Nayanthara: நயன்தாரா கடிதத்துக்கு ப்ளூ சட்டை மாறன் சப்போர்ட்.. தனுஷுக்கு எதிராக சொன்னது இதுதான்!

சென்னை: தனுஷ் குறித்து நயன்தாரா வெளியிட்டுள்ள கடிதம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நயன்தாரா வெளியிட்டுள்ள கடிதத்தில் தனது திருமண டாக்குமெண்டரியை ரிலீஸ் செய்யவிடாமல் தனுஷ் தங்களுக்கு எந்த அளவுக்கு குடைச்சல் கொடுத்தார் என, மொத்தம் 3 பக்கங்களுக்கு எழுதியுள்ளார். இதுமட்டும் இல்லாமல், நானும் ரவுடி தான் படத்தின் படப்பிடிப்பின்போது, ஒரு காட்சி தொடர்பாக விக்னேஷ் சிவன் நயனிடம் விவரித்துக் கூறும் 3 நொடி வீடியோவுக்கு, ரூபாய் 10 கோடி கொடுத்தால் அனுமதி தருகின்றேன் என தனுஷ் கூறியதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ப்ளூ சட்டை மாறனின் கருத்து பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

நயன் அந்தக் கடிதத்தில், தனுஷின் பெயரைக் குறிப்பிட்டும் அவரது தந்தை கஸ்தூரி ராஜாவின் பெயரையும், சகோதரர் செல்வராகவன் பெயரையும் குறிப்பிட்டு கடிதத்தை தொடங்கியுள்ளார். கடிதத்தின் முதல் பத்தியிலேயே, தான் தனியாக சினிமாவிற்குள் நுழைந்து, இன்றைக்கு தான் இருக்ககூடிய உயரத்தில் தன்னைத் தானே நிலை நிறுத்திக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது தனுஷ்ஷை நேரடியாகவே அட்டாக் செய்யும் வகையில் இருப்பதாக பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

blue sattai maran dhanush nayanthara

மேலும் கடிதத்தில், தனுஷ் இசை வெளியீட்டு விழாக்களில் தனது ரசிகர்கள் முன்பு, நான் இந்தக் கடிதத்தில் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை பொய்யாகத் திரித்து, ஒரு கதையை உருவாக்கி, அதில் சில பஞ்ச் வசனங்களைச் சேர்த்து, அடுத்த இசை வெளியீட்டு விழாவில் பேச வாய்ப்புள்ளது. ஆனால் அதையும் கடவுள் பார்த்துக் கொண்டுதான் உள்ளார். மேடைகளில் பேசுவதைப்போல் ஒரு சதவீதம் கூட உங்களால் நடந்து கொள்ள முடியாது என்பது எனக்கும் எனது கணவருக்கும் நன்றாகவே தெரியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தனுஷ்- நயன்: மேலும் இரண்டு ஆண்டுகளாக எனது திருமண வீடியோ வெளியிடாமல் போனதற்கு தனுஷ்தான் ஒரே காரணம். நானும் ரவுடிதான் படத்தின் பாடல் வரிகளைக் கூட பயன்படுத்த தனுஷ் அனுமதி அளிக்கவில்லை. நானும் ரவுடிதான் படத்தின் வெற்றி உங்களை உளவியல் ரீதியாக பாதித்ததை நான் சினிமா நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்டேன். அன்பைப் பகிருங்கள் என்ற வார்த்தையை ஒருமுறையாவது உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

blue sattai maran dhanush nayanthara

ப்ளூ சட்டை மாறன்: இப்படியான நிலையில், முன்பே குறிப்பிட்ட, 'நான் இந்தக் கடித்ததில் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை பொய்யாகத் திரித்து, ஒரு கதையை உருவாக்கி, அதில் சில பஞ்ச் வசனங்களைச் சேர்த்து, அடுத்த இசை வெளியீட்டு விழாவில் பேச வாய்ப்புள்ளது. ஆனால் அதையும் கடவுள் பார்த்துக் கொண்டுதான் உள்ளார்.' என்ற செய்தித் துணுக்கினை பகிர்ந்த ப்ளூ சட்டை மாறன் தனது கருத்தையும் பகிர்ந்துள்ளார். அதாவது, அவர், "உண்மை. கோலிவுட் ஹீரோக்கள் செஞ்ச தப்பை ஒத்துக்கவே மாட்டாங்க.

blue sattai maran dhanush nayanthara

குட்டிக் கதை: ஆடியோ லாஞ்ச்ல ஆத்துவாங்க பாருங்க சென்டிமென்ட் டீயை.. ஆத்தாடி!! நம்மாளு இப்பவே ஸ்க்ரிப்டை ரெடி பண்ணி இருப்பாரு இப்படி.. 'ஒருவேளை சோத்துக்கு நான் பட்ட கஷ்டம் எனக்குதான் தெரியும். எல்லா சதிகளையும், துரோகங்களையும் தாண்டி.. இப்ப வளந்து நிக்கறேன். அதுக்கு காரணம் என் உயிரினும் மேலான ரசிகர்கள் நீங்கதான். என் வளர்ச்சி பிடிக்காம வதந்தி பரப்பறாங்க. ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்... Few minutes after kutti kadhai.. அதனால..எதை பத்தியும் கவலைப்படாம முன்னேறி போய்கிட்டே இருக்கனும். வெறுப்பு வேண்டாம். அன்பை விதைப்போம். ஓம் நமச்சிவாய" எனக் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X