இவர் நோ கமெண்ட்ஸ் சொன்னா மட்டும்.. இன்னைக்கு ப்ளூ சட்டை மாறனின் டார்கெட் ரஜினிகாந்த்!

சென்னை: ஆந்திராவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது திருப்பதி லட்டு விவகாரம். இந்த விஷயத்தில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் 11 நாட்கள் விரதம் இருப்பதாக அறிவித்தார். இந்நிலையில் இந்த விஷயத்தில் முன்னதாக நடிகர் கார்த்தி பேசியது குறித்து பவண் கல்யாண் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதையடுத்து இதுகுறித்து நடிகர் கார்த்தி மன்னிப்பும் கேட்டிருந்தார். இந்நிலையில் இன்றைய தினம் லட்டு விவகாரம் குறித்து நடிகர் ரஜினிகாந்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் இந்த கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் பதில் அளிக்க மறுத்துவிட்டார். இந்நிலையில் கார்த்தி மற்றும் ரஜினிகாந்தின் இந்த செயல்பாடு குறித்து தற்போது ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வம்பிழுத்துள்ளார்.

rajinikanth karthi blue sattai maaran

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படம் குறித்து இன்றைய தினம் சென்னை விமானநிலையத்தில் பேசியுள்ள ரஜினிகாந்த், படம் அனைத்து தரப்பினரையும் கவரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். அப்போது அவரிடம் ஆந்திராவில் மிகப்பெரிய அளவில் சர்ச்சைக்கு உள்ளாகி வரும் லட்டு விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் இந்த கேள்விக்கு ரஜினிகாந்த் பதில் அளிக்க மறுத்து விட்டார். நோ கமெண்ட்ஸ் என்று கூறிவிட்டு விறுவிறுப்பாக அங்கிருந்து சென்றுவிட்டார்.

கார்த்தியின் கமெண்ட்: முன்னதாக ஐதராபாத்தில் நடந்த மெய்யழகன் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் லட்டு விவகாரம் குறித்து மேடையில் நடிகர் கார்த்தியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தற்போது இதுகுறித்து பேசக்கூடாது என்று கூறியிருந்தார். ஆனால் இந்த விஷயத்தில் தெலுங்கு நடிகரும் ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் கண்டனம் தெரிவித்திருந்தார். இதையடுதது நடிகர் கார்த்தி மன்னிப்பு கேட்டதும் நடந்தது. இந்நிலையில் கார்த்தி மற்றும் ரஜினிகாந்தின் இந்த பேட்டிகள் குறித்து ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தள பதிவில் வம்பிழுத்துள்ளார்.

வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்: லட்டு பத்தி கேட்டப்ப இதே பதிலைத்தான் நானும் சொன்னேன். அதுக்கு வார்னிங் தந்தியே, இப்ப இவர் நோ கமெண்ட்ஸ்னு சொன்னா மட்டும் ஏன் அமைதியா இருக்க? ஏதாச்சும் பேசு என்று கார்த்தி பவன் கல்யாணை பார்த்து கேட்பதாக வடிவேலு -பார்த்திபன் காமெடி போஸ்டரை வைத்து கேள்வி எழுப்பியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் லட்டு விஷயத்தில் நோ கமெண்ட்ஸ் என்று கூறியுள்ள நிலையில் இது குறித்து அவர் பல விமர்சனங்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் முதல் விமர்சனமாக ப்ளூ சட்டை மாறன் இந்த விஷயத்தை துவங்கி வைத்துள்ளார்.

rajinikanth karthi blue sattai maaran

அரசியல் கேள்விகளை தவிர்க்கும் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து தன்னுடைய படங்கள் குறித்து கேட்கப்படும் கேள்விகளுக்கு உற்சாகமாக பதிலளித்து வருகிறார். ஆனால் பர்சனல் மற்றும் அரசியல் தொடர்பான கேள்விகளை சமீப காலங்களாக அவர் தவிர்த்து வருகிறார். அந்த வகையிலேயே தற்போது திருப்பதி லட்டு விவகாரத்திலிருந்து கருத்து கூறாமல் அவர் விலகியுள்ளார். அடுத்தடுத்த ரஜினியின் படங்கள் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், அடுத்ததாக வேட்டையன் படம் இன்னும் இரு வாரங்களில் ரிலீசாகவுள்ளது. இதனிடையே, தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X