twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பான் இந்தியா படமாக பொன்னியின் செல்வன் கவரவில்லை.. இந்தி வசூல் இவ்ளோ தான்.. ப்ளு சட்டை மாறன் ட்வீட்!

    |

    சென்னை: இந்த வாரம் இயக்குநர் மணிரத்னத்தை சீண்ட ஆரம்பித்து விட்டார் ப்ளூ சட்டை மாறன்.

    சிம்புவின் வெந்து தணிந்தது காடு பிரச்சனை பெரிதளவில் கைகொடுக்காத நிலையில், அடுத்த ரிலீஸான பொன்ன்யின் செல்வன் பக்கம் திரும்பி இருக்கிறார்.

    தனது விமர்சனத்திலேயே செம ட்விஸ்ட் வைத்து அவர் விமர்சித்து இருந்தது திரைத்துறையிலேயே பலரையும் கடுப்பாக்கி உள்ளது.

    பொன்னியின் செல்வன் வந்ததும் ராஜ ராஜ சோழன் பற்றிய வெற்றிமாறன் பேச்சு.. ஆதரவும்.. எதிர்ப்பும்! பொன்னியின் செல்வன் வந்ததும் ராஜ ராஜ சோழன் பற்றிய வெற்றிமாறன் பேச்சு.. ஆதரவும்.. எதிர்ப்பும்!

    150 கோடி வசூல்

    150 கோடி வசூல்

    இந்த ஆண்டு வெளியான விஜய்யின் பீஸ்ட், அஜித்தின் வலிமை உள்ளிட்ட படங்கள் அதிக பட்சமாகவே 200 கோடி வரை தான் வசூல் ஈட்டின. கமல்ஹாசனின் விக்ரம் படம் மட்டும் தான் 400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் வெளியான 2 நாட்களில் 150 கோடிக்கும் அதிகமான வசூல் செய்துள்ளதாகவும் ஓவர்சீஸில் மிகப்பெரிய வரவேற்பு இந்த படத்துக்கு உள்ளதாகவும் கூறுகின்றனர்.

    இலங்கையில் உருகிய ரசிகர்கள்

    இலங்கையில் உருகிய ரசிகர்கள்

    இலங்கையில் பொன்னியின் செல்வன் படத்தை பார்த்த ரசிகர்கள் இயக்குநர் மணிரத்னம் கதையை திரையில் படமாக காட்டி அசத்தி விட்டார். இப்படியொரு படமாக பொன்னியின் செல்வன் வந்துள்ளதை பார்த்து உணர்ச்சி வசப்பட்டேன் என வயதான பொன்னியின் செல்வன் புத்தக பிரியர்களே சொல்லி இருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

    நெகட்டிவ் விமர்சனம்

    நெகட்டிவ் விமர்சனம்

    தனுஷின் நானே வருவேன் படத்துக்கு இந்த வாரம் பாசிட்டிவ் விமர்சனத்தை சொன்ன ப்ளூ சட்டை மாறன் பொன்னியின் செல்வன் படத்தை மகா மட்டமாக கழுவி ஊற்றி இருந்தார். மணிரத்னம் ரசிகர்கள் மற்றும் ஜெயம் ரவி, கார்த்தி, சியான் விக்ரம் ரசிகர்கள் எல்லாம் வரிசையாக வந்து அவரை கமெண்ட்டுக்கு கீழ் வெளுத்து வாங்கினர்.

    இந்தியில் வசூல் குறைவு

    இந்தியில் வசூல் குறைவு

    இந்நிலையில், தற்போது இந்தியில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் இதுவரை 4.35 கோடி தான் வசூல் செய்துள்ளது. ஒரு பிரம்மாண்ட படத்துக்கு அங்கே இந்த நிலைமை தான் என ட்வீட் போட்டு கலாய்த்துள்ளார். இயக்குநர் மணிரத்னம் ரசிகர்களை கவரும் வகையில் பொன்னியின் செல்வனை எடுக்கவில்லை என குற்றம்சாட்டி உள்ளார்.

    பான் இந்தியா படமில்லை

    பான் இந்தியா படமில்லை

    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் படத்தை டப் செய்து வெளியிட்டால் மட்டும் அது பான் இந்தியா படமில்லை. பான் இந்தியா ரசிகர்களை கவரும் வகையில் இயக்குநர் மணிரத்னம் படத்தின் மூலம் எந்தவொரு பிரம்மிப்பையும் ஏற்படுத்தவில்லை என ட்வீட் போட்டுள்ளார்.

    பணம் போட்டுருந்தா

    பணம் போட்டுருந்தா

    "உன் அக்கௌன்ட்ல ஒரு அமௌன்ட் போட்டு இருந்தா படம் இந்நேரம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்குன்னு சொல்லி இருப்பே..!" என ப்ளூ சட்டை மாறன் காசுக்காக விமர்சனம் செய்பவர் என நெட்டிசன்கள் கிண்டலடித்து அவருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். அடுத்த வாரம் வேறு எந்தவொரு பெரிய படமும் இல்லாத நிலையில், தீபாவளி வரை பொன்னியின் செல்வனும், மணிரத்னமும் தான் ப்ளூ சட்டை மாறனுக்கு கண்டென்ட்டா என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

    English summary
    Blue Sattai Maran again pulls Mani Ratnam leg with PS1 hindi collections. Ponniyin Selvan fans slams him with befitting comments and shares worldwide collection reports to him.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X