இது விஜய்க்கு தெரியுமா?.. தளபதி 69 பட சம்பளம்.. ப்ளூ சட்டை மாறன் இப்படி கலாய்க்கிறாரே!
சென்னை: நடிகர் விஜய்யின் தளபதி 69 படத்தின் அறிவிப்பு கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி உள்ளது. படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரிக்கவுள்ள நிலையில் ஹெச் வினோத் இயக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்க உள்ளது கேவிஎன் நிறுவனம்.
கேவிஎன் நிறுவனம் பெங்களூரை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிலையில். பல முன்னணி கன்னட படங்களை தயாரித்துள்ளது. இந்நிலையில் தளபதி 69 படத்திற்காக நடிகர் விஜய்க்கு 275 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்திய அளவில் நடிகர் ஷாருக்கானைவிட அதிகமாக சம்பளம் பெறும் நடிகர் என்ற பெருமை இதன் மூலம் நடிகர் விஜய்க்கு கிடைத்துள்ளது.

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் கடைசி படமான தளபதி 69 படத்தின் அறிவிப்பை கடந்த இரு தினங்களுக்கு முன்பு தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. பெங்களூரை மையமாகக் கொண்ட கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தளபதி 69 படத்தை மிகவும் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்துள்ள கேவிஎன் நிறுவனம் முதல் படத்திலேயே விஜய், அனிருத், ஹெச் வினோத் காம்பினேஷனில் ஜாக்பாட் அடிக்க களமிறங்கியுள்ளது. இந்த படத்தின் சூட்டிங் விரைவில் துவங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தளபதி 69 படம்: தளபதி 69 படம் அரசியல் களத்தில் உருவாக உள்ளதாக கூறப்பட்ட நிலையில் படத்தின் இயக்குனர் ஹெச் வினோத் இதை மறுத்திருந்தார். படம் கமர்சியலாக உருவாக உள்ளதாக தெரிவித்திருந்தார். ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியான நிலையில், இதில் இந்த படம் அரசியல் படமாக உருவாகவுள்ளது உறுதிப்பட்டுள்ளது. தீப்பந்தத்தை ஏந்தும் கையுடன் இந்த போஸ்டர் வெளியாகியிருந்தது. இந்த போஸ்டருக்கு ரசிகர்கள் தங்களது உற்சாகத்தை தெரிவித்து வருகின்றனர். படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் சம்பளம்: தளபதி 69 படம் வெளியான உடனே சில மாதங்களிலேயே தேர்தலை சந்திக்க வேண்டிய நிலையில் விஜய் இருக்கிறார். இதனால் இந்த படம் அவரது அரசியல் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்திற்காக விஜய்யின் சம்பளம் 275 கோடி என்று கூறப்பட்டுள்ளது. இந்த சம்பளம் இந்திய அளவில் மிகவும் அதிகமானது என்றும் நடிகர் ஷாருக்கானை காட்டிலும் அதிகம் என்று கூறப்படுகிறது. சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரரான ஷாருக்கான் ஒரு படத்துக்கு 250 கோடி ரூபாய்தான் வாங்குகிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.
கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்: தன்னுடைய இறுதி படமாக இருந்த போதிலும் சம்பளத்தில் விஜய் கறார் காட்டியதையும் பார்க்க முடிந்தது. இந்நிலையில் இந்த சம்பள விவகாரத்தை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள ப்ளூ சட்டை மாறன், இந்த விஷயம் விஜய்க்கு தெரியுமா என்று கலாய்த்துள்ளார். தொடர்ந்து நடிகர்களின் சம்பளம் எகிறி கொண்டிருப்பதாக அடுத்தடுத்த செய்திகள், ஆதங்கங்கள் வந்து கொண்டுள்ளன. இவற்றில் எவ்வளவு தூரம் உண்மை உள்ளது என்பது குறித்து சம்பந்தப்பட்ட நடிகர்கள் வாய் திறக்காமல் உள்ள நிலையில் இதை உண்மை என்றே நம்ப வேண்டிய நிலையில் ரசிகர்கள் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











