மக்களை குறை சொல்லாதீங்க.. ஹெச் வினோத்திற்கு பதிலடி கொடுத்த ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: மனோபாலா தயாரிப்பில் கடந்த 2014ம் ஆண்டில் வெளியான சதுரங்க வேட்டை படம் மூலம் தமிழ் சினிமாவில் அதிரடி காட்டியவர் இயக்குநர் ஹெச் வினோத். தொடர்ந்து கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று என்ற மாஸ் படத்தை கொடுத்த இவருக்கு அடுத்தடுத்து அஜித்தின் 3 படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என அஜித்தை வித்தியாசமான கோணங்களில் காட்டிய ஹெச் வினோத், அடுத்ததாக விஜய்யின் தளபதி 69 படத்தையும் இவர் இயக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், விரைவில் இந்தப் படம் குறித்த அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் விஜய்யின் இறுதிப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

h vinoth thalapathy 69 blue sattai maaran

இயக்குநர் ஹெச் வினோத்: நடிகர் விஜய்யின் தளபதி 69 படத்தை ஹெச் வினோத் இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது விஜய்யின் கோட் படம் வெளியாகியுள்ள நிலையில், அடுத்ததாக தளபதி 69 படத்தின் அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. ஆர் பார்த்திபன், மில்டன் என பிரபல இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஹெச் வினோத் கடந்த 2014ம் ஆண்டில் மனோபாலா தயாரிப்பில் சதுரங்க வேட்டை படத்தின் மூலம் தமிழில் மாஸ் என்ட்ரி கொடுத்திருந்தார். இந்தப் படத்தை தொடர்ந்து இவரது இயக்கத்தில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படமும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது.

ஹெச் வினோத் கேள்வி: இந்தப் படங்கள் அஜித்தின் அடுத்தடுத்த 3 படங்களை இயக்கும் வாய்ப்பை ஹெச் வினோத்திற்கு பெற்றுத் தந்தது. நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என அடுத்தடுத்த அஜித் படங்களை இயக்கிய ஹெச் வினோத், அடுத்ததாக விஜய்யை இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள ஹெச் வினோத், எந்த மாதிரியான படங்கள் வேண்டும் என்று மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். வாரிசு, துணிவு படங்களுக்கு நள்ளிரவு ஒரு மணியளவில் 500, 1000 ரூபாய் என கொடுத்து திரையரங்குகளில் பார்க்க போன ரசிகர்கள், கடைசி விவசாயி படத்தையும் பார்த்திருந்தால் தாங்களும் சமரசம் கம்மியாக செய்து படங்களை கொடுப்போம் என்று அவர் கூறியுள்ளார்.

ஹெச் வினோத்திற்கு ப்ளூ சட்டை மாறன் பதிலடி: மக்கள் கொண்டாடுவதைதான் ஒரு வியாபாரி கொடுக்க முன்வருவார் என்றும் ஹெச் வினோத் கூறியுள்ள நிலையில், அவரது இந்தக் கருத்தை ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார். மக்களை மட்டும் குறை சொன்னால் போதாது என்று கூறியுள்ள ப்ளூ சட்டை மாறன், கடைசி விவசாயி, பாபநாசம் போன்ற படங்களில் ரஜினி நடிக்க மறுத்ததாக கூறப்பட்டதையும் சுட்டிக் காட்டியுள்ளார். சேரன், தங்கர்பச்சான் போன்ற இயக்குநர்களின் படங்களில் மாஸ் ஹீரோக்கள் நடிக்காதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். சதுரங்க வேட்டை கதையை பிரபல ஹீரோக்களுக்கு சொன்னபோது அவர்கள் நடிக்க மறுத்ததாக ஹெச் வினோத் கூறியதையும் குறிப்பிட்டு ப்ளூ சட்டை மாறன் இந்தப் பதிவை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மக்களை குறை சொல்வது எஸ்கேபிசம்: வாழை படத்தை பாராட்டிய டாப் ஹீரோக்கள் எத்தனை பேர் குட்நைட், டாடா, கடைசி விவசாயி, போர்த்தொழில், ஜமா போன்ற சின்ன பட்ஜெட் படங்களை பாராட்டினார்கள் என்றும் கேட்டுள்ள ப்ளூ சட்டை மாறன், அப்படி பாராட்டினால் மக்களின் பார்வை தரமான சின்ன பட்ஜெட் படங்களின் பக்கம் மாறிவிடும், தங்களது மசாலா கடை வியாபாரம் படுத்துவிடும் என்பதுதானே காரணம் என்றும் கூறியுள்ளார். எனவே மக்களை மட்டுமே குறை சொல்வது எஸ்கேபிசம் என்றும் ப்ளூ சட்டை மாறன் ஹெச் வினோத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X