சொத்துக்களை ஏழை மக்களுக்கு எழுதி வைக்கலாமே.. ரஜினியை சீண்டிய புளூ சட்டை மாறன்!

சென்னை : நடிகர் ரஜினிகாந்த், சர்வதேச அளவில் சிறந்த நடிகராக, சூப்பர்ஸ்டாராக ரசிகர்களை கவர்ந்து வருபவர்.

70 வயதை கடந்த போதும், தன்னுடைய பெயரையும் பட்டத்தையும் விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

இதனிடையே, பெயர் புகழ் இருந்தும் தனக்கு 10 சதவிகிதம்கூட நிம்மதி இல்லை என்று அவர் தற்போது தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த், 70 வயதை கடந்த நிலையிலும் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார். அவரை சூப்பர்ஸ்டார் என்றும் தலைவர் என்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் அதை ஏற்கும் உடல்நிலை ரஜினிக்கு இல்லை.

கோடிக்கணக்கில் சம்பளம்

கோடிக்கணக்கில் சம்பளம்

தொடர்ந்து சிறப்பான பல படங்களை ஏற்று நடித்துவரும் ரஜினிகாந்த், ஒரு படத்தில் நடிக்க கோடிக்கணக்கில் பணம் பெற்று வருகிறார். அதனாலேயே இவர் தனது நடிப்பை இதுவரை தொடர்ந்து வருகிறார். அதிலும் ஹீரோவாகவே தொடர்ந்து வருகிறார். ரசிகர்களும் இவரை தொடர்ந்து ஹீரோவாகவே பார்க்க விரும்புகின்றனர்.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

சமீபத்தில் இவரது நடிப்பில் தர்பார், அண்ணாத்த படங்கள் வெளியாகின. இந்தப் படங்கள் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றன. ஆனால் கலவையான விமர்சனங்களையே பெற்றன. ஆனால் ரஜினிக்காகவே இந்தப் படங்கள் திரையரங்குகளில் சிறப்பான வசூலை பெற்றுள்ளன.

ரஜினியின் மூலதனம்

ரஜினியின் மூலதனம்

இதுதான் ரஜினியின் மூலதனம். அவருடைய படங்கள் கண்டிப்பாக லாபத்தை கொடுக்காமல் போனாலும் நஷ்டத்தை கொடுக்காது என்ற நம்பிக்கையை வைத்தே அவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அண்ணாத்த படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ், தற்போது அடுத்த படத்தையும் தயாரிக்கவுள்ளது.

நிம்மதி இல்லாத வாழ்க்கை

நிம்மதி இல்லாத வாழ்க்கை

இந்நிலையில் நேற்றைய தினம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரஜினிகாந்த், பெயர், புகழ், பெரிய அரசியல்வாதிகளின் கான்டாக்ட் இவை அனைத்தும் இருந்தபோதிலும் நிம்மதி, மகிழ்ச்சி 10 சதவிகிதம் கூட இல்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளார். அவரது இந்தப் பேச்சு அவரது ரசிகர்களையும் வருத்தம் கொள்ள செய்துள்ளது.

ரஜினியை சீண்டிய ப்ளூ சட்டை மாறன்

ரஜினியை சீண்டிய ப்ளூ சட்டை மாறன்

இந்நிலையில் பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் ரஜினியை சீண்டும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரஜினி தனது படங்களில் வருவதுபோல தனது அனைத்து சொத்துக்களையும் ஏழைகளுக்கு எழுதி வைத்துவிட்டு, இமயமலையில் நிம்மதியை தேடலாமே என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஏழைகளுக்கு சொத்து

ஏழைகளுக்கு சொத்து

ரஜினியின் லிங்கா, முத்து போன்ற படங்களில் ரஜினி தனது சொத்துக்களை ஏழைகளுக்கு எழுதி வைத்துவிட்டு தான் ஏழையாக மாறுவது போல காட்சிகள் அமைந்திருக்கும். அதை குறிப்பிட்டே தற்போது ப்ளூ சட்டை மாறன், ரஜினியை வம்புக்கு இழுத்துள்ளார். இதையடுத்து ரஜினி ரசிகர்கள் அவரை கோபத்துடன் விமர்சித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X