மன்சூர் மட்டும் தக்காளி தொக்கா?.. மனிஷாவுக்கு குஷ்பு குரல் கொடுப்பாங்களா? ப்ளூ சட்டை மாறன் கேள்வி!
சென்னை: மன்சூர் அலி கான் நடிகை திரிஷாவை ஆபாச தொனியில் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், அதற்காக மன்சூர் அலி கான் மன்னிப்பும் கேட்டு விட்டார். நடிகை திரிஷா ட்வீட் போட்ட உடனே மாளவிகா மோகனன், லோகேஷ் கனகராஜ், குஷ்பு உள்ளிட்ட பல பிரபலங்கள் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். நடிகர் சங்கமும் மன்சூர் அலி கானுக்கு கண்டனம் தெரிவித்தது.
நடிகை குஷ்பு தேசிய மகளிர் ஆணையம் சார்பாக நடவடிக்கை எடுக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டேன் என பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில், மனிஷா யாதவ் இயக்குநர் சீனு ராமசாமி பற்றி பதிவிட்டுள்ள கருத்துக்கு யாருமே ரியாக்ட் செய்யவில்லையே ஏன்? என்கிற கேள்வியை ப்ளூ சட்டை மாறன் எழுப்பி உள்ளார்.
பற்ற வைத்த பிஸ்மி: மன்சூர் அலி கான் பேசியது தவறு என்றும் ஒரு நடிகைக்கு எதிரான அநீதி என்றும் பலரும் குரல் எழுப்பிய நிலையில், சினிமாவில் உண்மையாகவே பல நடிகைகளுக்கு இதை விட மோசமான பாதிப்புகள் நடக்கிறதே அதை பற்றியெல்லாம் யாரும் கேட்க மாட்டீங்களா? நடிகை மனிஷா யாதவுக்கு இடம் பொருள் ஏவல் படத்தின் ஷூட்டிங்கின் போது கொடைக்கானலில் இயக்குநர் சீனு ராமசாமி பாலியல் தொல்லை கொடுத்தார் என்றும் ஒரு வாரத்திற்கு மேல் அந்த படத்தில் நடிக்க முடியாது என அவர் விலகியது குறித்தும் பேசி பகீர் கிளப்பினார்.
மோசமாக நடத்தியவர்: மனிஷா யாதவ் சினிமாவை விட்டு விலக நான் காரணமில்லை என்றும் மனிஷாவே எனக்கு நன்றி சொல்லியிருக்கார் பாருங்க என வீடியோ ஒன்றை சீனு ராமசாமி ஷேர் செய்ய அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மோசமாக நடத்தியவருடன் ஒரு போதும் நடிக்க மாட்டேன் என்றும் ஒரு குப்பைக் கதை ஆடியோ வெளியீட்டு விழாவில் அனைவருக்கும் நன்றி சொன்னது போலத்தான் உங்களுக்கும் சொன்னேன் சீனு ராமசாமி என மனிஷா போட்ட போஸ்ட் பூகம்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

குஷ்புவுக்கு ப்ளூ சட்டை மாறன் கேள்வி?: இந்நிலையில், நடிகை திரிஷா போன்ற முன்னணி ஹீரோயின்களுக்கு ஆதரவாக பேசும் பத்திரிக்கை, செய்தி சேனல்கள், யூட்யூப் சேனல்கள்.. மனீஷா யாதவிற்கு ஆதரவாக பேசாதது ஏன்?
குஷ்பூ அவர்களே.. இதுகுறித்து சம்மந்தப்பட்ட நடிகையிடம் பேசி, தேசிய மகளிர் ஆணையம் சார்பாக விசாரிக்கவும். அவருக்கு துணை நிற்கவும். மன்சூர் அலி கான் மட்டும் என்ன தக்காளி தொக்கா?" என கேள்வி எழுப்பி உள்ளார்.


Click it and Unblock the Notifications











