Blue Sattai Maran: டாப் 4 ஹீரோஸ்... பட்டியல் போட்ட ப்ளூ சட்டை... படையல் வைத்த ரஜினி ரசிகர்கள்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது.
பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியை காண ரஜினி ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
மேலும், இசை வெளியீட்டு விழாவில் ரஜினி என்ன பேசப் போகிறார் என்ற ஆர்வமும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ரஜினி ரசிகர்களை வம்பிழுக்கும் வகையில் கோலிவுட்டின் டாப் 4 ஹீரோக்கள் பட்டியலை வெளியிட்டு அதிரடி காட்டியுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

கோலிவுட்டின் டாப் 4 ஹீரோஸ்:திரைப்படங்களுக்கு அதிரடியாக சினிமா விமர்சனம் செய்து பிரபலமானவர் ப்ளூ சட்டை மாறன். ஆண்டி இண்டியன் என்ற படத்தையும் இயக்கி மாஸ் காட்டினார். இவரது விமர்சனத்தை பார்த்த பின்னரே எந்தப் படத்துக்கு டிக்கெட் புக் பண்ணலாம் என ரசிகர்கள் முடிவெடுக்கும் அளவிற்கு பிரபலமாகிவிட்டார். அதேபோல், கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களை கூட விட்டுவைக்காமல் கலாய்த்து வருகிறார்.
இன்று மாலை ரஜினியின் ஜெயிலர் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ள நிலையில், ஒரே ட்விட்டில் சூப்பர் ஸ்டார் ரசிகர்களை அலற வைத்துள்ளார் ப்ளூ சட்டை. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டார் தான் கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருகிறார். ஆனால், கடந்த சில வருடங்களாக அவரது படங்கள் எதுவும் சரியாக வசூலிக்கவில்லை. குறிப்பாக தர்பார், அண்ணாத்த படங்கள் படுதோல்வியடைந்தன.
இந்நிலையில் தற்போது கோலிவுட்டின் ஸ்டார் வேல்யூ மொத்தமாக மாறிவிட்டது. ரஜினிக்கு ரசிகர்களிடம் வாய்ஸ் இருந்தாலும், பாக்ஸ் ஆபிஸில் ரொம்பவே தடுமாறி வருகிறார். இதனிடையே இருக்கும் இடம் தெரியாமல் இருந்த கமல் கூட, விக்ரம் படம் மூலம் வெறித்தனமாக கம்பேக் கொடுத்தார். அதேபோல், அஜித்தும் துணிவு திரைப்படத்தின் மூலம் தனது மார்க்கெட்டை சரிசெய்துவிட்டார்.
இன்னொரு பக்கம் விஜய் தான் ஆல் ஏரியாவிலும் கில்லி என வசூலில் மாஸ் காட்டி வருகிறார். மாஸ்டர், பீஸ்ட், வாரிசு என கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான படங்கள், ரொம்பவே ஈஸியாக பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூலித்தன. அடுத்து வரவிருக்கும் லியோ பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பாக்ஸ் ஆபிஸ் தகவல்களை வைத்துகொண்டு ப்ளூ சட்டை மாறன் ஒரு பட்டியலிட்டுள்ளார்.

அதில் வணீகரீதியாக வெற்றிக் கொடுக்கும் டாப் 4 ஹீரோக்களின் பெயரை அறிவித்துள்ளார். அதன்படி விஜய் முதல் இடத்திலும், கமல்ஹாசனும் இரண்டாம் இடமும் பிடித்துள்ளனர். மூன்றாவதாக அஜித்தும், சூப்பர் ஸ்டார் ரஜினி 4வது இடம் பிடித்துள்ளார் எனவும் ப்ளூ சட்டை மாறன் லிஸ்ட் போட்டுள்ளார். இதனைப் பார்த்த விஜய் ரசிகர்கள், இனி தளபதி தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
ஆனால், ரஜினி ரசிகர்களோ ப்ளூ சட்டை மாறனிடம் சண்டை செய்து வருகின்றனர். ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ள நேரத்தில், ரஜினியை டார்க்கெட் செய்து ட்ரோல் செய்வதாக கூறிவருகின்றனர். அதேபோல், கமல், அஜித் ரசிகர்களும் ப்ளூ சட்டை மாறனுக்கு இது தேவையில்லாத வேலை என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











