KH X RK Promo: ரஜினியை விட்டுட்டு கமலை விளாசத் தொடங்கிய ப்ளூ சட்டை மாறன்.. உலகநாயகனுக்கே பஞ்சாயத்தா?

சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணைந்து நடிக்கும் KH X RK என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள படத்தின் ப்ரோமோ பிப்ரவரி 21ஆம் தேதி வெளியானது. இதைப் பார்த்த ரசிகர்கள், 47 ஆண்டுகளுக்குப் பின்னர் இருவரும் இணைந்து மீண்டும் ஒரே ஃப்ரேமில் நடித்துள்ளார்கள் என்று கொண்டாடி வருகிறார்கள். ப்ரோமோ யூடியூப் தளத்தில் மட்டும் இல்லாமல் தியேட்டர்களிலும் ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படி இருக்கையில் இந்த ப்ரோமோ குறித்து ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் கமல்ஹாசன் குறித்து கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ள போஸ்ட் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் தக் லைஃப். இந்த படத்தில் இருந்து தனது பெயருக்கு முன்னால் உலகநாயகன் என்று பயன்படுத்த வேண்டும் என்றும், தன்னை கமல்ஹாசன் என்று அழைத்தால் போதும் என்றும் கூறினார். இதற்காக தனி அறிக்கையும் விட்டார். அதேபோல் தக் லைஃப் படத்தில் கமல்ஹாசன் என்றே டைட்டில் கார்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Blue Sattai Maran About SK X RK Promo He Questioned Kamalhaasan Ulaganayan Title

இப்படி இருக்கையில் தற்போது KH X RK என்ற படத்தின் அறிவிப்பு ப்ரோமோவில் உலகநாயகன் கமல்ஹாசன் என்று குறிப்பிடப்பட்டு டைட்டில் கார்டு போடப்பட்டுள்ளது. இதுகுறித்து ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில், " இனி எனக்கு 'உலக நாயகன்' பட்டம் வேண்டாம். அதை என் படங்களில் பயன்படுத்த மாட்டேன் என்றார் கமல். இன்று ரஜினியுடன் அவர் நடிக்கும் பட ப்ரமோ வந்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

ப்ளூ சட்டை மாறன்: மேலும் ப்ளூ சட்டை மாறன் வழக்கமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தைத் தானே ஏதாவது விமர்சித்துக் கொண்டே இருப்பார். ஆனால் இந்த முறை ரஜினி இருந்தும் அவரை விட்டுவிட்டு உலகநாயகன் கமல்ஹாசனை விமர்சித்துள்ளாரா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் ஒரு ரசிகர் ஷார்ப் அப்சர்வேஷன் என்று கமெண்ட் போட்டுள்ளார்; அதற்கு ப்ளூ சட்டை மாறனோ சிரிக்கும் எமோஜியை பதிலாக பதிவிட்டுள்ளார்.

Blue Sattai Maran About SK X RK Promo He Questioned Kamalhaasan Ulaganayan Title

ரசிகர்கள் ரியாக்‌ஷன்: அதேபோல் மற்றொருவரோ உங்களுக்கு அதைப் பார்த்தால் வயிற்றெரிச்சல் ஆக இருக்கிறதா என்று கேள்வி கேட்டதற்கு, என்னப்பா பதில் இல்லையா என்று கமெண்ட் போட்டுள்ளார். அதேபோல் மேலும் சில இணையவாசிகள், விளையாட்டாகவும் நக்கலாகவும் கமெண்ட் போட்டு வருகிறார்கள். குறிப்பாக ஒருவர், " சரி..சரி.. இயல்பா விடுங்க.. இதுக்காக எல்லாம் வருத்த பட கூடாது !! எவையும் நிரந்தரம் இல்லை ! ஜஸ்ட் ஒரு பார்வையாளராக கடந்து செல்லவும் கிட்னிக்கு நல்லது" என்று நக்கலாக பதிவிட்டுள்ளார். ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் என்று போடும்போது கமல்ஹாசன் பெயரை எதுவும் இல்லாமல் போடும் போது நன்றாக இருக்காது என்று இயக்குநர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கலாம், அதனால் கமல் ஒப்புக் கொண்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X