இது எப்படி இருக்கப் போவுதோ.. ரஜினியின் வேட்டையன் பட ஏஐ தொழில்நுட்பத்தை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் இன்னும் இரு வாரங்களில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பான் இந்தியா படமாக இந்த படம் ரிலீசாகவுள்ள நிலையில், படத்திற்கு அனைத்து மாநிலங்களிலும் மிகப்பெரிய வரவேற்பும் எதிர்பார்ப்பும் காணப்படுகிறது.
இந்தப் படத்தின்மூலம் முதல்முறையாக தமிழில் என்ட்ரி ஆகிறார் நடிகர் அமிதாப்பச்சன். இந்நிலையில் அமிதாப்பச்சனுக்கு இந்த படத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் டப்பிங் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பிரகாஷ்ராஜ் வாய்சை பயன்படுத்தி இது நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தற்போது ப்ளூ சட்டை மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்: ரஜினிகாந்தின் வேட்டையன் படம் இன்னும் இரு வாரங்களில் திரையரங்குகளை அதிரவைக்க தயாராகி வருகிறது. படத்தின் ரிலீசுக்கு சில தினங்களே உள்ள நிலையில் தற்போதைய வேட்டையன் ஃபீவரை ரசிகர்கள் என்ஜாய் செய்து வருகின்றனர். தொடர்ந்து படத்தின் ரிலீசை திருவிழாவாக கொண்டாடவும் தயாராகி வருகின்றனர். இந்தப் படததின் சென்சார் நிறைவடைந்துள்ளதாகவும் படத்திற்கு U/A சான்று கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. படத்தைப் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் அதிர்ந்து போனதாகவும் படத்தை வெகுவாக பாராட்டியதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
அமிதாப்பச்சன் டப்பிங்: இந்நிலையில் இந்த படத்தில் அமிதாப்பச்சனுக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் குரல் கொடுத்துள்ளதாகவும் அவரது குரலை ஏஐ தொழில்நுட்பம் மூலம் அமிதாப்பின் வாய்சாக மாற்றி உள்ளதாகவும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, வழக்கம் போல ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களை கலாய்த்து வரும் ப்ளூ சட்டை மாறன் இந்த விஷயத்தையும் தற்போது கலாய்த்து பதிவிட்டுள்ளார். இந்த தகவலை போஸ்டராக வெளியிட்டுள்ள அவர், இது எப்படி இருக்கப் போகிறதோ என்று கேள்வி எழுப்பி உள்ளார். முன்னதாக விஜய்யின் கோட் படத்திலும் ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்ட நிலையில் தற்போது ப்ளூ சட்டை மாறனின் இந்த கேள்வி கலாய்ப்பதாக அமைந்துள்ளது.
ஏஐ தொழில்நுட்பம்: ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாக கூறி ஒரிஜினலை சில படக்குழுவினர் வீணாக்கி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்தப் படத்திலேயே மறைந்த மலேசியா வாசுதேவனின் குரலை ஏஐ தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தியுள்ளனர். அந்த வகையில் ஏஐ தொழில்நுட்பத்தை அனைத்து விஷயங்களிலும் பயன்படுத்தாமல் சில தவிர்க்க முடியாத சூழல்களில் பயன்படுத்தலாம் என்று நிபுணர்கள் கூறுவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் அமிதாப்பச்சனுக்கு இந்தி, ஆங்கிலம் தவிர்த்து மற்ற மொழிகள் தெரியாத நிலையில் அவரது வாய்சிற்கு ஏஐ பயன்படுத்தப்பட்டுள்ளது.
ப்ளூ சட்டை மாறன் கேள்வி: வேட்டையன் படத்தில் ரஜினிக்கு அடுத்தப்படியாக மிகவும் அழுத்தமான கேரக்டரில் அமிதாப்பச்சன் நடித்துள்ள நிலையில், அவருக்கு ஏஐ தொழில்நுட்பத்தை பட குழுவினர் பயன்படுத்தியுள்ளனர். வழக்கமாக அவருக்கு மற்ற நடிகர்கள் வாய்ஸ் கொடுப்பது இருந்து வந்த நிலையில் தற்போது இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவரது வாய்ஸ் அனைத்து மொழிகளிலும் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் கண்டிப்பாக ப்ளூ சட்டை மாறனுக்கு இருந்த சந்தேகமே ரசிகர்களுக்கும் எழுந்துள்ளது. இது எப்படி இருக்கப் போகிறதோ?


Click it and Unblock the Notifications











