ED ரெய்டில் சிவகார்த்திகேயன்? ரஜினிகாந்த் வீட்டுக்கு ரெய்டு போகாததற்கு என்ன காரணம்? ப்ளூ சட்டை மாறன் கேள்வி

சென்னை: சினிமா வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் என்றால் அது, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை தான். சோதனைக்குப் பின்னர் அமலாக்கத்துறை சார்பில், ஆகாஷ் பாஸ்கரனை நேரில் ஆஜராகும்படி, சம்மன் அனுப்பியும் அவர் நேரில் ஆஜராகவில்லை. இது தனி விவகாரமாக உருவெடுத்து வரும் நிலையில், அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சிம்பு மற்றும் தனுஷ் இருப்பதாக கூறப்படுகிறது.

காரணம், ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இட்லி கடை, பராசக்தி மற்றும் எஸ்.டி.ஆர் 49 ஆகிய படங்களின் நாயகர்களாக அவர்கள் மூவரும் இருப்பதுதான் ஒரு காரணம். இந்நிலையில் இது தொடர்பாக ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

அதாவது அவரது பதிவில், " திடீர் தளபதிக்கு வந்த திடீர் சிக்கல்: வணங்கான் படத்தில் நடிக்காமல் தப்பினார் சூர்யா. அதில் அருண் விஜய் நடித்தார். படம் ஃப்ளாப். அடுத்து இந்தி எதிர்ப்பு போராட்ட கதையான பராசக்தியில் கமிட் ஆனார் சூர்யா. பிறகு.. இதில் நடித்தால் மத்திய பாஜக அரசின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். தனது பான் இண்டியா ஹீரோ கனவும் புட்டுக்கும் என்பதால். பராசக்தி வேண்டாம் என கழண்டு கொண்டார். இப்படி ஒரு கான்ட்ரவர்சி கதையில் நடித்தால் தமிழ்நாட்டு மக்களை கவரலாம்.‌ இப்போதைக்கு நமக்கு பான் இண்டியா கனவும் இல்லை. ஆகவே வடக்கே சர்ச்சை வந்தாலும் பரவாயில்லை. அது படத்தின் புரமோசனுக்கு உதவும். படத்தை தயாரிப்பது dawn pictures. அதை ரிலீஸ் செய்வது ரெட் ஜெயண்ட். ஆகவே சிக்கல் இல்லை. அதுபோக நமது படம் ஜனநாயகனோடு மோதி வென்றால்‌‌ மறுநாளே விஜய்யின் இடத்தை பிடித்து விடலாம் என கணக்குகள் போட்டார் திடீர் தளபதி.

Blue Sattai Maaran Questining To ED Raid After Dawn Pictures Akash Baskaran For SK And Rajinikanth

சிவகார்த்திகேயன்: ஆனால் தற்போதைய‌ ED ரெய்டுகள் இவரது கணக்குகளை கலகலக்க வைத்துள்ளன. கதைதான் கான்ட்ரவர்சி என்று பார்த்தால், படத்தை சுற்றி இப்படி ஒரு கான்ட்ரவர்சி வருமென எதிர்பார்த்திருக்க மாட்டார். திடீர் தளபதியின் படத்திற்கு வந்துள்ள திடீர் சிக்கல் எப்போது தீரும் என அவரது திடீர் ரசிகர்கள் ஆதங்கத்துடன் காத்திருக்கிறார்கள்" என்று ஒரு பதிவில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவுக்கு சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை கண்டித்து கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

பிரதமர் பாராட்டிய படங்கள்: அதேபோல் மற்றொரு பதிவில், " நெத்திலி மீன்களை துரத்தும் ரெய்டுகள்.. திமிங்கிலங்களை பிடிக்காதது ஏன்? திடீரென 400 கோடிக்கும் மேல் சினிமாவில் முதலீடு செய்யும் அளவிற்கு ஆகாஷ் பாஸ்கரனுக்கு எங்கிருந்து பணம் வந்தது? ரெய்டில் இருந்து தப்பி ஓடிய ரத்தீஷ் எனும் தம்பி.. யார்? மேலும் சில கேள்விகள்: பலகோடி வருமானம் ஈட்டிய‌Kerala Story பட நிறுவனம் மீது ரெய்டு நடந்ததா? பிரதமர் வாழ்த்து சொன்ன kashmir Files படம் 300 கோடிக்கு வசூல் என கூறப்பட்டதே? அந்த தயாரிப்பாளர் ரெய்டு செய்யப்பட்டாரா?சமீபத்தில் வெளியான chaava படத்தை பிரதமர் புகழ்ந்து தள்ளினாரே. அப்படம் 800 கோடி வசூலித்ததே. அந்நிறுவனத்தை ரெய்டு செய்தார்களா?ஏகப்பட்ட தேசப்பற்று படங்களில் நடித்த அக்சய் குமார், கங்கனா ரனவத் வீடுகளுக்கு‌ ED போக மாட்டார்களா?

