இது நியாயமா?.. விஜய் ஆண்டனியை பார்த்து கேட்ட ப்ளூ சட்டை மாறன்.. என்ன விஷயம் தெரியுமா?

சென்னை: இசையமைப்பாளர்களான ஜி.வி. பிரகாஷ், விஜய் ஆண்டனி தொடர்ந்து சினிமாவில் ஹீரோக்களாக நடித்து வருகின்றனர். ஆனால், அவர்கள் நடிக்கும் படங்கள் பெரிதாக ஓடுவதில்லை. அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் அடுத்த படமாவது வெற்றிப் படமாக மாறிவிடும் என்கிற நம்பிக்கையில் நடித்து வருகின்றனர்.

குறைவான சம்பளத்தில் இவர்களை வைத்து படம் தயாரித்து வெற்றி பெற்று விடலாம் என தயாரிப்பாளர்களும் நினைத்து படங்களை எடுத்து நஷ்டமடைந்து வருகின்றனர். கோலி சோடா படத்தை இயக்கிய விஜய் மில்டன் சியான் விக்ரம், சமந்தாவை வைத்து எடுத்த பத்து என்றதுக்குள்ள படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், நீண்ட இடைவேளைக்குப் பிறகு விஜய் ஆண்டனியை வைத்து மழை பிடிக்காத மனிதன் படத்தை இயக்கினார்.

Blue Sattai Maran Vijay Antony OTT

விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடித்த அந்த திரைப்படம் இந்த மாதம் வெளியான நிலையில், அதற்குள் ஓடிடியில் இன்று வெளியாகி விட்டது. அதுதொடர்பாக ப்ளூ சட்டை மாறன் ட்வீட் ஒன்றை போட்டு கேள்வியெழுப்பி உள்ளார்.

சொதப்பும் விஜய் ஆண்டனி படங்கள்: இந்த ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் ரோமியோ மற்றும் மழை பிடிக்காத மனிதன் உள்ளிட்ட படங்கள் வெளியாகி உள்ளன. ரோமியோ படம் சுமாரான வரவேற்பை பெற்ற நிலையில், மழை பிடிக்காத மனிதன் சுத்தமாக செல்ஃப் எடுக்கவில்லை. விஜய் ஆண்டனி நடிப்பில் வரிசையாக வெளியாகும் படங்கள் தொடர்ந்து சொதப்பி வருவதால், அவர் நடிக்கும் படங்களை மக்கள் நம்பி தியேட்டருக்குச் சென்று பார்க்கும் சூழ்நிலையே இல்லை என்று சினிமா வட்டாரத்தில் பரவலான பேச்சுகள் அடிபட்டு வருகின்றன.

Blue Sattai Maran Vijay Antony OTT

மழை பிடிக்காத மனிதன் பஞ்சாயத்து: விஜய் மில்டன் இயக்கத்தில் இந்த மாதம் ஆகஸ்ட் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தின் முதல் காட்சியை பார்த்து விட்டு படத்தின் இயக்குநர் விஜய் மில்டன் இந்த படத்தின் அறிமுக காட்சியாக வரும் முதல் 1 நிமிடத்தை தான் இயக்கவே இல்லை என்றும் அது எப்படி படத்தில் இடம்பெற்றது என்றே தனக்கு தெரியவில்லை என்றார். அதன் பின்னர், அதற்கு தான் காரணம் இல்லை என விஜய் ஆண்டனி விளக்கம் கொடுத்திருந்தார். அந்த ஒரு நிமிட காட்சியும் உடனடியாக நீக்கப்பட்டது. ஆனாலும், அதன் பின்னரும் படம் ஓடவில்லை.

ப்ளூ சட்டை மாறன் கேள்வி: "தியேட்டரில் வெளியாகி 4 வாரங்களுக்கு பிறகு OTT யில் படங்கள் வரும். இதை 8 வாரங்களாக மாற்ற வேண்டுமென தியேட்டர் ஓனர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் ஆகஸ்ட் 2 ஆம் தேதி ரிலீஸான இப்படம்.. இரண்டே வாரத்தில் OTT யில் வந்துள்ளதாமே? இது நியாயமா?" என ப்ளூ சட்டை மாறன் தற்போது விஜய் ஆண்டனி படத்துக்கு எதிராக கேள்வி எழுப்பியுள்ளார்.

குவியும் கமெண்ட்ஸ்: 2 நாள் கூட ஓடாத படம் 2 வாரங்களில் ஓடிடிக்கு வருவதில் எந்தவொரு பிரச்சனையுமில்லை என்றும் நன்றாக தியேட்டரில் ஒரு மாதத்திற்கும் மேலாக ஓடும் படங்களைத்தான் 8 வாரமாவது தியேட்டரில் ஓட்ட வேண்டும் என தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர். இப்படி தியேட்டரில் காத்து வாங்கும் படங்கள் குறித்து யாரும் கண்டுக்க மாட்டாங்க என கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X