கோலிவுட்டிலும் சர்ச்சை.. கரும்புத்தோப்பு கடோத்கஜன் சொன்ன விஷயம்.. யாரை சொல்கிறார் ப்ளூ சட்டை மாறன்?
சென்னை: கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் நடிகை அளித்த பாலியல் புகாரில் பிரபல மலையாள நடிகர் ஜெயசூர்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நடிகர் சித்திக், இயக்குநர் ரஞ்சித் உள்ளிட்டோரும் விரைவில் கைதாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த விஷயத்தில் கருத்து தெரிவித்துள்ள மலையாள நடிகர் டொவினோ தாமஸ், ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதால் மலையாள திரையுலகம் இந்த பாதிப்புகளை சந்தித்து வருவதாகவும், அனைத்து மொழி திரைத்துறையிலும் இந்த பிரச்சினைகள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஹேமா கமிட்டி அறிக்கை: கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தற்போது நடிகை ஒருவர் கொடுத்துள்ள பாலியல் துன்புறுத்தல் புகாரையடுத்து நடிகர் ஜெயசூர்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இதே குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ள நடிகர் சித்திக், இயக்குநர் ரஞ்சித் உள்ளிட்டோரும் விரைவில் கைதாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நடிகர் டோவினோ தாமஸ், பிரித்விராஜ், ஊர்வசி, குஷ்பூ உள்ளிட்டவர்களும் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். குற்றம் சாட்டப்படுபவர்கள்மீது கடுமையான நடவடிக்கை பாய வேண்டும் என்று பிரித்விராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
கேரள விவகாரம் குறித்து விஷால்: இதனிடையே, மலையாள திரையுலகில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதால், இத்தகைய பாலியல் துன்புறுத்தல் குறித்த சம்பவங்கள் வெளியுலகினருக்கு தெரியவந்துள்ளதாகவும் மற்ற மொழி திரைத்துறையிலும் இத்தகைய பாதிப்புகள் உள்ளதாகவும் நடிகர் டோவினோ தாமஸ் தெரிவித்திருந்தார். இதே குற்றச்சாட்டையே நடிகை ஊர்வசியும் பதிவு செய்திருந்தார். மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ், இந்தி சினிமாவிலும் பாலியல் துன்புறுத்தல்கள் இருப்பதாக அவர் கூறியிருந்தார். இந்நிலையில் இன்றைய தினம் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள நடிகர் விஷால், தவறான எண்ணத்தில் அழைக்கும் திரைத்துறையினர் யாராக இருந்தாலும் நடிகைகள் செருப்பால் அடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

விஷாலை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்: மேலும் கோலிவுட்டிலும் ஹேமா கமிட்டி போன்ற கமிட்டி அமைக்கப்படும் என்றும் விஷால் தெரிவித்துள்ளார். பத்து பேர் கொண்ட இந்த கமிட்டியை அமைப்பதற்கான வேலைகள் நடந்து வருவதாகவும் விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நடிகர் சங்கம் ஆண்களுக்கானது மட்டுமில்லை என்றும் பெண்களுக்கானதும்தான் என்றும் விஷால் தெரிவித்துள்ளார். இந்நிலையில் விஷாலின் இந்த இன்டர்வியூவை ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் தொடர்ந்து கலாய்த்து வருகிறார். கேரள திரையுலகை தொடர்ந்து கோலிவுட்டிலும் சர்ச்சை கிளம்ப வாய்ப்பு என்று குறிப்பிட்டு கரும்புத்தோப்பு கடோத்கஜன் என்று வம்பிழுத்துள்ளார்.

முதல் அடி யாருக்கு?: மேலும் தமிழ் சினிமாவில் உப்புமா நிறுவனத்தினர்தான் பெண்களிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்பதாக விஷால் கூறிய கருத்தையும் ப்ளூ சட்டை மாறன் கேள்விக்குட்படுத்தியுள்ளார். உப்புமா கம்பெனி ஆளுங்க மட்டும்தானா என்றும் பிரியாணி போடற பெரிய நிறுவனங்களில் நடிக்கும் ஹீரோ, டைரக்டர், தயாரிப்பாளர் மற்றும் கேமராமேன் எல்லாம் அவ்வளவு நல்லவர்களா என்றும் கேட்டுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் முதல் அடி யார் வாங்கப் போகிறார்களோ தெரியவில்லை என்றும் தன்னுடைய சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.


Click it and Unblock the Notifications