525 கோடியாம்.. அமைதியா இரு.. விஜயகாந்த் வீடியோவை போட்டு வெறுப்பேற்றிய ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக ஜெயிலர் படத்தின் வசூல் 525 கோடி ரூபாய் என போட்டதில் இருந்தே ப்ளூ சட்டை மாறனை ஆளை காணோமே என நெட்டிசன்கள் அவர் ஷேர் செய்து வரும் மற்ற போஸ்ட்டுக்கு கீழ் சென்று வம்பிழுத்து வந்தனர்.
ஜெயிலர் படத்தின் முதல் நாள் வசூலை பாக்ஸ் ஆபிஸ் டிராக்கர்களான மனோபாலா, ரமேஷ் பாலா சொல்லியதில் இருந்தே வடை வடை என அதிக வடைகளை ப்ளூ சட்டை மாறன் சுட்டு வந்த நிலையில், 525 கோடி வசூலை ரியலாகவே வசூலித்து ரியல் சூப்பர்ஸ்டார் என்பதை ரஜினிகாந்த் நிரூபித்து விட்டார் என ரஜினி ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை பயங்கரமாக ஓட்டி வருகின்றனர்.

உடனே மீண்டும் பார்த்திபன் பக்கம் சென்ற ப்ளூ சட்டையை தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் தொல்லை செய்த நிலையில், மீண்டும் ஒரு போஸ்ட்டை ஜெயிலர் படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை ட்ரோல் செய்தே போட்டுள்ளார்.
விஜய்யும் ப்ளூ சட்டையும் தான் காரணம்: வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சரத்குமார் சூப்பர்ஸ்டார் என புகழும் போதே ரஜினி தான் சூப்பர்ஸ்டார் என்று விஜய் சொல்லியிருந்தாலே ஜெயிலர் படத்துக்கு இவ்ளோ வசூல் வராம இருந்திருக்கும் என ரஜினி ரசிகர்களே கலாய்த்து வருகின்றனர்.
மேலும், ப்ளூ சட்டை மாறன் தினமும் கொடுத்த காசுக்கு மேல கூவுவதை போல தொடர்ந்து நெகட்டிவிட்டியை பரப்ப அதுவே படத்தின் பாக்ஸ் ஆபிஸுக்கு ப்ரோமோஷனாக மாறிவிட்டது என்கின்றனர்.
சவுக்கடி கொடுத்த சன் பிக்சர்ஸ்: பீஸ்ட் படத்துக்கு பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்டை அதிகாரப்பூர்வமாக வெளியிடாத சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஜெயிலர் படத்துக்கு வசூல் நிலவரத்தை செம மாஸாக 525 கோடி என்றே அதிகாரப்பூர்வமாக அறிவித்து ஹேட்டர்களுக்கும் வடை, வடை என வடை சுட்ட ப்ளூ சட்டை மாறனுக்கும் சரியான சவுக்கடி கொடுத்துள்ளது என ரஜினிகாந்த் ரசிகர்கள் அலப்பறையை கிளப்பி உள்ளனர்.
பொங்கிய ப்ளூ சட்டை: '525 கோடியாம்'.. 'அமைதியா இரு'.. கேக் வெட்டி.. சக்ஸஸ் மீட் கொண்டாடி ...' , 'நீயும் கத்தாத. நிச்சயம் பேசுவோம்' என விஜயகாந்த் மேடையில் பேசிய வீடியோ ஒன்றை பதிவிட்டு பதிலடி கொடுத்துள்ளார். ரஜினிகாந்த் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது குறித்து ப்ளூ சட்டை விமர்சனம் செய்ததற்கு பலரும் ஆதரவளித்தனர். ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு பின்னரும் வன்மத்தை ஏன் கக்குறீங்க என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











