Don't Miss!
- News
தமிழ்நாட்டிற்கு எதுவும் கொடுக்கவில்லை.. விவசாயிகளுக்கு திட்டங்களும் இல்லை.. திருச்சி சிவா விமர்சனம்
- Lifestyle
இப்படி முட்டை தோசை செஞ்சா... சைடு டிஷ் செய்யவே தேவையில்ல.. ட்ரை பண்ணி பாருங்க...
- Finance
வருமான வரி சலுகை முதல் வரி அதிகரிப்பு வரை.. சாமானியர்களுக்கு பட்ஜெட்டில் என்ன பலன்?
- Sports
வாழ்வா? சாவா? போட்டியில் ரிஸ்க்.. டாஸில் ஹர்திக் பாண்ட்யா எடுத்த முடிவு.. இந்திய அணி ஜெயிக்குமா??
- Automobiles
பெண் செய்த காரியத்தால் நொறுங்கிய கடை! இதனால கூட விபத்து நடக்குமா! சுத்தி இருந்த எல்லாரும் ஆடி போயிட்டாங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பழைய வலிமையை டிஸ்சார்ஜ் பண்ணு.. புதிய எதற்கும் துணிந்தவனை அட்மிட் பண்ணு.. ப்ளூ சட்டை மாறன் அதகளம்!
சென்னை: வலிமை படத்தின் விமர்சனத்தை தொடர்ந்து சமூக வலைதளங்களில் ப்ளூ சட்டை மாறனுக்கும் அஜித் ரசிகர்களுக்கும் பெரிய சண்டையே வெடித்தது.
அவரும், எதற்கும் துணிந்தவனாக அனைத்து ரசிகர்களின் திட்டுக்களுக்கும் பதிலடி கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், பழைய பேஷன்ட் வலிமையை டிஸ்சார்ஜ் செய்து விட்டு புதிய பேஷன்ட் எதற்கும் துணிந்தவனை துவைக்க ஆரம்பித்து இருக்கிறார்.
யாருமே
சரியா
விளையாடல...
வந்ததும்
வேலையை
காட்டிய
விஷ
பாட்டில்
ரம்யா
பாண்டியன்!

பால் பாக்கெட் திருடல
"சூர்யா ரசிகர்கள் ஒழுக்கமானவர்கள். ஆகவே அதிகாலை காட்சியின்போது பால் பாக்கெட், தண்ணீர் கேன்கள் திருடு போகவில்லை என வியாபாரிகள் மகிழ்ச்சி." என ஆரம்பத்திலேயே மீண்டும் அஜித் ரசிகர்களை வம்பிழுத்து எதற்கும் துணிந்தவன் படம் பக்கம் தனது பார்வையை திருப்பி உள்ளார் விமர்சகரும் ஆன்டி இண்டியன் பட இயக்குநருமான ப்ளூ சட்டை மாறன்.

மெகா சீரியல்
'எதற்கும் துணிந்தவன்' மெகா சீரியல் போல் உள்ளது என யூ ட்யூப் சேனலுக்கு பேட்டி அளித்துவிட்டு.. தப்பி ஓடிய மர்ம நபருக்கு ரசிகர்கள் வலைவீச்சு. என சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் மெகா சீரியல் ரேஞ்சுக்கு உள்ளதாக ட்ரோல் செய்து சூர்யா ரசிகர்களை வம்பிழுத்துள்ளார்.

குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி
'ரிலீஸாகி ரெண்டு நாள் ஆகியும் செல்ஃப் எடுக்கலன்னா எப்படி கூவனும்?' 'குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி' 'கரெக்ட்' என போட்டோ மீம்களாக போட்டு எதற்கும் துணிந்தவன் படத்திற்கு எப்படி விமர்சனம் பண்ண போறாருன்னு இப்பவே சிம்பாலிக்கா சொல்லி வருகிறார் ப்ளூ சட்டை மாறன்.

பாக்ஸ் ஆபிசர்ஸ் பரிதாபங்கள்
மெகாஹிட், நம்ம ஹீரோவுக்கு சூப்பர் கம்பேக் என ஒரு ஆபிசரும், சூப்பர் பிளாக்பஸ்டர்.. எல்லா ஷோவும் ஹவுஸ்ஃபுல் என இன்னொரு ஆபிசரும், பக்கா குடும்ப படம் என இன்னொரு ஆபிசரும் இன்னைக்கு ட்வீட் போடுவாங்க என்றும், திங்கட் கிழமை நூறு கோடி முதல் 300 கோடி வரை என வடை சுடுவார்கள் என பாக்ஸ் ஆபிசர்ஸ் பரிதாபங்கள் என்று போட்டு டிராக்கர்களையும் கழுவி ஊற்றி இருக்கிறார்.

வலிமையையும் விடல
"இந்த ஞாயிற்றுகிழமை வலிமை வசூல் 500 கோடியை தொடும் என்று பாக்ஸ் ஆபீஸ் பஞ்சாபகேஷன் பக்குவமாக கணிப்பு" என எதற்கும் துணிந்தவன் வெளியான பின்னரும் அந்த பேஷன்ட்டை. டிஸ்சார்ஜ் செய்யாமல் அடித்து துவைத்து வருகிறார்.

பாவம் பிரபாஸ்
இதையெல்லாம் தாண்டி நாளை தியேட்டர்களில் வெளியாக உள்ள பிரபாஸின் ராதே ஷ்யாம் படத்தையும் வச்சு செய்துள்ளார். " ராதே ஷ்யாம்னு ஒரு அகில இந்திய படத்தை நாளைக்கி ரிலீஸ் பண்ணுறேன். எவனாச்சும் கண்டுக்கறானா பாத்தியா?" என வேறலெவலில் ட்ரோல் செய்துள்ளார்.

காண்டான ரசிகர்கள்
இதுவரை அஜித் ரசிகர்களை வலிமை படத்தை வைத்து ஓட்டி வந்த நிலையில், இப்போ சூர்யா பக்கம் ப்ளூ சட்டை மாறன் திரும்பியுள்ளதை அறிந்த ரசிகர்கள் அவரை வழக்கம் போல கண்டபடி திட்டி வருகின்றனர். அடுத்த இலக்கு பீஸ்ட் தான் என்றும் விஜய் ரசிகர்கள் இவருக்கு சப்போர்ட் செய்ய வேண்டாம் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதெல்லாம் எங்கே போய் முடியப்போகுதோ!