கதை திருட்டு சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜே பாலாஜி படம்.. கடனில் தத்தளிப்பதாக உதவி இயக்குநர் கதறல்!
சென்னை: சூர்யாவை வைத்து ஆர்ஜே பாலாஜி இயக்கும் படத்தின் பூஜை நேற்று மாசாணியம்மன் கோயிலில் பக்தி பரவசமாக நடைபெற்றது. ஏற்கனவே அமீர்கானின் பிகே படத்தை உல்டா செய்து தான் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கினேன் என ஆர்ஜே பாலாஜியே கூறியிருந்தார். சூர்யா படம் எந்த படத்தின் காப்பியாக வரப்போகிறது என பலரும் இப்பவே கிண்டல் அடிக்க ஆரம்பித்துள்ள நிலையில், ஆர்ஜே பாலாஜி நடிப்பில் நாளை வெளியாகவுள்ள படத்தின் கதை தன்னுடைய கதை என இயக்குநராக போராடிக் கொண்டிருக்கும் நபர் புலம்பியபடி வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோ லிங்குடன் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில், இதுக்கு பதில் சொல்லுங்க என ஆர்ஜே பாலாஜி மற்றும் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபுவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமீபத்தில், இயக்குநர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா, மடோனா செபாஸ்டியன் நடித்த ஜாலியோ ஜிம்கானா படத்தின் பாடல்களை பத்திரிகையாளர் ஒருவர் எழுதிய நிலையில், அதை அப்படியே மாற்றி தனது பெயரை சக்தி சிதம்பரம் போட்டுக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அறிவுத் திருட்டு: பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் சினிமா படங்கள் உருவாகி வரும் நிலையில், இங்கே அறிவுத் திருட்டு அதிகளவில் நடைபெற்று வருவதாகவும், அதுவும் சில கம்பெனிகள் உங்களுடைய குறும்படங்களை அனுப்புங்கள் என சொல்லிவிட்டு அதன் பின்னர் அந்த போட்டிக்கான பரிசுத் தொகையை கொடுக்காமல் ஏமாற்றி, சில வருடங்கள் கழித்து அந்த ஷார்ட் பிலிமில் நல்ல கதையை சுட்டு படமாக்கி வருவதாகவும், சிலர் கதைகளை வாங்கி படித்து விட்டு, பிடிக்கவில்லை என சொல்லி விட்டு அந்த கதைகளை வேறு ஒருவரை வைத்து இயக்க வைப்பதாகவும் பஞ்சாயத்துகள் வெடித்து வருகின்றன.
ஆர்ஜே பாலாஜியின் சொர்க்கவாசல் திருட்டுக் கதையா?: "நாளை வெளியாகும் சொர்க்கவாசல் படம் இன்னொருவரிடம் இருந்து காப்பி அடிக்கப்பட்டதா? பதில் சொல்வார்களா தயாரிப்பாளர் S.R.பிரபுவும், ஹீரோ RJ பாலாஜியும்? சினிமா விமர்சனங்களுக்கு உடனடி தடைபோட துடிப்பவர்கள்.. இப்படியான கதை திருட்டு புகார்கள் வந்தால்.. மிகத்தாமதமாக அல்லது நடவடிக்கையே எடுக்காமல் இருப்பது ஏன்?" என இயக்குநர் கிருஷ்ஷின் வீடியோ லிங்கையும் ஷேர் செய்து ப்ளூ சட்டை மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சொர்க்கவாசல் என்னோட கதை: கிளை சிறை என்கிற டைட்டிலில் நான் எழுதிய கதையின் கருவை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு அனுப்பினேன். ஆனால், என்னுடைய கதை பிடிக்கவில்லை என ரிஜெக்ட் செய்துவிட்டனர். அதே கதை திங்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ஆர்ஜே பாலாஜியை வைத்து உருவாக்கி தற்போது ட்ரீம் வாரியர்ஸ் எஸ்.ஆர். பிரபு வெளியிடுகிறார் என இயக்குநர் புலம்பித் தள்ளியுள்ளார்.
என்னோட வேதனை: 2017ம் ஆண்டு சிறையில் நான் பட்ட வேதனை தான் இந்த படத்தின் கதையே என்றும் செல்வராகவன் திரும்ப திரும்ப இயக்குநர் சித்தார்த்திடம் இந்த கதையை நீதானா எழுதின என கேட்கும் வீடியோவையும் ஷேர் செய்து, சித்தார்த் இந்த கதையை எழுதவில்லை. இந்த கதை முழுவதும் என்னோட கதை என வீடியோ வெளியிட்டுள்ளார். நாளைய இயக்குநர் சீசன் 2வில் பங்கேற்ற பின்னர், சினிமாவுக்காக பல வருடங்கள் கஷ்டப்பட்டு கடனில் தவித்து வருகிறேன். நாளை என்னோட கதை தியேட்டரில் படமாக வரப்போகிறது என கதறியுள்ளார்.
விளக்கம் அளிப்பார்களா?: தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு இந்த படத்தை வாங்கி வெளியிடும் உரிமையை பெற்றுள்ளார். ஆர்ஜே பாலாஜி ஹீரோவாக நடித்துள்ளார். இயக்குநரின் குற்றச்சாட்டுக்கு இருவரும் விளக்கம் அளிப்பார்களா? சொர்க்கவாசல் படத்தின் இயக்குநர் சித்தார்த் என்ன சொல்லப் போகிறார் என கேள்விகள் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications











