அப்பாடா.. கோட் பட வரவேற்பையடுத்து அஜித்தின் ரியாக்ஷன் இதுதானா.. அடங்க மாட்டேங்கறாரே ப்ளூ சட்டை மாறன்

சென்னை: நடிகர் விஜய்யின் கோட் படம் நேற்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் உருவாகி நேற்றைய தினம் வெளியாகியுள்ளது கோட். படத்தில் அப்பா மற்றும் மகன் என இருவேறு கேரக்டர்களில் விஜய் நடித்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் முன்னதாக மாநாடு படம் டைம் லூப் பாணியில் உருவாகி வெளியான நிலையில், கோட் படத்திலும் சயின்ஸ் பிக்ஷன் கதைக்களத்தை கையாண்டுள்ளார் வெங்கட் பிரபு. இந்தப் படம் முன்னதாக வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான அஜித்தின் மங்காத்தா படத்திற்கு டஃப் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

vijay ajithkumar blue sattai maaran

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் கோட் படம் மிக பிரம்மாண்டமான அளவில் உருவாகி நேற்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. இந்தப் படத்தில் அப்பா மற்றும் மகன் என இருவேறு கேரக்டர்களில் நடித்திருந்தார் விஜய். படத்தில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்திருந்தது. மேலும் நடிகர் சிவகார்த்திகேயன், திரிஷா உள்ளிட்டவர்களும் கேமியோ கேரக்டரில் படத்திற்கு மேலும் அட்ராக்ஷனை கூட்டியிருந்தனர். இந்நிலையில் கோட் படம் தற்போது கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.

vijay ajithkumar blue sattai maaran

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் இந்தப் படத்தின் வரவேற்பு குறித்து தொடர்ந்து தன்னுடைய விமர்சனத்தில் பேசியுள்ளார். படத்தின் கதையை சிறிய அளவில் கூறியுள்ள அவர், ரசிகர்கள் எதிர்பார்ப்பை காட்டிலும் இந்தக் கதை கேவலமாகத்தான் இருப்பதாக கூறியுள்ளார். டீ ஏஜிங் தொழில்நுட்பத்தால் இந்தப் படத்திற்கு என்ன உபயோகம் என்றும் ப்ளூ சட்டை மாறன் கேள்வி எழுப்பியுள்ளார். இதனிடையே, வெங்கட் பிரபு அடுத்ததாக சிவகார்த்திகேயனின் படத்தை இயக்கவுள்ளது குறித்தும் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் சுட்டிக் காட்டியுள்ளார் ப்ளூ சட்டை மாறன். ரசிகர்கள் இதைப் பார்த்து தற்போதே கடுப்பாகியுள்ளனர்.

கோட் படத்தை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்: படத்தில் மங்காத்தா, படையப்பா, தூள் உள்ளிட்ட படங்களின் ரெபரென்ஸ் காட்சிகள் உள்ளதையும் ப்ளூ சட்டை மாறன் சுட்டிக் காட்டியுள்ளார். முன்னதாக இந்தப் படத்தின் வெற்றிக்கு அஜித் தனக்கு வாழ்த்து தெரிவித்ததாக வெங்கட் பிரபு கூறியிருந்தார். இந்நிலையில் அஜித்தை வைத்தும் கோட் படத்தை கலாய்த்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். முன்னதாக அஜித்தின் மங்காத்தா என்ற தரமான படத்தை கொடுத்து ரசிகர்களை கவர்ந்தவர் வெங்கட் பிரபு. அந்தப் படத்தை காட்டிலும் கோட் படம் தரமாக வந்துள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த விமர்சனம் குறித்தும் தற்போது சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் கலாய்த்து வருகின்றனர்.

vijay ajithkumar blue sattai maaran

அஜித் நிம்மதி?: கோட் படத்தை காட்டிலும் மங்காத்தா பல மடங்கு சிறப்பான படம் என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, கோட் படத்தின் கலவையான விமர்சனங்களால் அஜித்குமார் தற்போது நிம்மதி அடைந்துள்ளதாக ப்ளூ சட்டை மாறன், வடிவேலு போஸ்டருன் கலாய்த்துள்ளார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பில் உருவாகியுள்ள கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் முதல் நாளிலேயே கோட் படம் சர்வதேச அளவில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள போதிலும் வசூலில் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X