Blue Sattai Maaran Questining To ED Raid After Dawn Pictures Akash Baskaran For SK And Rajinikanth

ரஜினிகாந்த் வீட்டில் சோதனை: தலீவர் ( ரஜினிகாந்த்) வீட்டில் இதுவரை ஏன் ரெய்டு போகவில்லை? டைம்ஸ் நவ் சேனலில் நெறியாளராக இருந்த அர்னாப் கோஸ்வாமிக்கு ரிபப்ளிக் டிவி சேனல் தொடங்கும் அளவுக்கு பலகோடி பணம் வந்தது எப்படி? மத்தியில் பாஜக ஆட்சி வந்த பிறகு அமித் ஷா மகன் ஜெய் ஷாவின் சொத்து மதிப்பு எவ்வளவு மடங்கு அதிகமானது? இந்த அனைத்து கேள்விகளையும் முன்வைத்து தானே விவாதம் செய்யப்பட வேண்டும்?" என்றும் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

விசாரணைகள்: மேலும் நாட்டில் நடக்கும் அமலாக்கத்துறையினரின் சோதனைகள் குறித்தும் அவர் விமர்சித்து பதிவிட்டுள்ளார். அதில், " இது மட்டும் இல்லாமல். " ED ரெய்டு செய்திகளை பொருட்படுத்தாத மக்கள் - காரணங்கள்: இதுவரை நடந்த நூற்றுக்கணக்கான ரெய்டுகளில் மிக சொற்ப அளவிலான வழக்குகளில் மட்டுமே தண்டனை தரப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட அனைத்து ரெய்டுகளும் பாஜக ஆளாத மாநிலங்களில் தான் அதிகம் நடந்துள்ளன. இந்தியாவில்.. குறிப்பாக தமிழகத்தில் எத்தனை பாஜக தலைவர்கள் அல்லது அக்கட்சி அனுதாபிகளாக உள்ள பிரபலங்களின் வீடுகளில் ரெய்டு நடந்துள்ளன? அதிமுக - பாஜக கூட்டணி உறுதியான பிறகு. எத்தனை அதிமுக அமைச்சர்கள் மற்றும் அதிமுக அனுதாபிகள் ரெய்டுக்கு உள்ளாகியுள்ளனர்?

Take a Poll

விஜய் வீட்டில் ரெய்டு: சில வருடங்களுக்கு முன்பு விஜய் வீட்டில் ரெய்டு நடந்ததே. அதன் விவரங்கள் இதுவரை வெளியானதா? பாஜக, அதிமுகவிற்கு ஆதரவளிக்கும் தமிழக கல்வி தந்தைகள் வீட்டில் எத்தனை ரெய்டுகள் நடந்துள்ளது? சீமான் வீட்டிற்கு ரெய்டு போனார்களா? ரெய்டு விட்டால் வெளிநாட்டுக்கு தப்பி விடுவார்கள் என மத்திய அரசுக்கு தெரியாதா? பிறகு ரத்தீஷ் என்பவர் வெளிநாட்டுக்கு தப்பியது எப்படி? இதற்கு காரணம் மத்திய அரசா? மாநில அரசா?

நம்பகத் தன்மை: ஒவ்வொரு நாளும் பலரது வீடு மற்றும் அலுவலகங்களில் பல ரெய்டுகள் நடக்கிறது. ஆனால் அது வெறும் பிரேக்கிங் நியூஸாக மட்டுமே இருக்கிறது. முறையாக நீதிமன்ற விசாரணை நடந்து தண்டனை பெற்றுத் தராமல் வெறும் ரெய்டுகள் மட்டும் நடப்பதால், அதன் மீதான‌ நம்பகத்தன்மையை மக்கள் எப்போதோ இழந்து விட்டனர். ரெய்டு பத்தி பேசு என கதறும் சொங்கிகளும், இதர கட்சியினரும் இக்கேள்விகளுக்கு நேர்மையான பதில் சொல்லப் போவதில்லை. ஆகாஷ் பாஸ்கரன், ரத்தீஷ் போன்றவர்களுக்கு நீதிமன்றத்தில் தண்டனை வாங்கி தரட்டும். பிறகு இந்த ரெய்டுகளின் நேர்மையை பாராட்டி. தவறு செய்தோரை திட்டி தீர்க்கலாம்‌.

Blue Sattai Maaran Questining To ED Raid After Dawn Pictures Akash Baskaran For SK And Rajinikanth

நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும்: EPS உறவினர் வீட்டில் ரெய்டு நடந்தவுடன் டெல்லிக்கு சென்று அமித்ஷாவை சந்தித்தார். அதன்பிறகு அதிமுக பாஜக கூட்டணி அமைந்தது. இதைப் பற்றி வாய் திறக்காத உத்தம சீலர்கள் இப்போது மட்டும் சலங்கை கட்டி ஆடுகிறார்கள். பிரமாதம்! திமுகவினர் முறைகேடாக சொத்து சேர்த்திருந்தால், அதை நீதிமன்றத்தில் நிரூபித்து தண்டனை பெற்று தரட்டும். அதை மக்கள் வரவேற்பார்கள். தமிழக தேர்தலையொட்டி.. இப்படியான ரெய்டுகள் இனி தொடர்ந்து நடக்கும். அதாவது.. ரெய்டு மட்டும்தான் நடக்கும்" என்று பதிவிட்டுள்ளார். இவரது பதிவுக்கு இணையவாசிகள் பலரும் பலவிதமாக கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X