Kudumbasthan Blue Sattai Maran Review: குடும்பஸ்தன் விமர்சனம்.. அக்கு அக்காக பிரித்த ப்ளூ சட்டை மாறன்

சென்னை: அறிமுக இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், குடும்பஸ்தன். இன்று வெளியாகியுள்ள இந்தப் படத்தின் மீது ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. படத்தின் டிரைலர் பலரையும் கவர்ந்திருந்தது. இந்நிலையில் படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தைத் தெரிவித்துள்ளார். அது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், " படத்தின் ஆரம்பத்தில் கதாநாயகன் அவசர அவசரமாக கதாநாயகியை சாதி மறுப்புத் திருமணம் செய்கின்றார். இரு வீட்டிலும் எதிர்ப்பு இருந்தாலும், கடைசியாக கதாநாயகன் குடும்பத்துடன் இணைந்து வாழ்கின்றார்கள். ஹீரோவுக்கு ஒரு அக்கா, அவரையும் வசதியான இடத்தில் திருமணம் செய்து வைத்துள்ளார்கள். பெற்றோர்களுக்கும் சரியான வருமானம் இல்லை. எனவே, ஹீரோவின் வருமானத்தை நம்பிதான், மொத்த குடும்பமும் உள்ளது. அக்கா வீட்டுக்காரர் எப்போதுமே ஹீரோ குடும்பத்தை மட்டம் தட்டிக் கொண்டே இருப்பார்.

manikandan kudumbasthan review blue sattai maran kudumbasthan

இந்த நெருக்கடியான சூழலில் கதாநாயகி, தான் யுபிஎஸ்சி தேர்வு எழுதப் போகின்றேன், லேப்டாப் வேண்டும் என்கிறார். அம்மா ஆன்மீக சுற்றூலா போக பணம் வேண்டும் என்கின்றார். அப்பா வீட்டை பழுது பார்க்கவேண்டும் என்கின்றார். எல்லாவற்றிக்கும் சரி எனச் சொல்கின்றார், ஹீரோ. இந்த நெருக்கடியான சூழலில் ஹீரோவுக்கு வேலை போகின்றது. தனக்கு வேலை போன விஷயம் அக்காவின் கணவருக்கு தெரியக்கூடாது என நினைக்கின்றார். இது இல்லாமல், தனது குடும்பம் நடத்த கடன் வாங்குகின்றார். கடன் நாளுக்கு நாள் அதிகமாவதால் என்ன நடக்கின்றது, என்பதுதான் கதை.

manikandan kudumbasthan review blue sattai maran kudumbasthan

சுவாரஸ்யம்: கதையாக பார்த்தால், இது மிகவும் சீரியஸான கதைதான். ஆனால் அந்த சீரியஸான கதையை வழக்கம்போல், குடும்பதைக் காப்பாற்ற, கதாநாயகன் எவ்வளவு சிரமப்படுகின்றார் என்பது போன்ற காட்சிகளை வைக்காமல், படம் முழுக்க காமெடிக் காட்சிகளாகவே படத்தை நகர்த்திச் சென்றுள்ளனர். ஒரு அறிமுக இயக்குநர், இவ்வளவு சிக்கலான கதையை இந்த அளவுக்கு சுவாரஸ்யமாக கொடுத்தது, ஆச்சரியமாக இருந்தது. படம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்க காரணமே, படத்தின் டயலாக் தான். படத்தில் கதாபாத்திரத் தேர்வும் நடிப்பும் சிறப்பாக இருந்தது. பெரும்பாலும் நக்கலைட்ஸ் டீம் தான் நடித்துள்ளார்கள்.

manikandan kudumbasthan review blue sattai maran kudumbasthan

சிறப்பு: படம் முழுக்க காமெடி ஒரே மாதிரி இல்லாமல், பல வகைகளில் கொடுத்திருந்தார்கள். படம் முழுக்க கலகல எனக் கொண்டுபோய்விட்டு, ஒரு கட்டத்தில் ஹீரோ வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையிடம் பேசுவதைப் போல் ஒரு காட்சி இருக்கும். அந்தக் காட்சிக்கு தியேட்டரே நிசப்தம் ஆகிவிட்டது. அந்த அளவிற்கு மிகவும் சீரியஸான சீனாக அது இருந்தது. அதன் பின்னர், மீண்டும் காமெடி, கலகலப்பு என ஜாலியாக படம் போனது. இரண்டு காரில் போவதைப்போல காட்சி இருக்கின்றது. இரண்டுமே சிறப்பாக உள்ளது. ஒன்று சீரியஸாக, மற்றொன்று காமெடியாக என சிறப்பாக இருந்தது. படம் முழுவதும் காமெடியாகப் போய்விட்டது.

manikandan kudumbasthan review blue sattai maran kudumbasthan

குறை: படத்தின் குறை என்று சொல்லவேண்டும் என்றால், ஆரம்பத்தில் ஹீரோ கல்யாணம் செய்கின்றார், குடும்ப வாழ்க்கைக்குள் செல்கின்றார், அதனால் அவருக்கு கடனும் கஷ்டமுமாக இருக்கின்றார், அதை எப்படி அவர் எதிர்கொள்ளப்போகின்றார் என காட்சிகளை அமைத்திருந்தனர். ஆரம்பத்தில் கதை எதை நோக்கி போகின்றது என தெரிவதற்கே நீண்ட நேரம் எடுத்துக் கொண்டது.

manikandan kudumbasthan review blue sattai maran kudumbasthan

எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என இருப்பவர்களுக்கு மத்தியில், இப்படித்தான் வாழ்வேன் என வாழ்பவனின் கதையாக இதைக் கொண்டு போயிருந்தால், இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இதனால் இரண்டாம் பாதியில் கொஞ்சம் தொய்வு இருந்தது. படமும் கொஞ்சம் லென்த். குடும்பத்தோடு பார்க்க சிறப்பான படம். அனைவருக்கும் இந்தப் படம் கனெக்ட் ஆகும்.

manikandan kudumbasthan review blue sattai maran kudumbasthan

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X