விஜய் -ரஜினிகாந்த் பட வசூலை கம்பேர் செய்த தனஞ்செயன்.. விடுவாரா ப்ளூ சட்டை மாறன்!

நடிகர் விஜய்யின் கோட் படம் சர்வதேச அளவில் வசூலை குவித்து வருகிறது. படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வார நாட்களிலும் ரசிகர்களை திரையரங்குகளை நோக்கி படையெடுக்க வைத்து வருகிறது. படத்தில் விஜய் ரசிகர்கள் கொண்டாட பல விஷயங்களை இணைத்திருந்தார் இயக்குநர் வெங்கட் பிரபு.

படத்தில் விஜய், பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல் என நால்வரின் நட்பு மிகச்சிறப்பாக காட்டப்பட்டு, அந்த நட்பு காலப்போக்கில் மாறும் சூழலும் காட்டப்படுவது ரசிகர்களை கவரும் விஷயங்களில் ஒன்றாக காணப்படுகிறது. ஒருசில லாஜிக் மீறல்கள் விமர்சகர்களை பல விமர்சனங்களை முன் வைக்க வைத்து வந்தாலும், படத்தை ரசிகர்கள் குறிப்பாக தமிழ் ரசிகர்கள் கொண்டாடவே செய்கின்றனர்.

vijay rajinikanth blue sattai maaran

விஜய்யின் கோட் படம்: நடிகர் விஜய்யின் கோட் படம் கடந்த 5ம் தேதி முதல் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகி ஒரு வாரத்தை கடந்து படம் ஓடி வருகிறது. கடந்த 8 நாட்களில் இந்தப் படத்தின் வசூல் 355 முதல் 365 கோடிகள் எனபாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. முதல் நாளிலேயே 126 கோடியும் 4 நாட்களில் 288 கோடி ரூபாய்களும் என இந்தப் படத்தின் வசூல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். விஜய்க்கு பான் இந்தியா ஸ்டார் என்ற அந்தஸ்து உள்ள நிலையில் மற்ற மொழிகளிலும் படம் மிகப்பெரிய வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

கோட் பட வசூல்: ஆனால் தமிழகத்தை தவிர கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இந்தப் படம் ரசிகர்களை அதிகளவில் கவரத் தவறியுள்ளது. படத்தில் ரசிகர்களை கவர பல விஷயங்களை சேர்த்திருந்த வெங்கட் பிரபு கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. படத்தின் பட்ஜெட் ஏறக்குறைய 400 கோடி ரூபாய் என்ற வகையில் படம் 500 கோடி ரூபாய்களுக்கு மேல் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் வசூல் குறித்து பலரும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். படம் ஒரு வாரம்கூட ரசிகர்களை திரையரங்கிற்கு வரவழைக்கவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பேட்ட படத்தை வசூலில் பீட் செய்த கோட்: இந்நிலையில் கோட் படத்தின் முதல் நாள் வசூல் மட்டுமே 126 கோடி ரூபாய் என்பதை தயாரிப்பாளர் தனஞ்செயன் சுட்டிக் காட்டியுள்ளார். ஆனால் நடிகர் ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு கலெக்ஷனே 120 கோடி ரூபாய்தான் என்றும் அவர் கூறியுள்ளார். இதனிடையே பேட்ட படத்தின் ஒட்டுமொத்த வசூலை கோட் படம் முதல் நாளிலேயே முறியடித்துள்ளதாகவும் ஒரு விடுமுறையில்லாத நாளில் இவ்வளவு பெரிய வசூலை விஜய்யின் கோட் படம் நிகழ்த்தியுள்ளதாகவும் இது விஜய்யின் வெற்றிதான் என்றும் அவர் கூறியுள்ளார்.

ப்ளூ சட்டை மாறன் போஸ்ட்: இந்நிலையில் தனஞ்செயனின் இந்த கருத்தை போஸ்டராக தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள ப்ளூ சட்டை மாறன், ரஜினிகாந்த் மற்றும் விஜய்யின் புகைப்படங்களை எதிரெதிராக போட்டு, இந்த விஷயத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். விஜய்க்கு ஆதரவாகவே தொடர்ந்து இவர் பேசிவரும் நிலையில், இந்த விஷயத்திலும் தனஞ்செயனின் கருத்தை பாராட்டியே இந்த போஸ்டை அவர் போட்டுள்ளது தெரியவருகிறது. முன்னதாக தமிழ் மொழியில் மட்டுமே கோட் படம் 30 கோடி ரூபாய் வசூலை முதல் நாளில் வசூலித்ததையும் தனஞ்செயன் தன்னுடைய பேட்டியில் சுட்டிக் காட்டி பாராட்டியிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X