100வது நாள் வெற்றியை கொண்டாடும் ராமராஜனின் சாமானியன்.. சைலண்டாக வச்சி செஞ்ச ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: நீண்ட காலங்களுக்கு பிறகு சாமானியன் என்ற படத்தின்மூலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்திருந்தார் நடிகர் ராமராஜன். 90களின் மிகப் பிரபலமான ஹீரோவாக பல வெற்றிப் படங்களை கொடுத்த இவருக்கு சாமானியன் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுக் கொடுத்தது.
ஒரு ராணுவ வீரர் ஒரு வங்கிக்குள் வெடிகுண்டு, துப்பாக்கி சகிதம் புகுந்த நிலையில், அதற்கான காரணத்தை இந்தப் படம் கூறும்வகையில் அமைந்திருந்தது. ஒரு ஆக்ஷன் படத்திற்கான அனைத்து அம்சங்களுடன் வெளியானது சாமானியன் படம். ஒரு வெற்றி நாயகனாக வலம்வந்த ராமராஜனின் ரசிகர்களுக்கு இந்தப் படம் ஏமாற்றத்தையே கொடுத்தது.

நடிகர் ராமராஜன்: நடிகர் ராமராஜனின் பல படங்கள் அவருக்கே போட்டியாக அமைந்தவை. 80களின் பிற்பாதியிலும் 90களின் துவக்கத்திலும் வெற்றிப்பட நாயகனாக வலம் வந்தவர் இவர். 44 படங்களில் நடித்துள்ள இவரது பல படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்து ரசிகர்களை கொண்டாட செய்தன. பல படங்களில் அரை ட்ரவுசர் போட்டுக் கொண்டு நடித்தே ஸ்கோர் செய்திருப்பார் ராமராஜன். ஒரு விபத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதில் இருந்து விலகிய ராமராஜன், அதிலிருந்து மீண்டு நீண்ட காலங்களுக்கு பிறகு சாமானியன் என்ற படத்தில் நடித்திருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தப் படம் வெளியானது.
சாமானியன் படம்: ஒரு ராணுவ வீரர் வங்கிக்குள் வெடிகுண்டுகள், துப்பாக்கி சகிதம் புகுந்த நிலையில், அதையொட்டி நடக்கும் அடுத்தடுத்த காட்சிகள், அதற்கான காரணங்கள் ஆகியவற்றை மையமாக வைத்து இந்தப் படத்தை ராகேஷ் இயக்கியிருந்தார். இந்தப் படம் புதுமையான கதை இல்லை என்றபோதிலும் ஆக்ஷன் படத்திற்கான அம்சங்களுடன் படம் வெளியானது. மக்கள் பிரச்சினையை மையமாக வைத்தே இந்தப் படம் வெளியானது. ஆயினும் சுறுசுறுப்பான நாயகனாக வலம்வந்த ராமராஜனை சிவந்த கண்களுடன், பெருத்த மற்றும் தளர்வான உடலுடன் பார்க்க அவரது ரசிகர்களே தயாராக இல்லை என்பதையே இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பு சுட்டிக் காட்டியது.
100 வெற்றிக் கொண்டாட்டம்: இந்நிலையில் சாமானியன் படம் 100 நாட்கள் வெற்றிகரமாக திரையில் ஓடியுள்ளதாக படக்குழுவினர் போஸ்டர் மூலம் தெரிவித்துள்ளனர். இந்த போஸ்டரை ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த போஸ்டரை வெளியிட்டு அவர் மறைமுகமாக படத்தை கலாய்த்துள்ளார். அவர் மட்டுமில்லாமல் ஏராளமான ரசிகர்களும் கலாய்த்து கமெண்ட் செய்து வருகின்றனர். எந்த தியேட்டர்ல ஓடுச்சி, ஒரு மனிதனுக்கு பிடிவாதம் இருக்கலாம்தான், ஆனால் இவர் அளவிற்கு என்று ஒரு ரசிகர் கமெண்ட் செய்துள்ளார். மற்றொருவரோ சாமானியன் படம் ரிலீஸ் ஆயிடுச்சா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
வச்சி செஞ்ச ப்ளூ சட்டை மாறன்: மற்றொரு ரசிகர் எந்த தியேட்டர்ல ஓடுச்சி என்று கேட்டுள்ளார். மேலும் ராமராஜன் தன்னுடைய கரகாட்டக்காரன் படத்தையே அவருடைய மதுரை நடனா திரையரங்கில் ஒரு வருடம் ஓட்டியதாக தெரிவித்துள்ளார். இப்படி ஒரு படம் வந்துச்சா, கேள்விப்படவே இல்லையே என்று அடுத்தடுத்து ரசிகர்கள் தொடர்ந்து ப்ளூ சட்டை மாறனின் இந்த பதிவின்கீழ் கலாய்த்து வருகின்றனர். முன்னணி நடிகர்கள், இயக்குநர்களையே டார்கெட் செய்து வந்த ப்ளூ சட்டை மாறன், ராமராஜனையும் விட்டு வைக்கவில்லை என்பதையே இந்த பதிவு காட்டுகிறது.


Click it and Unblock the Notifications











