பயில்வான் ரங்கநாதன், ப்ளூ சட்டை மாறன் எல்லாம் சமூக விரோதிங்க.. மேடையில் கொந்தளித்த கம்பம் குணா!
சென்னை: நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் தொடங்கி சினிமா விமர்சகர்களான பயில்வான் ரங்கநாதன், ப்ளூ சட்டை மாறன் வரை அத்தனை பேரும் சமூக விரோதிங்க என சமூக விரோதி படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கம்பம் குணா பேசியதற்கு மேடையிலேயே பலரும் எதிர்ப்பு தெரிவித்து பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
தென் மேற்கு பருவக்காற்று உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள நடிகர் கம்பம் குணா அரசியல்வாதிகளையும் தொடர்ந்து விமர்சித்து பேசி வருகிறார். இந்நிலையில், சினிமா மேடையையே அரசியல் மேடை போல மாற்றி பல பிரபலங்களை சமூக விரோதியாகவே ஆக்கி விட்டார்.

சமூக விரோதி இசை வெளியீட்டு விழா: இயக்குநர் சியோன் ராஜா இயக்கத்தில் நடிகர் பிரஜின் நடிப்பில் உருவாகி உள்ள சமூக விரோதி படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இசை வெளியீட்டு விழாவா அல்லது அரசியல் மாநாடா என்றே தெரியாத அளவுக்கு திருமுருகன் காந்தி, நாஞ்சில் சம்பத், கம்பம் குணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் கே. ராஜன் உள்ளிட்டோரும் ஏகப்பட்ட விஷயங்களை அந்த நிகழ்ச்சியில் பேசியுள்ளனர்.
ரஜினி முதல் ப்ளூ சட்டை, பயில்வான் வரை: அந்த நிகழ்ச்சியில் மைக் கிடைத்தவுடன் டைட்டிலை வைத்து அனல் தெறிக்க பேசுகிறேன் என்கிற நினைப்பில் கம்பம் குணா யார் சமூக விரோதி தெரியுமா என ஆரம்பித்து நடிகர் ரஜினிகாந்த் சமூக விரோதி, கமல் ஒரு சமூக விரோதி, விஜய் சமூக விரோதி, கூல் சுரேஷ் சமூக விரோதி, சினிமாவில் வரும் காசை சாப்பிட்டுக் கொண்டு சினிமாவையே கேவலப்படுத்தி வரும் ப்ளூ சட்டை மாறன் ஒரு சமூக விரோதி, நடிகர்கள் பற்றிய அவதூறுகளை பரப்பும் பயில்வான் ரங்கநாதன் ஒரு சமூக விரோதி என பொங்கி விட்டார்.

இஷ்டத்துக்கு பேசக்கூடாது: மைக் கிடைத்து விட்டது என இஷ்டத்துக்கு பேசக் கூடாது. நடிகர்கள் காவிரி பிரச்சனைக்கு என்ன பண்ண முடியும். ஓட்டுப் போட்ட அரசியல்வாதிகளை ஏன் கேள்வி கேட்க மாட்றீங்க, அதிமுக, திமுகன்னு இத்தனை ஆண்டுகள் நம்மை ஆண்டவர்களை கேள்வி கேட்க முடியுமா? அதை விட்டு விட்டு சினிமா பிரபலங்களை இந்த பிரச்சனையில் இழுப்பது சரியல்ல என மேடையிலேயே கம்பம் குணாவை வாயடைக்க செய்து விட்டனர். அந்த வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











