தலைவர் விஜய் பலத்த மௌனம்.. அந்த விஷயத்துக்கு மட்டும் வாயே திறக்கலையே.. ப்ளூ சட்டை மாறன் கேள்வி!
சென்னை: நடிகர் விஜய் ஆன்லைன் அரசியல் செய்து வருவதாக பலரும் ட்ரோல் செய்து வரும் நிலையில், மின்சாரக் கட்டண உயர்வுக்கு எக்ஸ் தளத்தில் கூட தவெக தலைவர் கண்டனம் தெரிவிக்கவில்லையே என ப்ளூ சட்டை மாறன் கேள்வி எழுப்பியுள்ளார். சினிமாவே வேண்டாம் என மக்கள் பணி செய்ய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளேன் என விஜய் அறிவித்துள்ளார். கோட் மற்றும் தளபதி 69 படங்களை முடித்து விட்டு முழு நேர அரசியல்வாதியாக மாறவுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற தளபதி விஜய் கல்வி விருது விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஜய் நீட் பிரச்சனைக்கு எதிராக குரல் கொடுத்தார். மேலும், திமுக அரசுக்கு ஆதரவாக அவரது வாய்ஸ் இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன.

ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்திற்கும் நடிகர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இரங்கல் தெரிவித்தார். ஆனால், தமிழ்நாட்டு மக்களை அதிகம் பாதித்து வரும் மின் கட்டண உயர்வு குறித்து மின்சாரக் கண்ணா ஏன் பேசவில்லை என்கிற கேள்வியை ப்ளூ சட்டை மாறன் எழுப்பியுள்ளார்.
சினிமாவை தாண்டி அரசியலும்: திரைப்படங்களை விமர்சித்து வந்த ப்ளூ சட்டை மாறன் ஆன்டி இண்டியன் எனும் படத்தை இயக்கினார். அந்த படத்திலும் அரசியல் நய்யாண்டி தான் கதையாக இருந்தது. ஒரு பிணத்தை புதைக்க விடாமலும் மத அரசியல் மற்றும் சாதி அரசியல் எப்படி நடக்கிறது என்பதை மையப்படுத்தி அந்த படத்தை இயக்கினார். சினிமா பிரபலங்களை விமர்சித்து ட்வீட் போடுவது போல அரசியல் கருத்துக்களையும் விமர்சித்து வருகிறார் ப்ளூ சட்டை மாறன்.

மின்சாரக் கட்டண உயர்வு: தமிழ்நாட்டு மக்கள் தலையில் இன்னொரு சுமையாக அதிக மின் கட்டணம் விழுந்திருப்பதை எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கண்டித்து வருகின்றனர். மேலும், கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன. ஆனால், புதிதாக கட்சியை தொடங்கியுள்ள தவெக தலைவர் விஜய் அதுபற்றி கண்டுக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு சோஷியல் மீடியாவில் கிளம்பியிருக்கிறது.
விஜய் மெளனம்: "மின்சாரக்கட்டண உயர்வு சாமான்ய மக்களை பாதிக்குமென அரசியல் தலைவர்கள் கருத்து. பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம். த.வெ.க. தலைவர் விஜய் பலத்த மௌனம்." என மின்சார கண்ணா படத்தின் போஸ்டரையும் போட்டு ப்ளூ சட்டை மாறன் கலாய்த்துள்ளார். சமீபத்தில், நடிகர் விஜய் ரம்பாவை சந்தித்த நிலையில், மின்சார கண்ணா 2 வருமா? என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி ட்ரோல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











