ப்ளூ சட்டை மாறனின் ஆன்டி இந்தியன்… எப்போ ரிலீஸ் தெரியுமா?
சென்னை : ப்ளூ சட்டை மாறனின் ஆன்டி இந்தியன் திரைப்படம் டிசம்பர் 3ந் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஆன்டி இந்தியன்' திரைப்படத்தில் 38 கட் கொடுத்து, தணிக்கைக் குழு அப்படத்தை நிராகரித்தது.
ஆனால், நீதிமன்றத்தை நாடி எந்த கட்'டும் இல்லாமல் தணிக்கைச் சான்றிதழ் பெற்றார் இயக்குனர் ப்ளூ சட்டை மாறன்.
ஆண்டி இந்தியன்
யூடியூப்பில் பிரபல சினிமா விமர்சகராக வலம் வரும் ப்ளூ சட்டை மாறன், ஆன்டி இந்தியன் படத்தின் மூலம் இயக்குநராகியுள்ளார். 'ஆடுகளம்' நரேன், ராதாரவி உள்ளிட்டவர்கள் நடித்திருக்கிறார்கள். ஆதம் பாவா தயாரிப்பில் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பதோடு இசையமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

யு/ஏ சான்றிதழ்
இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் டிரெய்லர் வெளியாகி வசனங்கள் கவனம் ஈர்த்தன. அதில் ப்ளூ சட்டை மாறன் இறந்து போகவே, அவரை இந்து முறைப்படி அடக்கம் செய்வதா, இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்வதா அல்லது கிருத்துவ முறைப்படி அடக்கம் செய்வதா என போட்டி நடக்கிறது. இறுதியில் எந்த முறைப்படி அடக்கம் செய்தார்கள் என்பதுதான் படத்தின் கதை .

டிசம்பர் 3ந் தேதி ரிலீஸ்
படத்தை இயக்கியது மட்டுமல்லாமல் படத்தில் ப்ளூ சட்டை மாறனும் நடித்துள்ளார் என அறிவிக்கப்பட்ட நிலையில், மாறன் ஒரு இடத்திலும் டிரைலரின் தோன்றவில்லை. இந்த நிலையில், ஆன்டி இந்தியன் திரைப்படம் டிசம்பர் 3ந் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நீதிமன்றத்தை நாடினர்
முன்னதாக ஆன்டி இந்தியன் திரைப்படத்திற்கு 38 கட்டுகள் கொடுத்த தணிக்கை குழுவினர். இறுதியில் ஆன்டி இந்தியன் திரைப்படத்தை நிராகரித்தனர். பின்னர் நீதிமன்றத்தை நாடிய மாறன் மற்றும் தயாரிப்பு தரப்பு ,அங்கு அனுமதி பெற்று மீண்டும் சென்சார் செய்யப்பட்டு தற்போது வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











