ஷியல் படங்களிலும் தான் சளைத்தவன் அல்ல என்பதை சிவா மனசுல சக்தி உள்ளிட்ட படங்கள் மூலம் நிரூபித்துள்ளார். இவரது கோ உள்ளிட்ட படங்கள் ரசிகர்களின் எவர்கிரீன் ஃபேவரிட் லிஸ்ட்டில் உள்ளன. தற்போது கலகலப்பு 3 படத்தில் இவர் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது குடும்பத்தினருடன் ஜீவா சென்ற கார் சேலம் அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

நடிகர் ஜீவா: நடிகர் ஜீவா சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத் தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரியின் மகனாகவே துவக்கத்தில் அடையாளப்படுத்தப்பட்டார். ஆனால் சில படங்களிலேயே தன்னுடைய அடையாளத்தை தனக்கானதாக மாற்றிக் காட்டினார் ஜீவா. கற்றது தமிழ், ராம் போன்ற படங்களில் துவக்கத்திலேயே நடித்து தன்னை சிறப்பான நடிகராக கோலிவுட்டில் நிலைநிறுத்தினார். தொடர்ந்து தன்னால் கமர்ஷியல் படங்களிலும் மாஸ் காட்ட முடியும் என்பதை சிவா மனசுல சக்தி, டிஷ்யூம் போனற் படங்களின்மூலம் வெளிப்படுத்தினார். குறிப்பாக சிவா மனசுல சக்தி படத்தில் சந்தானத்துடன் இணைந்து காமெடியில் அதகளம் செய்திருந்தார் ஜீவா.
வெற்றிப்படங்கள்: தொடர்ந்து கோ, என்றென்றும் புன்னகை போனற் படங்க்ளும் இவரது கேரியர் பெஸ்ட்டாக அமைந்தன. தற்போது அதிகமான பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் சில தேர்ந்தெடுத்த கதைக்களங்களில் நடித்து வருகிறார் ஜீவா. அடுத்ததாக கலகலப்பு 3 படத்திலும் இவர் கமிட்டாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்த தன்னுடைய கருத்தை பேசி, கண்டனங்களுக்கு உள்ளானார். இந்நிலையில் தற்போது தன்னுடைய குடும்பத்தினருடன் சேலத்திற்கு சென்ற நிலையில் அவரது கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. சின்ன சேலம் மற்றும் கள்ளக்குறிச்சிக்கு இடையில் இந்த விபத்து நடந்துள்ளது.

கடுப்பான ஜீவா: இந்த விபத்தில் காரின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்த நிலையில், ஜீவா மற்றும் அவரது குடும்பத்தினர் லேசான காயங்களுடன் தப்பித்தனர். இதையடுத்து மாற்று காரில் அவர்கள் அருகிலிருந்த மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்றனர். இதனிடையே இந்த சம்பவத்தின்போது அங்கிருந்த நபர் ஒருவர், ஜீவாவிடம் செல்ஃபி கேட்டுள்ளார். இதனால் டென்ஷனான ஜீவா, யோவ், ஆக்சிடெண்ட் ஆயிருக்கு, செல்ஃபி கேட்டுட்டு இருக்க என்று கோபமாக பேசியுள்ளார். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ப்ளூ சட்டை மாறன் பதிவு: இதனிடையே இந்த சம்பவத்தை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள ப்ளூ சட்டை மாறன், செல்ஃபி கிறுக்கன்கள் என்று தன்னுடைய கருத்தை பகிர்ந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பும் துணிக்கடையை திறந்து வைக்க சென்றபோதுதான் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து செய்தியாளரின் கேள்வியால் ஜீவா டென்ஷனானார். சந்தோஷமான மனநிலையில் அனைனவரும் இருக்கும்போது இப்படி கேள்வி கேட்கிறீர்களே அறிவிருக்கா என்று ஜீவா கேட்க, அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











