ரஜினிகாந்த்: ஆயுதபூஜை ரேஸ்ல கோல்ட் மெடல் எனக்குதான்.. வேட்டையன் படத்தை வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் ஆயுதபூஜை விடுமுறையை மையமாக வைத்து வரும் அக்டோபர் 10ம் தேதி ரிலீசாகவுள்ளது. முன்னதாக இந்த தேதியில் சூர்யாவின் கங்குவா படமும் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இந்த ரேஸிலிருந்து கங்குவா படம் விலகியுள்ளது.
நேற்றைய தினம் நடைபெற்ற மெய்யழகன் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா, மூத்தவர் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்திற்கு வழிவிடுவோம் என்றும், கங்குவா ஒரு குழந்தை அதை நீங்கள் பார்த்துக் கொள்வீர்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தார். விரைவில் படத்தின் ரிலீஸ் குறித்து அறிவிக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே இயக்குநர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள வேட்டையன் படம் ஆயுதபூஜை வெளியீடாக வரும் அக்டோபர் 10ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், பகத் ஃபாசில் உள்ளிட்டவர்கள் இணைந்துள்ள நிலையில் படத்தின் டப்பிங் பணிகளில் தற்போது ரஜினிகாந்த் ஈடுபட்டுள்ளார். இன்னும் ஒரு மாதத்தில் படம் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
ரிலீஸ் தள்ளிப்போகும் கங்குவா: இதனிடையே, அக்டோபர் 10ம் தேதி சூர்யாவின் கங்குவா படமும் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த ரேஸில் ரஜினிகாந்த் இணைந்துள்ள நிலையில், கங்குவா படத்தின் ரிலீஸ் திட்டமிட்டபடி நடக்குமா என்பது குறித்து சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் கார்த்தியின் மெய்யழகன் படத்தின் இசை வெளியீட்டில் கலந்துக் கொண்ட சூர்யா, கங்குவா படத்தின் ரிலீஸ் தள்ளிப் போவதாக அறிவித்திருந்தார். மூத்தவர் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்திற்கு வழி விடுவோம் என்றும், கங்குவா ஒரு குழந்தை என்றும் அதை ரசிகர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றும் தெரிவித்திருந்தார். விரைவில் ரிலீஸ் குறித்து அறிவிக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்: இந்நிலையில், சூர்யாவின் இந்த முடிவு குறித்து ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் கேள்வி எழுப்பி வருகிறார். போட்டி என்று வந்துவிட்டால் தைரியமாக மோத வேண்டும் என்றும் வேட்டையனுக்கு பயந்து கோட்டையை விட்டு ஓடலாமா சூர்யா என்று நேரிடையாகவே கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு பொங்கல் ரிலீசில் ரஜினியின் பேட்ட படத்துடன் மோதி அஜித்தின் விஸ்வாசம் படம் அதிக வசூலை பெற்றதையும் சுட்டிக் காட்டியுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்: இதனிடையே அடுத்த பதிவில் ஆயுதபூஜை ரேசில் கோல்ட் மெடல் எனக்குத்தான் என்று வேட்டையன் படம் கூறுவதாகவும் ரேசில் எத்தனை பேர் ஓடுறாங்க என்று கேள்வி எழுப்பி, நான் மட்டும்தான் என்று கூறுவதாகவும் பதிவிட்டுள்ளார். தொடர்ந்து நடிகர் சுமனிடம் விவேக் அடிவாங்கும்படியான காமெடி காட்சியின் போஸ்டரையும் பகிர்ந்துள்ளார். தொடர்ந்து சூர்யா மற்றும் ரஜினியின் அடுத்தடுத்த பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











