Vijay: ஜனநாயகன் படத்தின் ஃபேன் மேட் போஸ்டர்.. பாராட்டித் தள்ளிய ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ஜனநாயகன். இந்தப் படம் திரையுலகில் விஜய்யின் கடைசி படம் என அறிவித்துள்ளார். அதன் பின்னர் முழு நேர அரசியலில் களமிறங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இப்படியான நிலையில் கடந்த 26ஆம் தேதி அதாவது குடியரசு தினத்தில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படியான நிலையில் ஷைனு மாஷ் என்ற ரசிகர், படத்திற்காக தானே ஒரு போஸ்டரை உருவாக்கி தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. மேலும், இது தொடர்பாக ப்ளூ சட்டை மாறன், பாராட்டி பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், " ஒரிஜினல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை விட இப்படியான fan made posters சிறப்பாக உள்ளன. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்தான் ஒரு படத்தின் சிறந்த., முதல் இம்ப்ரசனை தர வேண்டும். ஆனால்.. பலகோடி செலவில் எடுக்கப்படும் பெரிய ஸ்டார்களின் படங்களின் FLP கூட பெரும்பாலும் ஏனோதானோ என்றுதான் இருக்கின்றன. நடிகர்களின் முகத்தை மட்டும் வைத்து மற்ற அனைத்தையும் ஃபோட்டோஷாப் போன்ற வேலைகளை செய்கிறார்கள். அதில் ஷைனு மாஷ் இங்கே செய்துள்ள அளவு நேர்த்தி இல்லை.

நடிகர்களை அழைத்து நல்ல அவுட்டோர் பின்னணியில் ஃபோட்டோக்களை எடுக்கலாம் அல்லது பக்காவான ஃபோட்டோஷூட் செய்யலாம். அதில் என்ன பிரச்னை இவர்களுக்கு? உதாரணத்திற்கு குட் பேட் அக்லி போஸ்டர்.. செஞ்சி வச்சது போலதான் இருந்தது. ஜனநாயகன் 2nd look poster இல் சாட்டையின் நீளமே பத்தடிக்கு இருப்பது போல டிசைன் செய்துள்ளனர். அப்படி ஒரு சாட்டையை சுழற்ற முடியுமா? அதை எடுத்து சுழற்றுவதற்குள்..எதிரில் இருப்பவர் தப்பித்து ஓடி வெளிநாட்டுக்கே போய் விடுவார்.

ஷைனு மாஷ்: எங்க வீட்டுப்பிள்ளை படத்தின் நான் ஆணையிட்டால் பாடலில் MGR கையில் உள்ள சாட்டையின் நீளத்தையோ அல்லது பாஜக அண்ணாமலையின் சாட்டையையோ பார்த்திருக்க வேண்டாமா? அட்லீஸ்ட் அந்த சாட்டையின் Resolution ஐ ஆவது பக்காவாக செய்திருக்கலாம். இனியாவது இப்படியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை நேர்த்தியாக வெளியிடுங்கள் அல்லது ஷைனு மாஷ் போன்ற திறமையாளர்களிடம் அந்த வேலையை குடுங்கள். விஜய்யின் அரசியல் வருகையை.. நாளிதழ் பின்னணியில் இப்படி சிறப்பாக டிசைன் செய்திருப்பது சிறப்பு. இதையே ஜனநாயகன் படத்திற்கு பயன்படுத்தலாம்" என பதிவிட்டுள்ளார்.

ஜனநாயகம் ஒழிப்பேன்: மேலும் இவரது பதிவுக்கு இணையவாசிகள் சிலர் கமெண்ட் செய்திருந்தனர். அதற்கு பதில் அளிக்கும்போது ஃபேன் மேட் போஸ்டருக்கு ஆதரவாகத்தான் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, ஒருவர், 'Fan made போஸ்டருமே அவ்ளோ சிறப்பா இல்லையேன்னே. டக்குனு பார்த்தா "ஜனநாயகம் ஒழிப்பேன்" ங்கறது தான் மனசுல பதியுது. அப்றம் உத்து பார்த்தப்பறம் தான் அது நியூஸ் பேப்பர்.. இது நியூஸ்.. அண்ணன் தான் நியூஸ்மேக்கர் என்பதெல்லாம் பிடிபடுது. இதிலும் குற்றங்கள் இருக்குண்ணே' என பதிவிட்டுள்ளார். அதற்கு, " தினமலர் பாணியில் ஒற்றை வார்த்தை தலைப்பு. ஆனால் டிசைனில் இந்தளவு நேர்த்தி இருப்பதை பாராட்டலாம்" என பதிவிட்டுள்ளார்.

2026 இலக்கு: அதேபோல் மற்றொருவர், 'பாஜக அண்ணாமலையின் சாட்டையையோ பார்த்திருக்க வேண்டாமா? இதையே காரணமா வச்சி பி டீம்னு சொல்லிடாதீங்க 😉' என்ற பதிவுக்கு, "பாக்கத்தான போறோம்" எனவும், மற்றொருவர், 'இப்பொழுது நாங்கள் படம் சம்பந்தப்பட்ட போஸ்டர்களையோ, செய்திகளையோ பெரிதாக எதிர்பார்ப்பதில்லை. நோக்கம் முழுக்க 2026 மட்டுமே. எங்கள் தளபதியின் மக்களுக்கான ஜனநாயகத்திற்காக காத்திருக்கின்றோம்" என தெரிவித்ததற்கு, "முன்னணி நடிகர்களின் போஸ்டர்கள் சிறப்பாக இருக்க வேண்டுமென பொதுவான ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள்" என பதிவிட்டுள்ளார். இவரது இந்தப் பதிவு பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.



Click it and Unblock the Notifications











