ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தை பார்த்த விஜய்.. சும்மா இருப்பாரா ப்ளூ சட்டை மாறன்?
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் இன்றைய தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. சிறப்பு காட்சிகளுடன் ரிலீசாகியுள்ள வேட்டையன் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பிரபலங்களும் தங்களுடைய வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விஜய் சென்னை தேவி திரையரங்கில் வேட்டையன் படத்தின் FDFSவை சென்று பார்த்துள்ளார். இந்நிலையில் படத்தைப் பார்த்துவிட்டு அவரது ரியாக்ஷன் குறித்து ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரஜினிகாந்தை பல விஷயங்களிலும் தொடர்ந்து ட்ரோல் செய்து வரும் ப்ளூ சட்டை மாறன் தற்போது இந்த விஷயத்தையும் கையில் எடுத்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் இன்றைய தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த இந்தப் படம் இன்றைய தினம் ரிலீசாகியுள்ள நிலையில் படம் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளது. படத்திற்கு சிறப்பான விமர்சனங்கள் கிடைத்துவரும் நிலையில் படத்தின் பாடல்களும் மிகப்பெரிய தாக்கத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக படத்தின் டைட்டில் சாங்காக உருவாகியுள்ள மனசிலாயோ பாடல் துவக்கத்திலேயே ரசிகர்களை கொண்டாட்டத்துடன் படத்தை பார்க்க வைத்துள்ளது.
வேட்டையன் படம்: இந்த படத்தை படக் குழுவினர் மற்றும் ரஜினிகாந்தின் குடும்பத்தினர் உள்ளிட்டவர்கள் திரையரங்கில் நேரில் சென்று பார்த்த நிலையில் இன்றைய தினம் தேவி திரையரங்கில் முதல் நாள் முதல் ஷோவாக நடிகர் விஜய்யும் வேட்டையன் படத்தை சென்று பார்த்துள்ளார். இது குறித்து தற்போது தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இந்த விஷயத்தை ப்ளூ சட்டை மாறன் தற்போது தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் ட்ரோல் செய்துள்ளார். தேவி திரையரங்கில் சென்று படத்தை பார்த்து விட்டு வந்த நடிகர் விஜய் அப்பாடா என்று பெருமூச்சு விடுவதாக அவர் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ட்ரோல் செய்த ப்ளூ சட்டை மாறன்: நடிகர் விஜய் மற்றும் ரஜினி ரசிகர்கள் இடையே நீண்ட காலங்களாக ஒரு வகையான பனிப்போர் நடந்து வருகிறது. ரஜினிகாந்தின் படங்களுக்கு விஜய் ரசிகர்கள் எப்போதுமே நெகட்டிவ் கமெண்ட்களை மட்டுமே கூறி வருகின்றனர். அந்த வகையில் வேட்டையன் படத்திற்கும் அவர்கள் நெகட்டிவ் கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தை பார்த்துவிட்டு தான் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதாக நடிகர் விஜய் பெருமூச்சு விடுவதாக ப்ளூ சட்டை மாறன் தற்போது கமெண்ட் பதிவு செய்துள்ளார்.
ரஜினிக்கு எதிரான பதிவுகள்: இதை பார்த்த விஜய் ரசிகர்கள் நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்கள் அவரை சமூக வலைதள பக்கத்தில் வறுத்தெடுத்து வருகின்றனர். எப்போதுமே ரஜினிகாந்த்திற்கு எதிரான கருத்துக்களை மட்டுமே பதிவிட்டு வருகிறார் ப்ளூ சட்டை மாறன். அந்த வகையில் தற்போதும் இந்த பதிவின் மூலம் அதை தொடர்ந்துள்ளார். இதற்கு முந்தைய பதிவிலும் நடிகர் ரஜினிகாந்தின் வயதை பதிவிட்டுள்ளார். அடுத்தடுத்து இவரது இத்தகைய விமர்சனங்கள் தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.



Click it and Unblock the Notifications











