twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆன்டி இண்டியன் படத்தை ஏன் டார்கெட் பண்றீங்க… ஆதம் பாவா காட்டம் !

    |

    சென்னை : ப்ளூ சட்டைமாறன் முதன் முறையாக இயக்கிய திரைப்படம் ஆன்டி இண்டின்.

    Recommended Video

    CENSOR BOARD ஐ அவர்கள் ஆக்கிரமித்துள்ளனர் | Producer Adham Bava Chat p-02 | Filmibeat Tamil

    இந்த திரைப்படத்திற்கு சென்சார் போர்டு 38 கட் கொடுத்தது மட்டுமல்லாமல் படத்திற்கு ஒட்டுமொத்தமாக தடையும் விதித்துள்ளது.

    இதுகுறித்து மூன் பிச்சர்ஸ் தயாரிப்பாளர் ஆதம் பாவாவிடம் மேற்கொண்ட நேர்காணலில் பல தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

    கேள்வி : இந்த திரைப்படத்திற்கு காவி தலையீடு இருக்குனு நீங்க நினைக்கிறீங்களா ?

    கேள்வி : இந்த திரைப்படத்திற்கு காவி தலையீடு இருக்குனு நீங்க நினைக்கிறீங்களா ?

    பதில் : நிச்சயமா, அதுதான் 38 கட்டுலையே தெரியுதே. ஆன்டி இண்டியன் திரைப்படத்தை மட்டும் ஏன் டார்கெட் பண்றீங்க. இந்த படத்தில் மதவாதிகள் வருவார்கள், பக்தர்கள் வருவார்கள், ஆனால் மதம் வராது இது கற்கனை கதை. இந்த திரைப்படத்திற்கு அனுமதி கொடுத்தா மேலிடம் நம்மை தூக்கிவிடும் என்ற அச்சம் சென்சார் போர்டு அதிகாரிகளுக்கு இருக்கலாம் அதனால் அனுமதி கொடுக்கல.

    கேள்வி : ஆன்டி இண்டியன் திரைப்படம் ஒரு சமூக பொறுப்புள்ள திரைப்படமா?

    கேள்வி : ஆன்டி இண்டியன் திரைப்படம் ஒரு சமூக பொறுப்புள்ள திரைப்படமா?

    பதில் : இல்ல அப்படி சொல்ல முடியாது, ஒரு சம்பவம் குறித்து நடக்கும் பின்னணி விஷயங்களை இத்திரைப்படம் விளக்குது. இதுதான் நடக்குதுனு பொட்டில் அடித்தபடி சொல்லும் ஒரு படம். மேலும், அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும் படிதரமான திரைப்பட இத்திரைப்படம் இருக்கும்.

    கேள்வி : ஆன்டி இண்டியன் படத்தை ஒடிடியில் ரிலீஸ் பண்ணுவீங்களா?

    கேள்வி : ஆன்டி இண்டியன் படத்தை ஒடிடியில் ரிலீஸ் பண்ணுவீங்களா?

    பதில் : ஒடிடி தளத்திலிருந்து அழைப்புகள் வந்தன. ஆனால், எதாவது ஒரு சர்டிபிகேட் கேக்றாங்க, அதாவது ஏ அல்லது யூ சர்டிபிகேட். ஆனால், நாங்க சர்டிபிகேட் வாங்கி இந்த படத்தை திரையரங்கில் வெளியிடவேண்டும் என்ற முடிவில் இருக்கிறோம். இந்த படத்தில் மக்கள் மத்தியில் மக்களோடு மக்களாக பார்க்க நாங்கள் என ஆசைப்படுகிறோம்.

    கேள்வி : உங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன ?

    கேள்வி : உங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன ?

    பதில் : நீதிமன்றம் திறந்த உடன் முதல் வழக்காக இதை பதிவு செய்ய உள்ளோம். இந்த திரைப்படத்தில் இந்து தெய்வங்களை இழிப்படுத்தியோ, இந்து மதத்தை கொச்சைப்படுத்தியோ எந்த காட்சியும் இல்லை என்பதை நீதிமன்றத்திற்கு தெளிவுபடுத்துவோம். நாங்கள் நீதிமன்றத்தை முழுமையாக நம்புகிறோம். எந்தவிதமான மியுட்டோ, கட்டோ இல்லாமல் இந்த திரைப்படத்தை நிச்சயம் மக்களிடம் கொண்டு சேர்ப்போம் என்று நம்புகிறோம் என்று தயாரிப்பாளர் ஆதம் பாவா பதிலளித்தார்.

    English summary
    Blue Sattai Maran anti indian movie producer adham bava special interview
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X