ஜெயிலரை கழுவி ஊத்தியாச்சு.. ஜவான் லைன்ல இருக்கு.. அதுக்குள்ள சேரனை வம்பு இழுத்த ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் லட்சுமி கிரியேஷன் சார்பில் உருவாகி இருக்கும் படம் தான் தமிழ் குடிமகன்.

இதில்,சேரன், ஸ்ரீ பிரியங்கா, லால், எஸ்ஏசி மற்றும் பலர் நடித்துள்ள இத்திரைப்படம் நேற்று திரையரங்கில் வெளியானது.

ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தள பக்கத்தில் தமிழ்குடிமகன் படத்தை விமர்சிக்கும் வகையில் இயக்குநர் சேரனுக்கு பெரிய கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

Blue sattai maran An open letter to director Cheran

ப்ளூ சட்டை மாறன் கடிதம்: அதில், தலைமகன், அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, மாயக்கண்ணாடி, ஆடும் கூத்து, பிரிவோம் சந்திப்போம், ராமன் தேடிய சீதை, பொக்கிஷம், மூன்று பேர் மூன்று காதல், முரண், ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை, திருமணம், ராஜாவுக்கு செக், ஆனந்தம் விளையாடும் வீடு. மொத்தம் 13 படங்கள். இவற்றில் சிலவற்றில் நீங்கள் இயக்குனர், எழுத்தாளர் அல்லது தயாரிப்பாளர். பலவற்றில் நீங்கள் கதையின் நாயகன், நாயகர்களில் ஒருவர் அல்லது முக்கியமான கெஸ்ட் ரோல் செய்துள்ளீர்கள்,

வெற்றியா தோல்வியா: யுத்தம் செய், சென்னையில் ஒருநாள் போன்றவை சுமாரான/நல்ல வெற்றியை பெற்றிருக்கலாம். ஆனால் மற்ற 13 படங்களும் வசூல் ரீதியில் வெற்றியா தோல்வியா என்பது உங்களுக்கும், மக்களுக்கும் நன்கு தெரியும். மேற்குறிப்பிட்டவற்றில் சில படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றிருக்கலாம் அல்லது விருதுகளை வென்றிருக்கலாம், ஆனால் இவற்றுக்கு முன்பு நீங்கள் இயக்கிய அல்லது நடித்த படங்களைப்போல இவையெல்லாம் வசூலில் சோபிக்காமல் போனதற்கு காரணங்கள் பின்வருமாறு:

தயாரிப்பாளராக, இயக்குனராக, தரமான படைப்பை தேர்வு செய்து இருந்தாலும்.. (வெகுஜன) மக்களின் ரசனையோடு ஒத்துப்போகுமா என்பது தெரியாமல் நீங்கள் இன்றுவரை இருந்து வருவது. நடிகராக நீங்கள் செய்து வருவதும் இதையேதான்.

18 ஆண்டுகள்: கடைசியாக நல்ல விமர்சனம், வசூல், தேசிய விருது என மூன்றையும் ஏகபோகமாக பெற்ற படம் தவமாய் தவமிருந்து, வெளியான ஆண்டு 2005. ஆக.. தற்போது வரை 18 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஒரு படைப்பாளி அல்லது நாயகனின் ஒருசில படங்கள் வசூலில் தோற்பது இயல்பு அல்லது சில ஆண்டுகள் தேக்கநிலை ஏற்படவும் செய்யும். ஆனால் 18 ஆண்டுகள் இப்படியே தொடர்கிறது என்றால்?

எக்காரணம் கொண்டும் மக்களின் ரசனையை தவறென்று சொல்லி விட வேண்டாம். அவர்களின் ரசனை மேம்பட்டு இருந்ததால்தான் பாரதி கண்ணம்மா, பொற்காலம், வெற்றிக்கொடி கட்டு, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து போன்ற படங்களுக்கு திரையரங்கில் ஆதரவு தந்தனர்

நீங்கள் பெரிய ஹீரோ: தேசிய கீதம், பாண்டவர் பூமி, சொல்ல மறந்த கதை, மாயக்கண்ணாடி போன்றவை பெரிதாய் வசூலை ஈட்டவில்லை என்றாலும் இன்றுவரை விமர்சகர்கள் மற்றும் மக்களால் பேசப்படும் படைப்புகளாக உள்ளன. எனக்கு பெரிய ஹீரோக்கள் கால்ஷீட் தருவதில்லை என்கிறீர்கள். விஜய் முதல் விஜயசேதுபதி வரை சில பெயர்களை குறிப்பிட்டு வந்தீர்கள். நீங்கள் இயக்கும் படத்திற்கு. உங்களை விட பெரிய ஹீரோ யாருமே தேவையில்லை என்பதே உண்மை.

தரமான கதை: பெரிய ஹீரோக்கள் இல்லாவிட்டால் படம் வியாபாரம் ஆகாது. அப்படியே ஆனாலும் அது ஓடாது என்பது கட்டுக்கதை. அதற்கு ஏகப்பட்ட உதாரணங்கள் உண்டு. அவற்றில் சிலவற்றை மற்றும் குறிப்பிடுகிறேன். இவையெல்லாம் சிறிய பட்ஜெட்டில் அல்லது சிறிய ஹீரோக்கள் நடித்த படங்கள்தான். லவ் டுடே, குட் நைட், டாடா, போர்த்தொழில்.

மக்கள் விரும்பும் படம்: மட்டமான மசாலா படங்களை மட்டுமே தற்போது மக்கள் பார்க்கிறார்கள். சிறிய படங்களை காண தியேட்டருக்கு வருவதில்லை என்று சொல்லும் பொய்யை இந்தப்படங்கள் முறியடித்துள்ளன. ஆகவே அந்த பழியையும் மக்கள் மேல் போட்டுவிட இயலாது. இந்த நான்கும்.. இரண்டாம் தர மசாலா படங்கள் இல்லை என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்க்குடிமகன் பாக்ஸ் ஆபீஸ்: ஆகவே இந்த 18 ஆண்டுகளில் உங்களது 13 படங்களும் வசூலில் அடைந்த ரிசல்டிற்கு இயக்குனர், தயாரிப்பாளர் அல்லது நடிகராக உங்களது கதை/திரைக்கதை தேர்வுகளே காரணம். தற்போது வெளியாகியுள்ள தமிழ்க்குடிமகனின் பாக்ஸ் ஆபீஸ் ரிசல்ட் விரைவில் தெரிந்து விடும்.

சேரனின் பதில் என்ன: அடுத்ததாக கன்னட நடிகர் கிச்சா சுதீப்பை வைத்து நீங்கள் இயக்கப்போகும் அதிரடி ரத்தக்காவியம் மக்களிடையே எப்படியான ஆதரவைப்பெறும் என்பதை காலம் தீர்மானிக்கும் என முழுக்க முழுக்க சேரனை வம்பு இழுக்கும் வகையில் ப்ளு சட்டை மாறன் நீண்ட கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். இதற்கு சேரன் என்ன பதில் சொல்கிறார் என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X