Blue sattai Maran: மாஸ்டர் டீசர் சாதனையை கோட் ட்ரெயிலர் முறியடிக்குமா.. ப்ளூ சட்டை மாறன் கேள்வி!

சென்னை: நடிகர் விஜய், பிரஷாந்த், பிரபுதேவா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள கோட் படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ள நிலையில், யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அவரது இசையில் அடுத்தடுத்து 3 பாடல்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளன.

நடிகர் விஜய் கோட் படத்தை தொடர்ந்து தளபதி 69 படத்தில் நடித்து முடித்துவிட்டு அத்துடன் திரைப்பயணத்தில் இருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளார்.இதனால் கோட் மற்றும் தளபதி 69 படங்கள் மிகப்பெரிய கவனத்தை பெற்றுள்ளன. விரைவில் தளபதி 69 படத்தின் அறிவிப்பு வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Vijay GOAT movie Master movie

நடிகர் விஜய்: நடிகர் விஜய், பிரஷாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு. சயின்ஸ் பிக்ஷன் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப்படத்தில் அப்பா மற்றும் மகன் என இருவேறு கேரக்டர்களில் விஜய் நடித்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத், பாங்காக் உள்ளிட்ட இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

கோட் படம்: தன்னுடைய படங்களில் அதிரடி ஆக்ஷன், காமெடி, சென்டிமெண்ட் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் ரசிகர்களை கவரும்வகையில் இருக்கும்படி பார்த்து வருபவர் நடிகர் விஜய். இவரது படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதித்து வருகின்றன. இதனிடையே, மாஸான கதைக்களத்தில் முன்னதாக படங்களை கொடுத்துள்ள இயக்குநர் வெங்கட்பிரபு, கோட் படத்தையும் அதே ஸ்டைலில் உருவாக்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு அதிகமான விஷயங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் சிவகார்த்திகேயன், திரிஷா, வெங்கட்பிரபு போன்றவர்கள் கேமியோ கேரக்டர்களில் நடித்துள்ளதும் சிறப்பாக பார்க்கப்படுகிறது.

3 பாடல்கள் வெளியீடு: யுவன் சங்கர்ராஜா இசையில் படத்தின் அடுத்தடுத்த 3 பாடல்கள் வெளியாகியுள்ளன. இதில் முதல் முறையாக நடிகர் விஜய் இந்தப் படத்தில் 2 பாடல்களை பாடியுள்ளார். மற்றொரு பாடல் யுவன் சங்கர் ராஜா வாய்சில் வெளியாகியுள்ளது. மேலும் சிறப்பாக இந்தப் படத்தின் சின்ன சின்ன கண்கள் பாடலில் மறைந்த யுவனின் தங்கை பவதாரணியும் ஏஐ தொழில்நுட்பம் மூலம் பாடியுள்ளார். இந்தப் பாடல்கள் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும், ரசிகர்களை கவர்ந்துள்ளன. இந்நிலையில், இன்னும் சிறிது நேரத்தில் படத்தின் ட்ரெயிலர் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ப்ளூ சட்டை மாறன் கேள்வி: சமூக வலைதளங்களில் இந்த ட்ரெயிலர் வெளியீட்டை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். தொடர்ந்து கோட் படத்தின் ட்ரெயிலர் ட்விட்டரில் ட்ரெண்டாகியுள்ளது. இந்நிலையில், சினிமா குறித்த அடுத்தடுத்த விஷயங்ளை தன்னுடைய பக்கங்களில் பேசிவரும் ப்ளூ சட்டை மாறன், முன்னதாக வெளியான நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தின் டீசர் 78 மில்லியன் வியூஸ் பெற்று தமிழ் படங்களில் அதிகப்பட்ச வியூஸ் பெற்ற டீசராக உள்ள நிலையில், இன்றைய தினம் வெளியாகவுள்ள கோட் பட ட்ரெயிலர் இந்த சாதனையை முறியடிக்குமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். விஜய்யின் முந்தைய சாதனைகளை அவரது படங்கள் முறியடித்துவரும் நிலையில், இது சாத்தியமே என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X