“ஆன்டி இண்டியன்“.. வெரைட்டி மீம்ஸ் போட்டு கிழித்து தொங்க போடவும்… ப்ளூ சட்டை மாறன் ட்வீட் !
சென்னை : பெரிய பட்ஜெட் படமானாலும் சரி... சிறிய பட்ஜெட் படமானாலும் சரி தனது கருத்தை தயங்காது முன் வைத்து விமர்சனம் செய்பவர் ப்ளூ சட்டை மாறன்.
ப்ளு சட்டை மாறன் இயக்கி உள்ளத் திரைப்படம் தான் ஆன்டி இண்டியன் இத்திரைப்படம் டிசம்பர் 10ந் தேதி வெளியாக உள்ளது.
ப்ரிவ்யூ ஷோவில் இத்திரைப்படம் பார்த்து பரவலாக கருத்துக்கள் வந்துள்ள நிலையில், வெரைட்டி மீம்ஸ் போட்டு கிழித்து தொங்க போடவும் என ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆன்டி இண்டியன்
ப்ளூ சட்டை மாறனுக்கு சமூகவலைத்தள பக்கத்தில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருந்தாலும், அவரின் விமர்சனங்களால் கடுப்பானவர்களும் இருக்கிறார். தலைவலியும், வயிறு வலியும் தனக்கு வந்தாதான் தெரியும் நீ பட என வந்த சவாலை நேற்று ஆன்டி இண்டியன் திரைப்படத்தை இயக்கி உள்ளார்.

டிசம்பர் 10ந் தேதி ரிலீஸ்
ஆன்டி இண்டியன் திரைப்படத்தை இயக்கியது மட்டும் இல்லாமல், அப்படத்திற்கு தானே இசையமைத்து இசையமைப்பாளராகவும் மாறி உள்ளார் ப்ளூ சட்டை மாறன். இத்திரைப்படம் டிசம்பர் 3ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் திடீரென திரைப்படம் வெளியீட்டுத் தேதி தள்ளி வைக்கப்பட்டு டிசம்பர் 10ந் தேதி வெளியாகும் எனபடக்குழு அறிவித்தது.

பாராட்டினர்
இதையடுத்து ஆன்டி இண்டியன் திரைப்படத்தின் ப்ரிவ்யூ ஷோ நேற்று சென்னையில் பிரத்யேகமாக திரையிடப்பட்டது. இந்த படத்தை பார்த்த பாரதி ராஜா, சேரன், சீமான்,பாக்கியராஜ் ஆகியோர் வெகுவாக பாரட்டி உள்ளனர்.

உன் படம்னா வலிக்குதா
இந்நிலையில், ஒரு நெட்டிசன்ஸ், எத்தனை பேர் படத்தை நீ கிழிச்சுருப்ப... இப்ப உன் படத்தை கிழிக்கும் போது மட்டும் வலிக்குதா... என பதிவிட்டு சிறிது நேரத்திலேயே அதை டெலிட்டும் செய்துள்ளார். இணையவாசியின் இந்த பதிவிக்கு பதிலளித்த ப்ளூ சட்டை மாறன், காலையில் போணி செய்து வியாபாரத்தை துவக்கிய திரு. ரஞ்சித் அவர்களுக்கு மிக்க நன்றி என பதிவிட்டுள்ளார்.

வெரைட்டி மீம்ஸ் போடவும்
மேலும், இதெல்லாம் ஒரு படமா? சத்தியமா ஓடாது என்று பாராட்டிக்கொண்டிருக்கும் அன்பு நெஞ்சங்களுக்கு கோடான கோடி நன்றி. வெரைட்டி மீம்ஸ் போட்டு கிழித்து தொங்க போடவும். ப்ரமோஷனுக்கு உதவியாக இருக்கும். காலை நாஸ்டா முடிந்ததும்.. கமன்ட் செக்சனுக்கு உடனே வருகை தரவும். வாங்கோண்ணா.. வாங்கோ. என பதிவிட்டுள்ளார். இந்த திரைப்படம் வெளியாகும் முன்னதாக தணிக்கை குழு தரப்பிலேயே பல எதிர்ப்புகளை சந்தித்த நிலையில், படம் வெளியானால் யாரெல்லாம் பிரச்சனைகளை கிளப்ப போகிறார்கள் என்பது தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











